சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர் தர்மன் வெற்றி!
சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற அரசு அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் எனும் தமிழர் வெற்றி பெற்றுள்ளார். அவர் அதிகபட்ச அளவாக 70.4 சதவீதம் வாக்குகளைப் பெற்று இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.
அவரையடுத்து, இங் காக் சொங் 15.72 சதவீத வாக்குகளும், டான் கியான் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றனர்.
வெற்றிபெற்றுள்ள தர்மன் ஏற்கெனவே துணை பிரதமராகப் பதவிவகித்துள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் ஜூரோங் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
நாட்டின் நிதி நிர்வாக அனுபவத்தில் நிதியமைச்சராக, கல்வி அமைச்சராக என - தனக்கு மற்றவர்களைவிட கூடுதல் அனுபவம் இருப்பதாகவும் அதற்காக தன்னைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும்வகையில் நடந்துகொள்ளப் போவதாக தர்மன் உறுதியளித்துள்ளார்.