100+ முகங்கள்... 500+புத்தகங்கள்! 
பகுதி - 3

100+ முகங்கள்... 500+புத்தகங்கள்! பகுதி - 3

புத்தகப் பரிந்துரைகள்

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய முக்கியமான ஐந்து புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு அந்திமழை கேட்டதைத் தொடர்ந்து பல துறையினரும் ஆர்வமுடன் தமக்கே உரிய கோணத்தில் பட்டியல் அளித்தனர். அவை வரும் பக்கங்களில்...

பாமயன், இயற்கை வேளாண் அறிஞர்

1. ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு ஃபுகோகோ / தமிழில் கயல்விழி, எதிர் வெளியீடு

2. திணையியல் கோட்பாடு, பாமயன், தடாகம்

3. Permaculture: A Designer's Manual- Bill Mollison, Tagari Publications

4. Energy and Equity - Ivan Illich

5. வேளாண் இறையாண்மை& பாமயன்,  தமிழினி வெளியீடு

டாக்டர் கு. கணேசன்

1. சின்ன விஷயங்களின் கடவுள், அருந்ததி ராய் / தமிழில் ஜி.குப்புசாமி,  காலச் சுவடு பதிப்பகம்

2. என் பெயர் சிவப்பு - ஓரான் பாமுக் / ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம்

3. தண்ணீர், அசோகமித்திரன், காலச்சுவடு பதிப்பகம்

4. காகித மலர்கள், ஆதவன், உயிர்மை பதிப்பகம்

5. டாக்டர் இல்லாத இடத்தில், டேவிட் வெர்னர், அடையாளம் பதிப்பகம்

தங்க. ஜெய்சக்திவேல் பேராசிரியர்

1. ஒலிபரப்புக் கலை - சோ.சிவபாதசுந்தரம், வானதி பதிப்பகம்

2. உலகமெலாம் தமிழோசை - வெ.நல்லதம்பி, மங்கை பதிப்பகம்

3. வானலைகளில் ஒரு வழிப்போக்கன் - பி.ஹெச்.அப்துல் ஹமீத் - தரு மீடியா

4. அறியப்படாத தமிழ் வானொலி வரலாறு - கு.பிரகாஷ் - பரிசல்

5. காற்று வெளியினிலே - அப்துல் ஜப்பார் - மித்ர வெளியீடு

பாமா, எழுத்தாளர்

1. திருக்குறள்

2. கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக...! - ராஜ்கௌதமன், என்.சி.பி.எச்

3. பெண் ஏன் அடிமையானாள் - தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்

4. சாதி ஒழிப்பு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பாரதி புத்தகாலயம்

5. கீதாஞ்சலி - ரவீந்திரநாத் தாகூர் / தமிழில் வைதேகி ஹெர்பர்ட், ஆழி

தியாகு

1) திருக்குறள், மணிவாசகர் பதிப்பகம்

2) கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - கார்ல் மார்க்ஸ் - பிரெடெரிக் எங்கெல்ஸ்

3) பாரதியார் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம்

4) பாரதிதாசன் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம்

5) தாய், மக்சீம் கார்க்கி, என்.சி.பி.எச்.

சுந்தர் கணேசன், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்

1. சங்க இலக்கியம் தொகுப்பு - மர்ரே ராஜம் பதிப்பு

2. திருக்குறள் - திருவள்ளுவர், கலைஞர் உரை, திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்

3. ஒரு பண்பாட்டின் பயணம் - ஆர். பாலகிருஷ்ணன்

4. Discovery of India - Jawaharlal Nehru

5. Animal Farm - George Orwell, Penguin

ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர்

1. இந்தியாவில் சாதிகள், அண்ணல் அம்பேத்கர், எதிர் வெளியீடு.

2. அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) - இராமாநுஜாசா ரியார், திராவிடர் கழக வெளியீடு

3. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ் - பிரெடெரிக் எங்கெல்ஸ் / தமிழாக்கம், அறிமுகவுரை, விளக்கக்குறிப்புகள்: எஸ்.வி.ராஜதுரை, என்.சி.பி.ஹெச்.

4. ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை - ஆர்.பாலகிருஷ்ணன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

5. மண்ட்டோ படைப்புகள் - சாதத் ஹஸன் மண்ட்டோ/ தமிழாக்கம்: ராமாநுஜம், பாரதி புத்தகாலயம்

சோ. தர்மன் எழுத்தாளர்

1. ஆழிசூழ் உலகு - ஜோ டி குருஸ், தமிழினி

2. ஜானகிராமம்: தி.ஜானகிராமன் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் - தொகுப்பாசிரியர் கல்யாணராமன், காலச்சுவடு பதிப்பகம்.

3. லண்டாய் (ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடல்கள்) - தொகுப்பும் மொழியாக்கமும் ச.விஜயலட்சுமி, எதிர்வெளியீடு

4. டாக்டர் இல்லாத வீட்டில் - டேவிட் வெர்னர், அடையாளம்.

5. வியத்தகு இந்தியா - ஏ.எல்.பாஷம், அடையாளம்.

அ.வெண்ணிலா, எழுத்தாளர்

1. சங்க இலக்கிய நூல்கள், புலியூர் கேசிகன் உரை

2. திருப்பாவை, திருவெம்பாவை

3. தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

4. பாரதியார் கவிதைகள்

5. மோகமுள், தி.ஜானகிராமன்

காஞ்சனா ஜெயதிலகர், எழுத்தாளர் 

1. பைபிள்

2. திருக்குறள்

3. மீனாட்சி அம்மாள் சமையல் புத்தகம்

4. அவரவர்க்குப் பிடித்தமான எழுத்தாளரின் புத்தகங்கள் - எனக்கு அகதா கிறிஸ்டி, சுஜாதா கதைகள்

5. கல்கியின் சிறுகதைகள் 1, 2 - சிவகுரு பதிப்பகம், சென்னை

தமிழருவி மணியன்

படித்துப் பயன் பெறுவதற்கு நம்மிடையே பல நூல்கள் உண்டு. வள்ளுவத்தைப் பழுதறப் படித்துணர்ந்தால் அறம் தழுவிய வாழ்க்கை நமக்கு வசப்படும். பாரதியைத் திரும்ப திரும்ப

வாசித்துக் கொண்டே இருந்தால் சமூகப் பார்வையும் மனித நேயமும் நம்முள் மலரும்.

தமிழில் சங்க இலக்கியப் படைப்புகள் முதல் புதுமைப்பித்தன், தி.ஜா, ஜெயகாந்தன், நா.பா. கண்ணதாசன் வரை வாழ்நாள் முழுவதும் வாசித்துக் கொண்டே இருக்கலாம். வாசிப்பை விட சுகமான அனுபவம் வாழ்க்கையில் வேறேதுமில்லை.

ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தியை கட்டாயம் அறிமுகம் செய்துகொள்வது நல்லது. கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி, (Prophet) மிகெய்ல் நைமியின் மிர்தாதின், புத்தகம் புதிய சிந்தனைச் சாளரங்களைத் திறந்து வைக்கும். உங்கள் வாசிப்பை ஆழப்படுத்த சில ஆங்கில நூல்களை வழிமொழிகிறேன்.

1. 100 Great Lives edited by John Canning, pub lished by Rupa

2. The World's Great Speeches,. Dover Publication.

3. The man who saved India by Hindol Sengupta, Penguin publication

4. Annihilation of Caste by Ambedkar, Navayana Publica tion.

5. The Lost Hero (A Biography of Subash Bose), Blue Leaf Publication.

பேரா. நாகநாதன்

1. The Constitution of India -.P.M.BAKSHI, Universal law Publishing .

2. ARYANS, Charles Allen, Hachett India

3. South vs North, Nilakantan, juggernaut

4. அண்ணா அறிவுக் கொடை - Home Land &Home Rule  ஆங்கில மடல்கள், தமிழ் மண் பதிப்பகம்.

5. இந்திய அரசியல் பொருளாதாரமும் வேளாண்மையும் - நேரு முதல் மோடி வரை - முனைவர்.பு. அன்பழகன், பாரதி பதிப்பகம்.

