மாற்று மதம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமாக இருப்பவர் கனல் கண்ணன். சில திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் தேதி டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
இதுதொடர்பாக, 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார், கனல் கண்ணனிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தம்மிடம் இருந்த வீடியோ தொடர்பான ஆதாரங்களை தாம் வழங்கியதாக தெரிவித்தார். இந்நிலையில், விசாரணை முடிந்து கனல் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆண்டு தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதால் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.