மக்கள் பிரியாணிக்காக அலையும் தெருநாய்களா ? லாரன்ஸை வச்சு செஞ்ச சேரன் !

மக்கள் பிரியாணிக்காக அலையும் தெருநாய்களா ? லாரன்ஸை வச்சு செஞ்ச சேரன் !
Published on

விஜய் ஆதரவோடு திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகி மந்திரி ஆகி அடுத்து முதல் மந்திரி ஆகும் கனவோடு சமீபகாலமாக பல ஸ்டெப்களைப் போட்டுவரும் உடான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் அவரை வறுத்தெடுத்துள்ளார்.

ரஜினியின் அதிபயங்கர பக்தர் என்று காலந்தோறும் அறியப்படும் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் தற்போது விஜய் அடைந்திருக்கும் அரசியல் வெற்றியால் கடும் குழப்பத்துக்கு ஆளாகி தனது அரசியல் ஆதரவை விஜய்யை நோக்கி திருப்பியுள்ளார். மட்டுமின்றி திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கிவிடும் முயற்சியில் அடுத்தடுத்து பல பல்டிகள் அடித்துவருகிறார். ரஜினி அரசியலுக்கு அழைத்தபோதே தடுத்த அவரது அம்மா இப்போது அரசியலுக்கு போகச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக பல கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து வருகிறார்.

இந்நிலையில் மக்களுக்குத் தொண்டு செய்கிறேன் பேர்வழி என்று பல விளம்பரங்கள் செய்த நீங்கள் செய்த ஒரே ஒரு தொண்டையாவது ஆதாரத்துடன் காட்டுங்கள் என்று எதிர்க்குரல் எழுப்பு வருகிறவர்கள் அவர் பேசிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஓட்டுப்போடும் மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு மிகத் திமிராகப் பேசியிருக்கிறார் லாரன்ஸ்.

அந்த வீடியோவைப் பகிர்ந்து லாரன்ஸைக் கண்டித்திருக்கும் இயக்குநர் சேரன்,…

எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளணும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்.. இப்படிக்கு.. பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்…

என்று பதிவிட்டிருக்கிறார் சேரன்.

லாரன்ஸ் விவகாரத்தில் விஜய் அலெர்ட் ஆவாரா ?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com