'ஞானேஷ்குமாரை தேர்வு செய்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்கவேண்டும்.'

Thol.Thirumaavalavan
தொல்.திருமாவளவன்
Published on: 

டெல்லியில் நடைபெற்றுவரும் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்த காங்கிரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2023ஆம் ஆண்டு மோடி அரசால் இயற்றப்பட்ட எஸ்.ஐ.ஆர். தொடர்பான சட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இது ஒரு இக்கட்டான அரசியலமைப்பு பிரச்னையை உருவாக்கியுள்ளது. கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்ட செயலை பார்க்கும்போது, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல்களின் நம்பகத்தன்மை மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

தற்போது நடைபெற்ற தேர்தல்கள் சட்டவிரோதமானவை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது நியாயமானதுதான். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது கடினம்.

பீகார், தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வி.சி.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கான தெளிவை உச்சநீதிமன்றம் இன்னும் வழங்காமல் உள்ளது.

இந்நிலையில், இந்திய கூட்டணி எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்:

1) தலைமைத்தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்காக அவர் பதவி விலகவும், அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுக்க வேண்டும்.

2) தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் நடவடிக்கையை கைவிட கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

3) நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிட கோர வேண்டும்.

4)நீக்கப்பட்ட 13 கோடி வாக்குகளை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

5) வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க கோரிக்கை விடுக்க வேண்டும்.

6) தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஞானேஷ்குமாரை தேர்வு செய்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

7) தலைமைத் தேர்தல் அதிகாரி, மற்ற தேர்தல் ஆணையர்கள் நடைமுறை, 2023-யை திரும்பப் பெற வேண்டும்.

8) ஜனநாயகத்தை பாதுகாக்க தேசிய அளவிலான போராட்டத்தை அறிவிக்க வேண்டும்."

இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com