100+ முகங்கள்... 500+புத்தகங்கள்! 
பகுதி - 4

100+ முகங்கள்... 500+புத்தகங்கள்! பகுதி - 4

புத்தகப் பரிந்துரைகள்

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய முக்கியமான ஐந்து புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு அந்திமழை கேட்டதைத் தொடர்ந்து பல துறையினரும் ஆர்வமுடன் தமக்கே உரிய கோணத்தில் பட்டியல் அளித்தனர். அவை வரும் பக்கங்களில்...

பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்

1. திருக்குறள்

2. பகவத் கீதை

3.   Discovery of India by Nehru

4. The Story of My Experiment with Truth by Mahatma Gandhi

5. பாரதியார் பாடல்கள்

உதயசங்கர், எழுத்தாளர்

1. நீலப்பூ - விஷ்ணுபுரம் சரவணன், வானம் பதிப்பகம்

2. சரஸ்வதிக்கு என்னாச்சு? - சரிதாஜோ, புக் பார் சில்ட்ரன்

3. சஞ்சீவி மாமா - கொ.மா.கோ.இளங்கோ, புக் பார் சில்ட்ரன்

4. என் பெயர் வேனில் - ரமணி, வானம் பதிப்பகம்

5. 1650 - விழியன், வானம் பதிப்பகம்.

க.முகிலன்,  எழுத்தாளர்

1. பெரியார் : சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி.இராஜதுரை -  வ.கீதா

2. கருகிய மொட்டு -  வி.ஸ.காண்டேகர், அல்லயன்ஸ்

3. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - பிரெடரிக் எங்கல்சு, என்.சி.பி.எச்.

4. குறுந்தொகை - மூலமும் விளக்க உரையும் - சாமி. சிதம்பரனார்

5. அரசியல் சட்டம் ஒரு மோசடி -  வே.ஆனைமுத்து

அருள்மொழி, வழக்கறிஞர்

1. தமிழர் தலைவர் - சாமி. சிதரம்பரனார், சந்தியா பதிப்பகம்

2. அண்ணா அறிவுக்கொடை (அறுபத்து நான்கு நூல்களைக் கொண்ட தொகுப்பு), தமிழ்மண் பதிப்பகம்

3. நெஞ்சுக்கு நீதி (ஆறு பாகங்கள்), கலைஞர் மு.கருணாநிதி, திருமகள் நிலையம்

4. அய்யாவின் அடிச்சுவட்டில் - கி. விரமணி, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு

5. இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?, ப. திருமாவேலன், நற்றிணை

ஆ.இரா.வேங்கடாசலபதி, ஆய்வாளர்

ஒவ்வொரு தமிழ் ஆர்வலரிடமும் இருக்க வேண்டிய ஆய்வு நூல்கள்.

1. மறைந்துபோன தமிழ் நூல்கள்: மயிலை சீனி. வேங்கடசாமி

2. காவிய காலம்: ச. வையாபுரிப் பிள்ளை

3. ஓவச்செய்தி: மு. வரதராசன்

4. அடியும் முடியும்: க. கைலாசபதி

5. தமிழ்க் காதல்: வ.சுப. மாணிக்கம்

(மு.வ. நூல்,பாரி நிலையம்; கைலாசபதி நூல், காலச்சுவடு வெளியீடு; பிற நூல்களெல்லாம் நாட்டுடைமையானவை.)

யுவன் சந்திரசேகர், எழுத்தாளர்

1. மோகமுள், தி ஜானகிராமன். இசையும் காதலும் வேறுவேறல்ல என்று உணர்வுபூர்வமாய் நிறுவிய காவியம்.

2. ஜே ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி.

தமிழ் அறிவுஜீவித் தளத்தின் கலாபூர்வமான சிகரம்.

3. நாளை மற்றுமொரு நாளே, ஜி நாகராஜன்.

பகட்டு மண்டிய நாகரிக சமூகத்தின்மீதான வெளிப்படையான விமர்சனம்.

4. சாயாவனம், சா கந்தசாமி. வடிவப்பிரக்ஞை, ரகசியத்தன்மை,

அலங்காரமற்ற மொழி கொண்ட முன்னுதாரண நவீனத்துவ நாவல்.

