சொதப்பும் கனவு!

சொதப்பும் கனவு!

இயக்குநர் மணிரத்னம் சார் காலையில் சூரிய வெளிச்சம் வரத் தொடங்கும் போதே படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார். மேஜிக் லைட் என்று சொல்லப்படுகிற அந்த வெளிச்சம் ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள்தான் இருக்கும் என்பதால், அனைவரும் தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் பயந்து பயந்து ஏற்பாடு செய்வோம். இதனால், படபிடிப்புத்தளமே பரபரப்பாக இருக்கும். காலை படப்பிடிப்பு முடிவதற்குள் எங்களுக்கு உயிர் போய்விடும். மேஜிக் லைட்டை மணிரத்னம் சார் தவறவிடமாட்டார். அவருக்கு முதல் காட்சி படப்பிடிப்பு என்பது மிக முக்கியமானது. இந்த எண்ணம் என் மனதிற்குள் எப்பொழுதும் இருக்கும் என்பதால், எனக்கு வரும் கனவில், முதல் காட்சி படப்பிடிப்பிற்கு தாமதமாக

செல்வதாகத்தான் வரும். இல்லையென்றால் எதாவது சொதப்புவது மாதிரியோ தான் வரும். இதுபோன்ற கனவு வந்தாலே நான் தூக்கத்திலிருந்து விழித்துவிடுவேன்.

அக்டோபர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com