நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்த தி.மு.க.!

Should discus about Ban NEET
நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும்
Published on

ப்நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தனர்.

மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. குழுத் தலைவர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸைத் தாக்கல் செய்தனர்.

நீட் தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்பது குறித்தும், ஜந்தர் மந்தரில் போராடியவர்கள் மீது ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது குறித்தும் விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார்.

“நீட் தேர்வால் மருத்துவக் கல்வி கனவோடு உள்ள மாணவர்கள் இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் தொடர்ச்சியான தற்கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற பேரழிவைத் தரும் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும்.” என்று விதி 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை மாநிலங்களவையில் திருச்சி சிவா கொடுத்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com