பாரதிராஜாவுக்காக டெல்லி பயணத்தை தள்ளிவைத்த முதல்வர் விஜய்.. அரசு மரியாதையும் அறிவிப்பு

பாரதிராஜாவுக்காக டெல்லி பயணத்தை தள்ளிவைத்த முதல்வர் விஜய்.. அரசு மரியாதையும் அறிவிப்பு
Published on

சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை தனது 84 வது வயதில் அமரரானார். அவரது இழப்பையொட்டி படப்பிடிப்புகள், பிரிவியூ ஷோக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் முதல்வர் விஜய்யும் தனது காலைநேர டெல்லி பயணத்தை ஒத்திவைத்துவிட்டு அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உடல்நலம் குன்றியிருந்த பாரதிராஜா சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து மருத்துவ ஏற்பாடுகளுடன் நீலாங்கரை இல்லத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்துகொண்டிருந்த நிலையில்தான் இன்று காலமானார்.

அவரது மரணச் செய்தி அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமும் நீலாங்கரையை நோக்கி திரண்டு கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் முதல்வர் விஜய் பாரதிராஜாவுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை 10 மணிக்கு முதல்வர் டெல்லி செல்வதாக இருந்த நிலையில் அவர் தனது பயணத்தை சற்று ஒத்திவைத்துவிட்டு பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை செய்ததோடு மட்டுமின்றி மரியாதை செய்த கையோடு , பாரதிராஜாவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையோடு மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com