விஜய் டி.வி.யின் ’அது இது எது’ நிகழ்ச்சிக்காக ஒத்திகையெல்லாம் முடிச்சிட்டு, மேக்கப் போட்டு, விக் வச்சிட்டு ஸ்டேஜ் ஏற இருந்தோம். அரை மணி நேரத்தில் சூட்டீங். அப்போ, எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. என்னோட அம்மாக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணிருக்காங்கன்னு. எனக்கு என்ன பண்றதுனே புரியல.
‘ஆஸ்பிட்டல் தானே கூட்டி போய் இருக்காங்க… அப்பா கூடதானே இருப்பாங்க… நம்ம சூட்டை முடிச்சிட்டு கிளம்பிடலாம்னு’ இருந்தேன்.
எப்பவும் போல மைக்லாம் மாட்டிக்கிட்டு செட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி ‘சிரிச்ச போச்சு’ டீம் கூட பைனல் ரிகர்சல் பார்த்துட்டு இருக்கேன். திரும்ப அரை மணி நேரம் கழிச்சி போன் கால் வருது ’அம்மா இறந்துட்டாங்கனு…’. அதகேட்டு ஓரு நிமிஷம் ஹார்ட்டே நின்னுடுச்சி. ‘அம்மா… னு’ நான் கதறி அழுததை பார்த்து அங்க இருந்த எல்லோரும் பயந்துட்டாங்க. மாகாபா ஆனந்த், டைரக்டர் தாம்சன் திவாகர் என எல்லோரும் வந்து என்ன ஆறுதல் படுத்தி ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க.
அப்போ ’இது ஒரு கனவா இருந்துட கூடாதானு’ நினைச்சிக்கிட்டே போனேன். என்னோட ஆன்மாவாக இருந்தவங்க அம்மா. அவங்க இறப்பிலிருந்து மீண்டு வரவே ஒன்றரை வருசத்துக்கு மேல் ஆச்சி.! இப்பவும் எங்க அம்மா நெனப்பு வந்தா எனக்கு கண்ணு கலங்கிடும்…!
கடவுள் எனக்கு என்ன வரம் வேண்டும்னு கேட்டா? எங்கம்மா வேண்டும்னுதான் சொல்லுவேன்!
-நடிகர் தங்கதுரை