கை அறியும் ருசி

அறுசுவை அரசு நடராஜன்
அறுசுவை அரசு நடராஜன்
Published on: 

’ஏழு வயசுல ஆரம்பிச்சேன். இப்போ 90 வயசு. இப்பவும் உழைச்சுட்டுதான் இருக்கேன். முடிஞ்ச அளவுக்கு, எல்லாக் கல்யாணத்துலயும் ஊறுகாய் மாதிரி சில ஐட்டம் மட்டும் இப்பவும் பண்ணிடுறேன்” என்று புன்னகைக்கும் நடராஜனின் கண்களில் இப்போதும் துடிப்பு மின்னுகிறது.

அறுசுவை அரசு என்று சொன்னால் சமையல் தொழில் புரிபவர்களுக்கு மட்டுமல்ல, அவரது கைராசி தெரிந்த அனைவருக்கும் தெரியும். “என் கையால சுமார் 50 லட்சம் பேருக்கு சாப்பாடு போட்டிருப்பேன்” என்று ஒலிக்கும் இவரது குரலில் தெரிவது வெறும் தன்னம்பிக்கை மட்டுமல்ல, அதையும் தாண்டிய தீர்க்கம்.

எந்த கல்யாணத்திற்கு சமைக்கச் சென்றாலும், முதலில் பால் காய்ச்சுவதில் இருந்து தொடங்குகிறது இவரது ஆட்டம். “எப்போசமைச்சாலும், நல்லா வரணும்கற வேகத்துல சமைப்பேன். சமையலுக்கு பரிபூரணமான வேகம் அவசியம். அப்புறம், அததுக்குத் தேவையான பொருள் வேணும். கண்டிப்பா, அந்த சமையல் பெயிலியர் ஆகாது’ என்று சொல்லும் இவர், தான் ஒருமுறை கூட அப்படியொரு தோல்வியை நெருப்பின் முன்னே சந்தித்ததில்லை என்கிறார்.

“பாத்திரத்துல கொதிப்பு வரும்போதே தெரிஞ்சிடும். சமயத்துல வாசனையும் ருசி எப்படியிருக்குன்னு தெரிய வச்சிடும். அப்புறம்தான், அதை ருசி பார்க்கணுமா வேண்டாமாங்கறதெல்லாம் வரும்” என்று சொல்லும் இவர்,  சமைத்த கல்யாணமொன்றில், சுமார் 2 லட்சம் பேர் சாப்பிட்டிருக்கிறார்களாம். அது, மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி வீட்டுத் திருமணம். அதேபோல, கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தமிழக அரசு சார்பில் நடந்த 1008 ஜோடி திருமணத்தின் போதும் இவரது கல்யாணச் சாப்பாடு தான் வந்தவர்களின் வயிறை நிறைத்திருக்கிறது. திருமண சமையலைப் பொறுத்தவரை, தற்போது ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்றால், ‘கண்டிப்பா இருக்கு’ என்று வேகமாகச் சொல்கிறார் நடராஜன்.

“அப்போ மாதிரி, இப்போ நிறைய ஆட்கள் கிடைக்குறது இல்ல. அதேமாதிரி, இப்போ கல்யாண வீட்டுக்காரங்களும் தமிழ்நாட்டு சமையலை விரும்புறதில்ல. நார்த் இண்டியன் ஐட்டம்ஸ் நிறைய வேணும்னு எதிர்பார்க்கிறாங்க‘ என்கிறார் புன்னகையுடன்.

ஆகஸ்ட், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com