5. பொன்னியின் செல்வன் - கல்கி, தமிழ் ரஞ்சக எழுத்தின் உச்சம்

பேராசிரியர் க.பஞ்சாங்கம்

1. ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான், நீட்ஷே / தமிழில் ரவி, காலச்சுவடு பதிப்பகம்

2. புரட்சியாளன் - ஆல்பர் காம்யு / நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு

3. ஃபுக்குஷிமா (ஒரு பேரழிவின் கதை),தி பிக்காயேல் ஃபெரியே / தமிழில் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், தடாகம் வெளியீடு

4. குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும், ஜமாலன், பாரதி புத்தகாலயம்

5. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் , தமிழவன் அடையாளம் பதிப்பகம்.

சுதேச மித்ரன், ஆசிரியர், ஆவநாழி

1. அந்நியன், அல்பெர் காம்யு / தமிழில் வெ.ஸ்ரீராம், க்ரியா வெளியீடு

2. முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் / தமிழில் அருமை செல்வம், அசதா, காலச்சுவடு

3. பையன் கதைகள் - வி.கெ.என் / தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்திய அகாதெமி

4. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தரராமசாமி, காலச்சுவடு

5. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன், காலச்சுவடு

ஜோ டி குரூஸ், எழுத்தாளர்

1. சாதியைப் பேசத்தான் வேண்டும் - சூரஜ் யங்டே / தமிழில்: அனிதா பொன்னீலன், எதிர் வெளியீடு

2. மிர்தாத்தின் புத்தகம் - மிகெய்ல் நைமி / கவிஞர் புவியரசு, கண்ணதாசன் பதிப்பகம்

3. சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே / தமிழில்: திருலோக சீதாராம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

4. நிலம் பூத்து மலர்ந்த நாள்& மனோஜ் குரூர் / தமிழில் கே. வி. ஜெயஸ்ரீ, வம்சி புக்ஸ்

5. தமிழக கடல்சார் பொருளாதாரமும் போர்ச்சுக்கீசிய காலனியமயமாக்கமும் - எஸ். ஜெயசீல ஸ்டீபன் / தமிழில் க. ஐயப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கவிதா முரளிதரன், பத்திரிகையாளர்

1. பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

2. திருக்குறள்

3.  The little prince, Antoine de Saint -
Exupéry (குட்டி இளவரசன் என்கிற பெயரில் தமிழில் வந்தது)

4. Your silence will not protect you , Audre Lorde

5. South vs North : India's Great Divide ,R S Nilakantan (தமிழில் தெற்கு திண் வடக்கு என்கிற பெயரில்  வந்தது)

டாக்டர் இராமதாசு, பா.ம.க. நிறுவனர்

1. சங்க இலக்கியங்கள் தொகுப்பு

2. பாரதியார் கவிதைகள்

3. பாரதிதாசன் கவிதைகள்

4. பொன்னியின் செல்வன் நாவல்

5. உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்& எடி ஜேக்கூ, மஞ்சுள் பப்ளிகேசன் அவுஸ்

பேரா. இரா.காமராசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

1. திருக்குறள்

2. பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார்

3. இந்தியாவில் சாதிகள் - அறிஞர் அம்பேத்கர்

4. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - ஏங்கல்ஸ்

5. ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை - ஆர். பாலகிருஷ்ணன்

கவிஞர் இளம்பிறை

1. பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்

2. உலகப் புகழ்பெற்ற மூக்கு -  வைக்கம் முகமது பஷீர்

3. என் முதல் ஆசிரியர் (நாவல்) - சிங்கிஸ் ஜத்மாத்தவ்; தமிழில்: தா.பாண்டியன்

4. ஜெஜெ சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

5. மூளைக்குள் சுற்றுலா -  இறையன்பு

கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

1) தென்புலத்து மன்பதை, தொ.பரமசிவன் கட்டுரைகளும் நேர்காணல்களும், தொகுப்பாசிரியர்: ஏ.சண்முகானந்தம், வெளியீடு: உயிர் பதிப்பகம்

2) How Prime Ministers Decide, Neerja chodhury, Aleph Book company

3) The Things You Can See Only When You Slow Down, Haemin Sunim, Penguin Life

4) பெரியார் - அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு: தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

5) வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும் -- ப.திருமாவேலன், கருப்புப்பிரதிகள்

ரோகிணி, திரைக்கலைஞர்

1. நான் ஏன் நாத்திகன் ஆனேன்? - பகத்சிங், தமிழில் எஸ்.ஏ. பெருமாள், என்.சிபி.எச்

2. தாய் - மாக்ஸிம் கார்க்கி, பாரதி புத்தகாலயம்

3. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா / தமிழில் பூவுலகின் நண்பகள், எதிர் வெளியீடு

