நீண்ட காலப் பிரதமர் மோடி - 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!

 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on

மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிக நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சி புரிந்த பிரதமர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் நரேந்திர மோடி.

இதனையடுத்து, மத்திய அமைச்சரவை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சாதனை, மக்களின் நம்பிக்கை, ஜனநாயகப் பங்கேற்பு, பிரதமரின் தலைமைக்குக் கிடைத்த தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிப்பதாகவும் இந்திய வரலாற்றில் இது முக்கிய மைல்கல் என்றும் மத்திய அமைச்சரவை இன்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மே-26 அன்று பிரதமராகப் பதவியேற்ற மோடி, இன்றுடன் 4,399 நாள்களை நிறைவு செய்துள்ளார். மோடியின் அரசியல் பயணத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர், முதல் பொதுதேர்தலில் வெற்றி பெற்ற ஜவஹர்லால் நேரு 4,398 நாள்கள் பிரதமராக இருந்தார். அவரின் மகள் இந்திரா காந்தி 4,077 நாள்கள் பிரதமராக இருந்தார்.

அந்த இரண்டு சாதனைகளையும் மோடி இப்போது முறியடித்துள்ளார்.

நேருவிற்குப் பிறகு 60 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்துள்ள வரலாற்றுச் சாதனை இது.

logo
Andhimazhai
www.andhimazhai.com