துரோகப் பட்டியல்தான் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருப்பது துரோகப் பட்டியல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். 

ஈரோடு, சித்தோட்டில் இன்று காலையில் பிரச்சாரம் செய்த அவர், தன் சமூக ஊடகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   

அதில், “தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அனைவரும் சேர்ந்து அமைத்துள்ளதுதான் தே.ஜ. கூட்டணி. பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ந்ததில்லை என்பதுதான் அவர்களின் ஒரே பதிவு!

*நீட், சிஏஏ, தேசிய கல்விக் கொள்கை, கீழடி, கோவை - மதுரை மெட்ரோ மறுப்பு, வரிப்பகிர்வில் வஞ்சனை என இவர்களிடம் இருப்பதெல்லாம் துரோகப் பட்டியல்தான்!

*ஆனால், நம்மிடம் இருப்பது சொல்லித் தீராத சாதனைப் பட்டியல், இன்னும் நாம் செய்யவுள்ள வாக்குறுதிகளின் பட்டியல்.” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com