4. கருக்கு, பாமா, காலச்சுவடு

5. மீட்சி, ஓல்கா, தமிழில் கௌரி கிருபாநந்தன், பாரதி புத்தகாலயம்

எழுத்தாளர் ஜீவசுந்தரி

1. திருக்குறள்

2. பாரதியார் பாடல்கள்

3. பெண் ஏன் அடிமை ஆனாள்? - பெரியார்

4. காலந்தோறும் பெண், இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை& ராஜம் கிருஷ்ணன்

5. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை

ஓவியர் ஜீவா

1. பொழுதுபோக்கு பௌதீகம் - யா. பெரால்மான்  - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

2. சித்திரபாரதி - ரா. அ. பத்மநாபன், காலச்சுவடு பதிப்பகம்

3. ஒரு புளிய மரத்தின் கதை, சுந்தரராமசாமி   காலச்சுவடு பதிப்பகம்

4.    Hitchcock/Truffaut,  Published by Mon & Schuster

5.    Our Films, Their films , Satyajit Ray -Orient BlackSwan Publications

கிரேஸ் பானு, உரிமைகள் ஆர்வலர்

1. அம்பேத்கர் சந்தித்த சாதியக் கொடூரங்கள் (அம்பேத்கரின் நினைவுக் குறிப்புகள்) - திருநங்கை பிரஸ் பதிப்பகம்

2. அம்பேத்கரின் காதல் கடிதம், டாக்டர் அம்பேத்கர் / தமிழில் பூ.கோ.சரவணன், நீலம் பதிப்பகம்.

3. பெண் ஏன் அடிமையானாள் - தந்தை பெரியார், எதிர் வெளியீடு.

4. தாய் - மக்சிம் கார்க்கி, சீர் வாசகர் வட்டம்

5. மகாத்மா ஜோதிராவ் பூலே வாழ்க்கை வரலாறு - தனஞ்செய்கீர் / தமிழில் வெ. கோவிந்தசாமி, சிந்தன்

ஆளூர் ஷாநவாஸ், எம்.எல்.ஏ., வி.சி.க

1. தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் - பாஷாசிங், விடியல் பதிப்பகம்

2. 2ஜி அவிழும் உண்மைகள் - ஆ.இராசா, கௌரா புத்தகம் மையம்

3. அமைப்பாய்த் திரள்வோம்: கருத்தியலும் நடைமுறையும் தொல்.திருமாவளவன், நக்கீரன்

4. உயர்ஜாதியினருக்கு 10% உஙிகு இடொதுக்கீடு சரியா? தவறா? - தொகுப்பாசிரியர்: சு. விஜயபாஸ்கர், நிகர்மொழி

5. தெற்கிலிருந்து ஒரு சூரியன் (திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்), தி இந்து தமிழ் திசை

மாலன் பத்திரிகையாளர், எழுத்தாளர் 

1. காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் (12 தொகுதிகள் அல்லயன்ஸ் - அவற்றிலிருந்து தினம் ஒரு பத்தியாவது படிப்பது உங்களை மேம்படுத்தும்

2. திருக்குறள்

தினம் ஒரு குறளாவது படியுங்கள்

3. புதுமைப்பித்தன் சிறுகதைகள்

4.    The Alchemist - Paulo Coelho

5.  White Lotus – Oshov

பாமரன், எழுத்தாளர்

1. பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா,

என்சிபிஹெச் வெளியீடு

2. அழகிய பெரியவன் சிறுகதைகள், நற்றிணை

3. மன்னார் பொழுதுகள், வேல்முருகன் இளங்கோ, ஜீவா படைப்பகம்

4.  துப்பட்டா போடுங்க தோழி, கீதா இளங்கோவன், ஹெர்ஸ்டோரீஸ்

5.  புயலிலே ஒரு தோணி,  ப.சிங்காரம் 

கோ.ப.ஆனந்த், முதன்மை தலைமை கணக்காயர், தமிழ்நாடு, புதுச்சேரி

1) முருகன் அல்லது அழகு, திருவிகல்யாணசுந்தரம், பாரி நிலையம்

2) விடுதலைத் தழும்புகள், சு.போ. அகத்தியலிங்கம், பாரதி புத்தகாலயம்

3) ஒரு பண்பாட்டின் பயணம், சிந்துமுதல் வைகை வரை ஆர்.பாலகிருஷ்ணன்

4)   IKIGAI,The Japanese secret o a long and Happy
Married Life, Francesc Miralles and Hector Garcia

