
தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடும், போட்டியிடாத கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடைசி நேரம்வரை தொகுதி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்கள் இதில் தவறாமல் கலந்துகொண்டனர்.
வந்திருந்த அனைவரையும் மு.க.ஸ்டாலின் தனித்தனியாகக் கூப்பிட்டுப் பேசினார். பொதுவாகவும் கூட்டணியின் வெற்றியை மட்டுமே இலக்காக வைத்துச் செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “ நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி!
தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்…“#வெல்வோம்_ஒன்றாக!”” என்று குறிப்பிட்டுள்ளார்.