மேலூர் காங்கிரஸ் வேட்பாளரும் ஒருவழியாக அறிவிப்பு!

ம்ேலூர் வேட்பாளர் விசுவநாதன்
ம்ேலூர் வேட்பாளர் விசுவநாதன்
Published on

மதுரை மாவட்டம் மேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இழுபறியாக இருந்துவந்தது. இன்று மனுத்தாக்கலுக்குக் கடைசி நாள் என்பதால், எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கூட்டணியிலும் பெரும் பரபரப்பு நிலவிவந்தது. இந்நிலையில் மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பி. விசுவநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதையொட்டி சமூக ஊடகங்களில் வரவேற்பும் கிண்டலுமாக விமர்சனங்கள் குவிந்துவருகின்றன. எதிரணி வேட்பாளர் பெரியபுள்ளான் எளிதாக வெற்றிபெற்றுவிடுவார் என்பது அதில் முக்கியமானது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com