அன்பும் மரியாதையும்

அன்பும் மரியாதையும்

உண்மையான அன்பு, எதிர்பார்ப்பற்ற அன்புதான் மிகவும் முக்கியமானது. எதையும் வாயால்

சொல்வதைவிட செயலில் காட்ட வேண்டும். உறவுகள் என்பவை உன்னதமானவை அல்லவா? உன்னதமான உறவுக்குத்தான் மரியாதை கொடுக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த ஒரு பிறவி தான் என்னால் பிறக்க முடியும். இந்த வாழ்க்கையில் எனக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். திரும்பி இதுபோல் ஒருபிறவி அமையாது. அப்படி இருக்கையில் இப்போதே சரியான விஷயத்தைச் செய்துவிடவேண்டும். பின்னால் எதையும் இப்படிச் செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று யோசிப்பதில்பிரயோசனம் இல்லை. எனவே இருக்கும் போதே உறவுகளைப் பாராட்டி நடந்து கொண்டால்இதைவிட சந்தோஷம் எதுவும் இல்லை. அனைவர்மீதும் அன்பு கலந்த மரியாதை இருந்தால் போதுமானது. எல்லா உறவு முறைக்குமே இது பொருந்தும்.

எதிர்பார்ப்புகள் இன்றி

மைதிலி சுந்தரம்

பொதுவாக பெண்களுக்கு குறை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால்? சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் தங்களுடைய அபிப்பிராயங்களை ஆண்கள் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களையும் கலந்தாலோ

சித்து முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.

இன்னொன்று, தன்னைப் பற்றிய முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள். அதில், ஆண் என்ன நினைக்கிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைக் கொடுக்கக்கூடிய எந்த ஆணுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். அதாவது, பெண்களை சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்க வேண்டும். அதுதான் முக்கியம். இன்றைக்கு என்ன சமையல் என்று கேட்பதாக இருக்கட்டும், நகை எதாவது வாங்குவதாக இருக்கட்டும், இல்லையெனில், அலுவலகம் சார்ந்த விஷயங்களாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் பெண்களை கலந்தாலோசித்து முடிவு எடுக்கக் கூடிய ஆணுக்கு பெண்ணிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கும்.

பெண்களைப் பெண்களாகவே இருக்க விட வேண்டும். அதாவது, பெண்ணுக்கு இயற்கையாக என்ன இருக்கின்றதோ அதன்படியே அவர்களை நடத்த வேண்டும், எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி. அந்த ஒரு சுதந்திரத்தை பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். தன்னுடைய திறமைகளை ஊக்குவிக்கக் கூடிய ஆணை பெண் விரும்புவாள்.

தவறெணும் நாணயன்

ஆத்மார்த்தி

மாபெரும் உயரத்துக்கோ தூரத்துக்கோ உயர்த்தி நகர்த்துவதும், எப்படியாவது கட்டுப்படுத்தி அடக்கி ஒடுக்குவதும், இந்த இரண்டுமே தவறெனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான். பெண் என்பவள் சுதந்திரமானவள், உறுதியானவள், முழுமையானவள். புனிதப்படுத்துவது, கடினப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது& இவை எவற்றையும் பெண்கள் விரும்புவதில்லை. ஆண் மனோபாவமும், பார்வையும் மாறவேண்டியதும், புரிதல் சமநிலைக்கு வந்தடைய வேண்டியதும் காலத்தின் கட்டாயம் அல்ல, மாறாக அது ஒரு பண்பாட்டின் கனிதல்.

வாழ்வின் எல்லா நுண் இழைகளையும் கையாளுவதும், கடைசிவரை துண்டிக்கப்படாமல் கொண்டு செல்வதும் ஆண்&பெண் பேதமற்ற ஒருமித்தலின் சாத்தியங்களே. தற்கணத்தின் புள்ளியிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை காலமெனும் இருளும் ஒளியும் சமமாய்த்தான் கிடைக்கிறது என்பது நிதர்சனமாகையில் பயண தூரத்தைக் கரம் கோர்த்துப் பகிர்வதில் பிழையொன்றும் இல்லையே, வாழ்தல் இனிது.

நவம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com