தேர்தல் 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க. போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மொடக்குறிச்சி (செந்தில்நாதன்), சீர்காழி (வழக்கறிஞர் செந்தில்செல்வன்), கடையநல்லூர் (தி. மு. இராஜேந்திரன்), மதுரை தெற்கு (பூமிநாதன்) ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.
இதில் சீர்காழி தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்திலும் மற்ற தொகுதிகளில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று வைகோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சீர்காழி தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.