வேட்பாளர் பட்டியல் வராமலே மனுத்தாக்கல் செய்த பா.ஜ.க. நிர்வாகி!

தஞ்சை மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் முரளிதரன்
தஞ்சை மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் முரளிதரன்
Published on

தமிழக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில், வேட்பு மனுவையே தாக்கல்செய்துவிட்டார், பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்!

அ.தி.மு.க. கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் முரளிதரன் வேட்பாளர் அறிவிப்பு வருவதற்கு முன்னரே இன்று வேட்பு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். 

அவர்தான் வேட்பாளர் என அதிகாரபூர்வமற்ற வகையில்கூட தலைவர்கள் யாரும் கூறவில்லை. இந்த நிலையில் எப்படி போட்டியிடுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தலைமை வாய்ப்பு கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் மனுத்தாக்கல் செய்கிறேன் என்றார். 

இன்று எனக்கு ராசி நன்றாக இருக்கிறது; இதனாலும் வேட்புமனு டெபாசிட் பணம் கட்டியிருக்கிறேன் என்றும் அவர் கூறினார். 

”இதுவரை அரசியலில் இப்படியான சூழல் இருந்ததில்லை; இக்கட்டான சூழல்... எல்லா கட்சிகளும் குழப்பத்தில் இருக்கின்றன. நாள் குறைவாக இருக்கிறது. மற்ற கட்சியெல்லாம் வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறான்.” என்றும் முரளிதரன் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com