5) Geetanjali, Rabindranath Tagore

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது

1) திருக்குறள்

2) பெரியார் பேச்சு, எழுத்து அடங்கிய தொகுப்பு நூல்கள்

3)  Man watching: A Field Guide to Human Behavior , Desmon Morri

4) புதுமைப்பித்தன் சிறுகதைகள்

5)  The Meaning of Art, Herbert read, போன்ற காண்பியல் சார்ந்த அறிவை விரிவாக்கும் புத்தகங்கள்

கலைமாமணி சுதா, உறுப்பினர், பால் புதுமையர் கொள்கை வரைவுக்குழு, தமிழ்நாடு

1. வண்ணங்கள் ஏழு - வா. ரவிக்குமார்

2. வாடாமல்லி நாவல் - க. சமுத்திரம்

3. கவிதை மழை - கலைஞர்

4. வட சென்னைக்காரன் - பாக்கியம் சங்கர்

5. இளைய தலைமுறையின் புதிய திராவிடம் - ராஜராஜன் ஆர்.ஜெ.

டாக்டர் கு. சிவராமன்

1. தேவதேவன் கவிதைகள் தொகுப்பு

2. சிறியதே அழகு - இ. எஃப். ஷூமாசர்

3. அறம் - ஜெயமோகன்

4. அந்தக் காலத்தில் காபி இல்லை - ஏ.ஆர். வேங்கடாசலபதி

5. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானாபு புகாகோ

வைகை குமாரசாமி, இயற்கை வேளாண் ஆர்வலர்

1. பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள்   பதிப்பாசிரியர்  வே. ஆனைமுத்து   வெளியீடு - பெரியார் ஈ.வே. இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை

2.  இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் -

தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா.  தமிழில் கரிச்சான்குஞ்சு.

3. ஒற்றை வைக்கோல் புரட்சி  

4. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் - கணியன்பாலன். பதிப்பகம்  தமிழினி.

5. சங்க இலக்கியம் -  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்

டாக்டர் அமலோற்பவநாதன், மாநில திட்டக்குழு உறுப்பினர்

1) சத்திய சோதனை - மகாத்மா காந்தி சுய சரிதை

2) வால்கா முதல் கங்கை வரை - ராகுல் சாங்கிருத்தியாயன்

3) Glimpses of World History - Jawaharlal Nehru

4) பெண் ஏன் அடிமையானாள் - தந்தை பெரியார்

5) Collected works of Ambedkar

பவா செல்லதுரை , எழுத்தாளர்

1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்

2. யாமம், எஸ்.ராமகிருஷ்ணன்

3. நாளை மற்றுமொரு நாளே - ஜி. நாகராஜன், காலச்சுவடு

4. கோபிகிருஷ்ணன் அனைத்து படைப்புகளும்

5. வானம் வசப்படும் - பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம்

எழுத்தாளர் லதா

1. அறிந்தவைகளிலிருந்து விடுதலை - ஜே. கிருஷ்ணமூர்த்தி

2. கால நதி - ஆரூர் தமிழ்நாடன்

3. கீதாஞ்சலி - தாகூர்

4. தீர்க்கதரிசி - கலீல் ஜிப்ரான்

சக்தி ஜோதி, கவிஞர்

1. சங்க இலக்கியம் மொத்த தொகுப்பு, என்.சி.பி.எச்.

2. வால்காவிலிருந்து கங்கை வரை , ராகுல் சாங்கிருத்தியாயன் / தமிழில் எம். கோபாலகிருஷ்ணன், புலம்

3. மகடுஉ முன்னிலை, தாயம்மாள் அறவாணன், பச்சைப்பசேல்

4. இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு (பாகம் 1 - 2)

 ராமச்சந்திர குஹா / தமிழில் ஆர்.பி.சாரதி, கிழக்கு

5. பெண் ஏன் அடிமையானாள்? பெரியார், எதிர் வெளியீடு

கருணா பிரசாத் நாடகக் கலைஞர்

1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பதிப்பகம்

2. ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

3. கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, ஏ.சீனிவாசன், என்.சி.பி.எச்

4. மதுரையின் அரசியல் வரலாறு (1868),- ஜே. எச். நெல்சன் / தமிழில்

ச. சரவணன், சந்தியா பதிப்பகம்

5. வால்காவிலிருந்து கங்கை வரை, ராகுல் சாங்கிருத்தியாயன், தமிழ்ப்புத்தகாலயம்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com