
தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வின் அவைத்தலைவர் பதவியில் இருந்துவரும் முன்னாள் எம்.பி. கோபால் இன்று தி.மு.க.வில் சேர்ந்தார்.
அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
அ.ம.மு.க. மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.கோதண்டபாணி ஆகியோரும் இன்று மதியம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அ.ம.மு.க. மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் என்.ஷோபனா நடராஜனும் கட்சி தாவியவர்களில் முக்கியமானவர்.
சோளிங்கர் தொகுதியில் பார்த்திபன் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், அத்தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் தி.மு.க.வில் ஐக்கியமாகியுள்ளார்.