வேட்பாளர்... விற்பனை- சொந்தக் கட்சியைத் திட்டும் காங்கிரஸ் பெண் எம்.பி.!

Sathyamoorthi bhavan
சத்தியமூர்த்தி பவன்
Published on

காங்கிரஸ் கட்சியில் விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே கூறியிருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

கரூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிதான் இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்த அவரின் சமூக ஊடகப் பதிவு:

“ காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத் தன்மையோடும், விரிவான விவாதத்திற்கும் பின்பே தொகுதித் தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக்கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.

இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் த்லைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடுதான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.” என்று ஜோதிமணி கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com