எதுவும் திடீர் என்று நடப்பதில்லை!

குமரி முதல் காஷ்மீர் வரை குடும்பங்களின் அரசியல்!
ஜான் எஃப் கென்னடி
ஜான் எஃப் கென்னடி

இரவு உணவின் போது மதுக் கோப்பைகளை உயரத் தூக்கிப் பிடித்து விருப்பத்தைச் சொல்லி உரக்க வாழ்த்தும் மேற்கத்தியரின் பழக்கத்தை ‘டோஸ்ட்'(Toast) என்று சொல்வார்கள். 1972 ஆம் ஆண்டு ஒட்டோவா நகரில் அமெரிக்க ஜனாதிபதி 1நாட்டு அரசியல்வாதியிடம் கூறிய போது, ‘நிஜமாவா? நம்மூர் கதை போலிருக்கிறதே' என்றார்.

அரசியல் குடும்பங்கள் பற்றிய சிறப்பிதழ் தயாரிப்பதென்று முடிவு செய்து பட்டியல் செய்யும் போது ஆயிரக் கணக்கில் பக்கங்கள் தேவைப்பட்டது.

ஆய்வாளர்கள் அரசியலில் ஈடுபடும் குடும்பங்களை மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அரசியல் வம்சம்

( Political dynasty),  அரசியல் வாரிசு (Hereditary Politician) மற்றும் அரசியல் குடும்பங்கள்.

1957 ஆம் ஆண்டு பிரான்கோய் ‘பப்பா டாக்' டுவாலியர் என்ற கால் நடை மருத்துவர் ஹெயிட்டி நாட்டின் அதிகாரத்திற்கு வந்தார். 1964 ஆம் ஆண்டு தன்னை நாட்டின் வாழ்நாள் தலைவராக நியமித்துக் கொண்டார். 1971 ஆம் ஆண்டு தன் மரணத்திற்கு முன் தனது 19 வயது மகன் பேபி டாக் - கை தனக்குப் பின் நாட்டின் தலைவரென்று அறிவிக்கிறார். பப்பா டாக்கின் மரணத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த பேபி டாக் 1990 ஆம் ஆண்டு மக்களால் தூக்கியெறியப்படுகிறார். இது அரசியல் வம்சத் திற்கான ஆகச் சிறந்த உதாரணம்.

அரசியலில் எந்த ஈடுபாடும் இல்லாத ஜானகி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது அரசியல் வாரிசு ( Hereditary Politician) என்ற பதத்திற்கு உதாரணம்.

அமெரிக்காவின் கென்னடி குடும்பம்  ஜனநாயகக் கட்சியில் உறுப்பினர்களாக சுமார் 70 ஆண்டுகளாக ஆட்சியின் ஒரு பங்கை தங்கள் கையில் ஏதாவது ஒரு குடும்ப உறுப்பினர் மூலம் தக்க வைத்துள்ளனர். அதேபோல் குடியரசுக் கட்சியில் புஷ் குடும்பத்தினர் வலுவாக உள்ளனர்.

ஆடம்ஸ் குடும்பம், ஹாரிசன் குடும்பம், டாப்ட், ரூஸ்வெல்ட் என்ற பல குடும்பங்கள் அமெரிக்காவின் அரசியலிலும், அதிகாரத்திலும் கோலோச்சியுள்ளனர். இவர்களெல்லாம் அரசியல் குடும்பங்கள். கடந்த நூறு ஆண்டுகளில் அமெரிக்காவின் கலாச்

சாரம் உலகமெங்கும் பரவிவிட்டது. இது இயல்பானதா என்று கேள்வி எழும் போது,

‘அரசியலில் எதுவுமே திடீரென்று நடப்பதில்லை. அப்படி நடந்தால், உறுதியாக ஒன்றைச் சொல்ல முடியும், அது திடீரென்று நடந்தது போன்று திட்டமிடப்பட்டிருக்கும்' என்று பிராங்ளின் டி.ரூஸ்வெல்டின் வார்த்தை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.

அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்கள் வெற்றி பெறுவதற்கு ஜப்பானிய மொழியில் ஜிபான்(Jiban), கன்பான் (Kanban), கபான் (Kaban) என்ற மூன்று காரணங்கள் கூறுவதுண்டு. குடும்பத்திற்கு மக்களிடமுள்ள செல்வாக்கு (Jiban), குடும்பத்தால் ஏற்படும் பிரபலம் (Kanban), மற்றும் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய பண பலம் (Kaban) ஆகியவற்றால் வெற்றி பெற்ற குடும்பங்களில் இருந்து மீண்டும் மீண்டும் உறுப்பினர்கள் அரசியலில் வென்று அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள்.

பப்பா டாக், பேபி டாக்
பப்பா டாக், பேபி டாக்
பிடல் மற்றும் ரால் கேஸ்ட்ரோ
பிடல் மற்றும் ரால் கேஸ்ட்ரோ

இப்போது திமுகவின் தலைமைப் பதவிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலினை ஆரம்பத்தில் சொன்ன அரசியலில் ஈடுபடும் குடும்பங்களின் பிரிவுகளில் மூன்றாவது பிரிவில் வகைப்படுத்தலாம். தலைவரின் மகனாகப் பிறந்தும் ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி காலங் கடந்தே கிடைத்துள்ளது.

எந்த பின்புலமும் இல்லாத கலைஞர் கருணாநிதி கட்சியில் சேர்ந்த இருபது ஆண்டுகளில் கட்சிக் கும் ஆட்சிக்கும் தலைமையேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

எல்லா பின்புலமும் இருந்தும் ஸ்டாலின் 1973 ஆம் ஆண்டு திமுகவின் பொதுக் குழுவிற்கு தேர்வாகி 45 ஆண்டுகள் கழித்து தலைவராகியிருக்கிறார்.

உலகில் அரசியல் குடும்பங்களில் நீண்ட நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்கள் இருவர். 49 ஆண்டுகள் கியூபாவில் ரால் காஸ்ட்ரோ, 45 ஆண்டுகள் மு.க. ஸ்டாலின்.

குடும்ப அரசியல் தவறா சரியா என்பது நூறாண்டுகளுக்கு மேலாக உலகமெங்கும் விவாதிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புச்சனன் கூறிய,‘The ballot box is the surest arbitrer of free men'( சுதந்தர மனிதர்களின் பிரச்னைகளை வாக்குப்பெட்டியே உறுதியாக தீர்த்துவைக்கிறது) என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அரசியல் குடும்பங்களின் ஆயுள் மக்கள் தீர்ப்பில் முடிவாகிறது.

அந்திமழை இளங்கோவன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com