சக்தியாக வாழ்வது....

சக்தியாக வாழ்வது....

சின்னவயசுல இருந்தே தாவணி - புடவைன்னு நம்முடைய கல்ச்சர் டிரஸ் எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதோட கை நிறைய வளையல்கள், தலைநிறையப் பூ வச்சிக்கிட்டு வெளியேபோகணும்னு நினைப்பேன். அது எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதனாலேயே இதுவரைக்கும் நான் நடிச்சதில் மிகவும் பிடிச்ச கேரக்டர்கள் என்றால் அது ராமானுஜர் தொடரில் நான் நடிச்ச தஞ்சம்மாள் கேரக்டரையும், அறுபத்துமூன்று நாயன்மார்கள் தொடரில் புனிதவதியாக காரைக்கால் அம்மையார் கேரக்டரில் நடிச்சதையும் சொல்வேன். ஏனென்றால் அது கடவுளோடு தொடர்புகொண்ட, பக்தியான கேரக்டர். அதில் நடிக்கும்போது அதற்கான உடை, நகைகள் அணிந்தவுடன் என்மனசு முழுதும் ரம்மியமும், தெய்வீகுணர்வும் நிறைந்திடும். நான் மிகவும் சாந்தமாகிடுவேன். உண்மையில் அந்த கேரக்டராகவே மாறிடுவேன். அதனாலயே இந்த நிமிஷம் வரைக்கும் அந்த கேரக்டர்கள் ஓர் ஆச்சர்யமாக, ஆனந்தமாக என்னுள் நிறைஞ்சிருக்கு.

அதற்கடுத்து, இப்ப நான் நடிச்சிக்கிட்டிருக்கிற 'மௌனராகம்' தொடரின் சக்தி கேரக்டரும் என் மனசுக்கு நெருக்கமான சந்தோஷம் தருகிற கேரக்டர்தான். அதோடு இந்த கேரக்டர் என்னோட இயல்புக்கு மிகவும் பொருந்தி வருகிற கேரக்டர். நான் பிரச்னைகளைக் கண்டு பயப்படமாட்டேன். எதுக்குமே அழமாட்டேன் எப்பவுமே சிரிச்சிக்கிட்டிருக்கிற பாசிட்டிவான எண்ணம் கொண்ட பெண் நான். 'மௌனராகம்' சக்தி கேரக்டரும் அப்படித்தான் எத்தனை பிரச்னை வந்தாலும் தைரியமா எதிர்த்து நின்னு போராடுகிற கேரக்டர்ங்கிறதால் சக்தி கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சக்தியாக வாழ்வது மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. மற்றபடி எதிர்காலத்தில் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கணுங்கிற ஆசையும் கனவும் இருக்கு.

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com