உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் பேச்சு
உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் பேச்சு

என் தலையைச் சீவ ஒரு கோடியா... 10 ரூபா சீப்பு போதும் - கருணாநிதி பாணியில் உதயநிதி பதில்

சனாதன சர்ச்சையில் தன்னுடைய தலைக்கு விலை வைத்தது பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் கூறினார்.

தூத்துக்குடியில் ஒருங்கிணைக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பேசினார்.

அப்போது, “ சென்னையிலே நேற்றுமுன்தினம் ஒரு மாநாடு... அதன் பெயரே சனாதன ஒழிப்பு மாநாடுதான்... என்ன பேசினேன்... கொசு, மலேரியா, காலரா, டெங்குவை ஒழிச்சோமோ அப்படி சனாதானத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசினேன். இப்படிப் பேசிட்டு வெளியே போனா நிறைய பேர் வயித்தெரிச்சல் வரும்னு சொன்னேன். அது நடந்திருக்கு. இந்தியா முழுக்க என் மேல புகார்கள்...

இன்னைக்கு ஒரு சாமியார் என்தலைக்கு விலை வச்சிருக்கார்... 10 கோடி ரூபாய்... உதயநிதி தலையை வெட்டிக் கொண்டுவந்தா... சொன்னது ஒரு சாமியார்... என் தலை மேல அப்படியென்ன உனக்கு ஆசை... இன்னொன்னு நீ சாமியார்தானே உன்கிட்ட எப்படி 10 கோடி ரூபா இருக்கும்... நீ சாமியாரா டூப்ளிகேட் சாமியாரா? என் தலைக்கு எதுக்கு10 கோடி ரூபா... 10 ரூபா சீப்பு இருந்தா நானே சீவிட்டு போயிடுவேன்.

இதேமாதிரி கலைஞர் தலைய சீவினா ஒரு கோடி ரூபாய்னு தரேன்னு சொன்னார் ஒரு சாமியார்... கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா, நீ நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை நானே சீவிக்க முடியாது. அவர் வழியில்தான்... பெரியார், அம்பேத்கர், கலைஞர், பேராசிரியர் வழியில்திமுக சனாதனத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கும். நான் சொன்னதை பாஜக திரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறது. இந்துவிரோதக் கட்சியென சொல்கிறார்கள். யார் இந்துவிரோதக் கட்சி?.

நான் இனப்படுகொலையைத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். குஜராத்திலும் மணிப்பூரிலும் இனப்படுகொலையை நடத்திக்கொண்டு இருப்பது யார்... பாஜக, மோடியும் அமித்ஷாவும்தான்... ” என்று உதயநிதி பேசினார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com