ஒடிக்கிட்டே இருக்கேன்! - லதா ராவ்

ஒடிக்கிட்டே இருக்கேன்! - லதா ராவ்

பதினைந்து வருடங்களாக தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நான்கு மொழிகளிலும் ஏராளமான தொடர்கள், திரைப்படங்கள்னு நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கேன். இதில் எனக்குப் பிடித்த கேரக்டர்னு சொல்லனும்னா ஏராளமானது இருக்கு. ஏன்னா, நான் நடிச்ச எல்லா தொடர்களுமே நான் விரும்பி நடிச்சத் தொடர்கள் தான். அதில் குறிப்பிட்டு சொல்லனும்னா மளையாளத்தில் சுவாமி ஐய்யப்பன் தொடரில் சுவாமி ஐய்யப்பனின் தாயாக பந்தள மகாராணியாக நடிச்சேன். அதுதான் இந்தநிமிஷம் வரைக்கும் மனசுக்கு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைஞ்சிருக்கு. காரணம், இயல்பிலேயே எனக்கு கடவுள் பக்தி அதிகம். நேரம் கிடைச்சா உடனே கேதார்நாத், பத்ரிநாத்னு ஆன்மிகப்பயணம் கிளம்பிடுவேன். இந்தியாவிலிருக்கிற பிரசித்திப்பெற்ற கோவில்களை தரிசனம் பண்ணிட்டேன். இதில் சபரிமலைக்கு போகிற வயதில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தை ஐய்யப்பன் தொடர் போக்கிடுச்சி. பந்தள மகாராணியா நடிச்ச ஒவ்வொரு நிமிஷமும் ஐய்யப்பனோட அருள் என்னுள் நிறைஞ்சிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். நிஜத்தில் என்னை நான் ஒரு மகாராணியாகவே உணர்ந்து மனநிறைவோட நடிச்சேன். அதனாலேயே என் வாழ்க்கையின் முக்கியமான தொடராக அது பதிவாகிடுச்சி.

மத்தபடி, தமிழில் நான் நடிச்ச தொடர்களும் திரைப்படங்களும் மனதுக்கு நெருக்கமான நிறைவான கேரக்டர்களாகவே உணர்றேன்.

அடுத்து, இப்ப நான்  ‘எட்டு’ என்கிற திரைப்படத்திலும், ஸ்ரீகாந்த்துடன் 'டிரைலர்' படத்திலும் நடிச்சிருக்கிற கேரக்டர்கள் நல்ல அடையாளத்தைக் கொடுக்கும்னு நம்பிக்கையோட காத்திருக்கேன்.

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com