நான்காம் தலைமுறை

மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி
மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி
மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி
Published on

திருச்சியின் முக்கியமான இனிப்புக் கடைகளில் ஒன்று மயில்மார்க் மிட்டாய்க் கடை. அதிகாலை 5மணி முதல் இரவு 11 மணி வரை சுடச்சுட தீபாவளிக்காக விற்பனை செய்து வரும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான சரவணனிடம் பேசினோம்:

“வழக்கமான இனிப்புகளுடன் திருச்சியின் தனித்துவமான 'பெரிய பூந்தி' மற்றும் 'நெய் பூந்தி' ஆகிய இனிப்பு வகைகளை எங்கள் கடையில் நான்காவது தலைமுறையாக விற்பனை செய்து வருகிறோம்’ என்று பேசத் தொடங்கினார்.

”வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கடை என்பதால், பண்டிகைக் காலங்களில் 'பெரிய பூந்தி' பெரிய வகை 'நெய் பூந்தி', லட்டு, ஜாங்கிரி, மைசூர் பாகு, பாதுஷா ஆகிய இனிப்பு வகைகள் சுடச் சுட விற்றுத்தீர்ந்துவிடுகின்றன. மேலும், ஜாங்கிரி, பாதுஷா, முந்திரி அல்வா, முந்திரி கேக்கு, ட்ரை ஜாமுன் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறோம்.

இதனால், திருச்சியினுடைய அடையாளங்களில் ஒன்றாக மயில் மார்க் மிட்டாய் கடை மாறிவிட்டது. இதனை கடந்த 1953 ஆம் ஆண்டு எனது தாத்தா கதிர்வேல் பிள்ளை தொடங்கினார்.

அந்த காலகட்டத்தில் திருச்சியில் மயில் மார்க் மிட்டாய் கடை, மலைக்கோட்டைக்கு அருகாமையில் லாலா மிட்டாய் கடை, பெரிய கடை வீதியில் கிருஷ்ணவிலாஸ் பூந்தி கடை, யானை மார்க் மிட்டாய் கடை, பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் ஆகிய இனிப்பு பலகார விற்பனை கடைகள் இயங்கி வந்தன.

திருச்சி ரயில்வே சந்திப்புக்கும் - மத்திய பேருந்து நிலையத்திற்கும் இடையே இயங்கிவந்த மயில் மார்க் மிட்டாய்க் கடையின் பாரம்பரியத்தை எனது தந்தை முத்தையா பிள்ளை பாதுகாத்தார்.

அதனை தொடர்ந்து, அவரது பிள்ளைகள் ஐந்து பேரும் சேர்ந்து இக்கடைக்கு மேலும் இரு கிளைகளை உருவாக்கி வளர்த்தெடுத்தனர். ராஜ்மோகன் பிரதர்ஸ் என அறியப்பட்ட அந்த 5பேரில் நான் 4-வது பிள்ளை. 3-வது பிள்ளையான ராஜபாண்டியன் திருச்சி மாமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது எங்களது வாரிசுகளும் எங்களுடன் இணைந்து கடையை நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

வீட்டில் தயாரிப்பது போன்ற தரத்துடன், சுவையாக தயாரித்து கொடுக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்’ என முடிக்கிறார் அவர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com