ஜனநாயகன் உள்ளே… உதயநிதியின் கமல்,ரஜினி காம்போ வெளியே…

ஜனநாயகன் உள்ளே… உதயநிதியின் கமல்,ரஜினி காம்போ வெளியே…
Published on

தேர்தல் முடிவுகளில் தவெகவின் கை ஓங்கியிருக்கும் நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக படாதபாடு படுத்தப்பட்ட ‘ஜனநாயகன்’ இன்னும் ஒரு சில தினங்களில் திரையரங்குகளை திருவிழா கோலத்துக்கு கொண்டு செல்லும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே சமயம் திமுகவின் இறங்குமுகத்தால் திரையுலகில் வேறு சில திருப்பங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் அடுத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வரை கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.

இப்படி ரெட்ஜெயன்ட் நிறுவனம் ஓய்வெடுக்கும் பட்சத்தில் அதிக கஷ்டத்துக்கு ஆளாகவிருப்பவர் ஆண்டவர் கமல்தாம்.

‘விக்ரம்2’ படத்திலிருந்தே தனது முதலாளியாக உதயநிதியை மானசீகமாக ஏற்றுக்கொண்டு சினிமாவில் நன்கு கல்லா கட்டிக்கட்டிக்கொண்டு வந்த கமல் அடுத்து அதிகபட்ச சம்பாத்தியத்துக்கு தயாராகவிருந்தது ரஜினியுடன் அவர் இணையவிருந்த ரெட்ஜெயன்ட் தயாரிப்பைத்தான். சுமார் 800 கோடி பட்ஜெட்டில் தயாராகவிருந்த அப்படத்தை இனி உதயநிதி ரிஸ்க் எடுத்து பண்ணுவாரா என்பது சந்தேகமே என்கிறார்கள்.

ஏற்கனவே அப்படத்தின் இயக்குநரை முடிவு செய்வதில் தொடங்கி ஏகப்பட்ட குழப்பங்களை தன்வசம் கொண்டுள்ள அப்படம் இனி டேக் ஆஃப் ஆவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. அப்படி படம் டிராப் ஆகும் பட்சத்தில் ரஜினி அடையப்போகும் சந்தோஷத்திற்கும் அளவே இல்லை என்பதுதான் நிஜநிலவரம்.

ஆண்டவருக்கே சோதனையா?

பி.கு : தேர்தல் தோல்வி குறித்து கமல் அறிக்கை வெளியிட்டால் அது இப்படி இருக்கக்கூடும்.

வெற்றி என்பதை வெற்றி என்றோ தோல்வி என்பதை தோல்வி என்றோ சார்ந்தோர் புரிந்துகொள்ளத்தேவை இல்லை என்னும் அதேவேளை ஜெயம் என்பது பயமாகவோ,பயம் கொண்டதால் பதுங்கிக்கொள்ள தேவையில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com