‘என் பாதை என்னவென்று தெரியும்; ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ - ராகுல் காந்தி
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, என் பாதை என்னவென்று தெரியும்; ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'எது வந்தாலும் என் கடமை அப்படியே தொடரும். இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்போம்' என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “உண்மை வெல்லும். என் பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன். எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.