பேரா. மணிகோ பன்னீர்செல்வம், ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

1. கலைஞர் மு. கருணாநிதி வரலாறு - ஏ.எஸ்.பன்னீர்

செல்வன் தமிழில்: சந்தியா நடராஜன் வ.உ.சி. நூலகம்

2. நூற்றாண்டில் தாருல் இஸ்லாம்: இஸ்லாமிய சுயமரியாதை இதழும், சமயச் சமூகச் சீர்திருத்தமும்  - எச். இ. அனீஸ் பாத்திமா, துருவம் வெளியீடு,

3. டாக்டர் கால்டுவெல் எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்  மொழிபெயர்ப்பாளர்: பா.ரா சுப்பிரமணியன்

4. தமிழ்த் தேசியத்தின் எதிரி யார்? - பேராசிரியர் த.செயராமன்

5. ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

திலகவதி, ஐபிஎஸ்(ஓய்வு), எழுத்தாளர் 

1. சத்தியசோதனை -  மகாத்மா காந்தி,

2. கண்ணில் மணல் - ரவீந்திரநாத் தாகூர் நாவல் தமிழாக்கம்: புவனா நடராஜன், அம்ருதா வெளியீடு

3. அபராஜிதா - விபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் நாவல். தமிழில் திலகவதி, சாகித்ய அகாதமி

4. குற்றமும் தண்டனையும், தஸ்தாவயேஸ்கி

5. டால்ஸ்டாய் சிறுகதைகள்

கோவை இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்

1. தத்துவ விளக்கம் - பெரியார்

2. பெண் ஏன் அடிமை ஆனாள்? - பெரியார்

3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தீர்வு - மதிவதனி

4. விசாவிற்காகக் காத்திருக்கிறேன் - அம்பேத்கர்

5. இந்துத்துவ பாசிசம் வேர்களும் விழுதுகளும் – செந்திலதிபன்

சி.பி.ஐ.எம். கட்சி, முன்னாள் எம்.எல்.ஏ.

1. திருக்குறள்

2. பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்

3. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - மார்க்ஸ், ஏங்கல்ஸ்

4. தாய் - ரஷ்ய நாவல்

5. பெண் ஏன் அடிமை ஆனாள்? – பெரியார்

வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன்

1) தமிழர் வரலாறு, பிடி ஸ்ரீனிவாச அய்யங்காரின் ஆங்கில நூலின் தமிழ் பொழிபெயர்ப்பு - புலவர் கோவிந்தன், அமராவதி பதிப்பகம்

2) தமிழர் வரலாறும் மக்கள் பண்பாடும்: டாக்டர் கேகே பிள்ளை

3) ஆராய்ச்சித்தொகுதி, பேராசிரியர் ராகவ அய்யங்கார்

4) தொடரும் போராட்டம் - இந்தியாவின் அசாத்தியமான மக்களாட்சி, வர்சானி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடு

5) வெண்முரசு, ஜெயமோகன்

புதுவை இளவேனில், ஒளிப்படக்கலைஞர்

1) பட்டாம்பூச்சி, ரா.கி.ரங்கராஜன்

2) கோபல்ல கிராமம், கி.ரா. அன்னம் பதிப்பகம்

3) அம்மா வந்தாள் , தி.ஜானகிராமன், காலச்சுவடு

4) ஆறுமுகம், இமையம், க்ரியா வெளியீடு

5) துணையெழுத்து, எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்

பேரா. கரு. ஆறுமுகத் தமிழன்

1) திருக்குறள்

2) சித்தர் பாடல்கள்

3) திருவருட்பா ஆறாம் திருமுறை

4) தம்மபதம்

5) Tao Te Ching

ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., இந்தியவியல் அறிஞர்

1. சங்க இலக்கியம்'

2. திருக்குறள்

3. புதுமைப்பித்தன் சிறுகதைகள்

4. The Alchemist

5. 1984, George Orwell

பேரா. ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்

1. கலீஃபா உமர் - சிப்லி நுஃமானி

மாற்றுப் பிரதிகள், புத்தாநத்தம்

2. டாக்டர் இல்லாத இடத்தில் - டேவிட் வெர்னர்,  அடையாளம்

3. இந்திய முஸ்லிம் தலைவர்கள் -  ராஜ்மோகன் காந்தி, கிழக்கு பதிப்பகம்

4. என்ன பேசுவது எப்படி பேசுவது - இறையன்பு, இ.ஆ.ப (ப.நி) என்.சி.பி.எச்.

