
கருணாநிதி காலத்தில் திமுகவுக்காக தீவிர களப்பணியாற்றிய நடிகை குஷ்பு, பின்னர் காங்கிரஸில் குடியேறி அடுத்து பாஜக படியேறிய கதைகள் எல்லாம் புளித்துப்போனவை. அடுத்து அவர் விரைவில் விஜய் கட்சிக்கு விஜயம் செய்து திருச்சி கிழக்கை இலக்கு வைத்திருப்பதுதான் லேட்ட்ஸ்ட் அன்ட் ஹாட்டஸ்ட்.
விஜய் முதல்வரான இந்த மூன்றுவார காலத்துக்குள் இரண்டுமுறை அவரை சந்திக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார் குஷ்பு. முதல்முறை சென்றது முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவிக்க. அந்த சந்திப்புக்குப் பின் தான் இருப்பது பா.ஜ.கவில் என்பதைக் கூட மறந்து விஜய்யை வானளாவ புகழ்ந்து பேட்டி அளித்தார் குஷ்பு.
தற்போது இரண்டாவது முறையாக, தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கு குடும்ப சமேதராக விஜய்யை சந்தித்திருக்கிறார் குஷ்பு.
இந்த இரு சந்திப்புகளின்போதும் குஷ்புவை தனது கட்சியில் வந்து சேர்ந்துகொள்ளும்படி உரிமையோடு அழைத்திருக்கிறார் விஜய். இந்த அழைப்புக்கு ஒரு உள்நோக்கமும் இருக்கிறது என்கிறார்கள். திருச்சி கிழக்கில் இன்னொரு 'கலைத்துறை பிரமுகரை' வேட்பாளராக விஜய் நிறுத்தி சர்ப்ரைஸ் கொடுப்பார் என்கிறார்கள். நிச்சயம் அது சர்ச்சையாகவும் முடியலாம். அதே நேரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிற இன்னொரு தொகுதியில் குஷ்புவை நிறுத்தினால் சம்பவம் டேக் டைவர்ஷன் ஆகி எதிர்க்கட்சி ஆட்கள் வாயடைத்துப்போவார்கள் என்பது விஜய்யின் வியூகம்.
ஆக குஷ்பு மகளின் திருமணத்துக்கு விஜய் ஆஜராகும் சமயம் தலைப்புச் செய்திகள் தீப்பிடிக்கும்.