காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி, தங்கள் கூட்டணி பெயரை ‘INDIA' என அறிவித்தது.
இந்த நிலையில் அசாம் முதலமைச்சர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா, தனது ட்விட்டர் பயோவில் ‘அசாம் முதலமைச்சர், இந்தியா’ என இருந்த பகுதியை ‘அசாம் முதலமைச்சர், பாரத்’ என மாற்றியுள்ளார்.
மேலும் தனது பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ள அவர், “பாரதத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான "நாகரிக மோதல்" என எழுதியதோடு, இந்தியாவிற்குப் பதிலாக 'பாரதத்திற்கான பாஜக' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார்.
"ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து நம்மை விடுவிக்க நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காகப் போராடினார்கள், நாங்கள் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம்" என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் பல பாஜக ஆதரவாளர்கள் ‘INDIA' என்கிற வார்த்தையை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.