5. காலந்தோறும் பிராமணியம் - பேராசிரியர் அருணன், வசந்தம் வெளியீட்டகம், மதுரை

ஓவியா பெரியாரிய எழுத்தாளர், செயற்பாட்டாளர்

1. தமிழர் தலைவர் - சாமி சிதம்பரனார்

2. வால்கா முதல் கங்கை வரை - இராகுல சாங்கிருத்தியாயன்

3. இனி வரும் உலகம் - பெரியார்

4. பெண் ஏன் அடிமை ஆனாள் - பெரியார்

5. ஜன்னலுக்கு வெளியே ஒரு சிறுமி - டோடோசான் எழுதிய

சிறுவர் புத்தகம்

ராசி அழகப்பன் திரைஇயக்குநர்

1. கருப்பு மை குறிப்புகள் - ஜெயராணி - எதிர் வெளியீடு

2. மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல் - டி ராஜா, என் முத்து மோகன் - என்சிபிஹச்

3. நா முத்துக்குமார் கட்டுரைகள் - டிஸ்கவரி புக் பேலஸ்

4. அப்பா நினைவும் புனைவும் - இளம்பரிதி - பரிதி பதிப்பகம்

5. ஜெயகாந்தன் சிறுகதைகள்  - கவிதா பப்ளிகேஷன்ஸ்

அ.கா.பெருமாள் ஆய்வறிஞர்

1. பாரதியார் கவிதைகள் - தஞ்சாவூர் பல்கலைக்கழகப் பதிப்பகம்

2. சுந்தர ராமசாமி - ஜே. ஜே . சில குறிப்புகள், காலச்சுவடு பதிப்பகம்

3.  தமிழ்ச் சான்றோர்கள்  அ.கா. பெருமாள்  காலச்சுவடு பதிப்பகம்

4. இன்றைய காந்தி -  ஜெயமோகன்  தமிழினி பதிப்பகம்

5. வியாசர் அருளிய மகாபாரதம் -  தமிழில் அ.லெ. நடராஜன். அருணா பதிப்பக

சிவகுமார் திரைக்கலைஞர்

1) காமராஜ் ஒரு சகாப்தம், ஆ.கோபண்ணா, வெளியீடு: நவ இந்தியா பதிப்பகம்

2) விடுதலை வேள்வியில் தமிழகம், த.ஸ்டாலின் குணசேகரன், மனிதம் பதிப்பகம்

3) காந்தி வாழ்க்கை, மூலம்: லூயி ஃபிஷர், தமிழில் தி.ஜ.ர., வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

4) திருக்குறள் 100 - வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள், சிவகுமார், அல்லயன்ஸ்

5) சிகரம் - இசைக்கவி 'கலைமாமணி' ரமணன், ப்ளூ ஓஷன் பப்ளிஷர்ஸ்

கவிஞர் கலாப்ரியா

1. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்

2. புதுமைப்பித்தன் சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம் வெளியீடு

3. தாவோ தே ஜிங் -- சி.மணி கிரியா வெளியீடு, சந்தியா நடராஜன், சந்தியா வெளியீடு

4. கொங்கு தேர் வாழ்க்கை - பகுதி 2 - தமிழ் புதுக்கவிதைகள் தொகுப்பு விரிவாக்கப்பட்ட பதிப்பு 2017, தமிழினி வெளியீடு

5. ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங் - சி மோகன் மொழிபெயர்ப்பு - புலம் வெளியீடு

மணா, பத்திரிகையாளர்

1. புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு - வெளியீடு : பல பதிப்பகங்கள்

2. கு.அழகிரிசாமி தேர்ந்தெடுத்த

சிறுகதைகளின் தொகுப்பு - வெளியீடு: பாரதி புத்தகாலயம்

3. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் - வெளியீடு: மீனாட்சி பதிப்பகம்

4. சிலிர்ப்பு - தி.ஜானகிராமன் சிறுகதைகள் தொகுப்பு - வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

5. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி - வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

logo
Andhimazhai
www.andhimazhai.com