
திருவாரூரில் நேற்றுமுதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு நெல்லை, பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.
மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நாகர்கோவிலில், கன் னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்காக ஸ்டாலின் வாக்கு கேட்கிறார்.
மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்.
ஞாயிறு காலையில் விருதுநகரில் சாத்தூர், இராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்காகவும், மாலையில் மதுரை, திருமங்கலத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் , மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்காகவும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.