படியுங்கள்... செல்வம் சேரும்!

படியுங்கள்... செல்வம் சேரும்!

எம். செல்லப்பாவிற்கு புத்தங்களின் மேல் தீராத காதல் இருந்தது. தன்னிடமிருந்த புத்தகங்களை யாழ்ப்பாண நண்பர்கள் படிக்க அனுமதித்தார். இதை நூலகமாக விரிவுபடுத்த விரும்பிய அவர், ஐசக் தம்பையா, இன்னும் பலரின் உதவியுடன் 1934இல் ஒரு நூலகத்தை ஆரம்பித்தார். நிதானமாக பெரிதாகிய நூலகத்திற்கு 1959 ஆம் ஆண்டு புதிய கட்டடம் யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா உதவியால் கிடைத்தது. புகழ்பெற்ற இந்திய நூலகர் எஸ். ஆர். ரங்கநாதன் யாழ்ப்பாண நூலகத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தினார்.

1981, மே 31 அன்று நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலரும், ஒரு காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக 1981ஆம் ஆண்டு ஜýன் 1ஆம் தேதி 97000 நூல்களோடு செல்லப்பாவின் கனவு நூலகமும் எரிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தவர்களின் முகத்தைப் பார்க்காமலே இரண்டு முடிவுகளை எட்ட முடியும்.

1. அவர்கள் நல்ல புத்தகங்களைப் படிக்காதவர்கள்

2. புத்தகங்கள்  தரும் அறிவைக் கண்டு பயப்படுகிறவர்கள்.

ஸ்டீவ் சீபோல்ட் முப்பது வருடங்களில் 1200க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை, உலகப் பணக்காரர்களை நேர்காணல் நடத்தி அவர்களது வெற்றி சூத்திரங்களை அறிய முற்பட்டிருக்கிறார்.

‘பணக்காரர்களின் இல்லத்தில் நுழைந்தால் முதலில் உங்கள் கண்ணில் படும் விஷயங்களில் ஒன்று அவர்களின் பெரிய நூலகம். தங்களை வெற்றிகரமாக ஆக்குவது எப்படி என அவர்கள் கற்றுக்கொண்ட நூல்களால் ஆனது'  என்று அவர் தனது How Rich People Think என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

தற்போதைய உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களான வாரன் பஃபெட், பில்கேட்ஸ், எலான் மஸ்க்  ஆகியோர் ஆண்டுக்கு ஐம்பது புத்தகங்கள் வரை படிப்பவர்களாக இருக்கிறார்கள்.

வாரன் பஃபெட்டின் வலது கையாக அறியப்படும் சார்லி மங்கர் ‘நானும் வாரனும் நிறையப் படிக்கிறோம். சிந்திக்கிறோம். பிற தொழிலதிபர்களை விட குறைவாகவே செயல்படுகிறோம்.  தினமும் அமர்ந்து வாசிக்கவும் சிந்திக்கவும் நிறைய நேரம் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது அமெரிக்க தொழில்துறையில் பொதுவான நிலை இல்லை. நாங்கள் வாசிக்கிறோம். யோசிக்கிறோம்' என்று கூறுகிறார். புத்தக வாசிப்பு அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய செல்வத்தை வாரி வழங்கியிருக்கிறது.

கல்லூரி செல்வோரின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது தமிழகம். ஆனால், புத்தகத்தின் விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. புத்தகம் வாசிப்பதற்கு தமிழர்கள் ஏன் முன்னுரிமை தருவதில்லை என்ற கேள்வி இங்கு அடிக்கடி கேட்கப்படுகிறது. எல்லா தேவைகளும் பூர்த்தியான பின் போனால் போகட்டும் என்று புத்தகம் வாங்கும் மனநிலை பலருக்கும் இருக்கிறது.

ஏன் புத்தக வாசிப்பு அவசியம்? புத்தக வாசிப்பு என்ன பயனைக் கொடுக்கிறது?

12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து 3600 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. புத்தகமே வாசிக் காதவர்களுடன் ஒப்பிடுகையில், அந்த ஆய்வுக் காலகட்டத்தில்  புத்தகங்களை வாசித்தவர்கள் நீண்டகாலம் வாழ்வதாகவும் இறப்பதற்கான வாய்ப்பு அந்த காலகட்டத்தில் அவர்களுக்குக் குறைவாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. 2017 - இல் அந்த ஆய்வு முடிவுகள் Innovation in Ageing சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

நடைப்பயிற்சி செய்வது எப்படி உடலையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்குமோ அப்படி தொடர்ச்சியான வாசிப்பு மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

வாசிப்பது, செஸ் ஆடுவது, புதிர் விடுவிப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் தங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்களுக்கு அல்சீமர்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்புகள், இந்த செயல்பாடுகளில் ஈடுபடாதவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவு என  இன்னொரு ஆய்வு கூறுகிறது.

புத்தக வாசிப்பு ஒரு சிறந்த Stress buster. (சில புத்தங்கள் Stress க்கு காரணமாகலாம், கவனமாக தேர்ந்தெடுங்கள்) 2009இல் வெளியான சஸ்ஸெஸ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று வாசிப்பதன் மூலம் 68 சதவீத அளவுக்கு ஸ்ட்ரெஸ் குறையும் என்கிறது.

ஒரு வீட்டிற்கு புத்தகம் ஏன் எதற்கு என்று கேட்பவர்களுக்கு, ‘புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறையைப் போன்றது' ( A house without books is like a room without windows) என்கிற ஹென்ரிச் மானின் வாசகத்தை பதிலாகச் சொல்லலாம்.

தங்கள் ஓய்வு நேரத்தில் வாசிக்கும் குழந்தைகளும் வாசிப்பதை வலியுறுத்தும் பெற்றோர்களின் குழந்தைகளும், இவ்வாறு ஓய்வு நேரத்தை வாசிப்பில் கழிக்காத குழந்தைகளை விட 26% அதிகமாக சொற்களைப் புரிந்துகொள்வதாக லண்டன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று சொல்கிறது.

நம்மில் பலர் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கும் போது முகநூலின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வருடத்திற்கு 24 புத்தகங்கள் படித்து தனது நேரத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்.

‘அறிவியல், மதம், வறுமை, செல்வம், உடல்நலம், சக்தி, சமூக நீதி, அரசியல் தத்துவம், வெளியுறவுக் கொள்கை, வரலாறு, எதிர்கால கற்பனைக் கதை ஆகிய பல விஷயங்கள் பற்றிய அதிகமான புரிதலை வாசிப்பு எனக்கு அளிக்கிறது.  அறிவுபூர்வமான நிறைவைத் தருகிறது'  இது  மார்க் உதிர்த்த கருத்து.

தான் சந்தித்த மனிதர்களையும், படித்த புத்தங்களைப் பற்றியும் பில்கேட்ஸ், www.gatesnotes.com  என்ற தளத்தில் தொடர்ந்து எழுதுகிறார்.

புத்தக வாசிப்பு உங்கள் வாழ்வில் என்ன பயனை அளித்தது என்று நியூயார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் பில்கேட்ஸிடம் கேட்டபோது, ‘கற்றுக்கொள்வதற்கான முதன்மையான வழி அதுதான். சிறுவனாக இருந்ததில் இருந்தே வாசித்து வந்துள்ளேன்.  இப்போதெல்லாம் நான் புதிய இடங்களுக்குச் செல்கிறேன். விஞ்ஞானிகளை சந்திக்கிறேன். ஆன்லைனில் உரைகள் கேட்கிறேன். ஆனாலும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் நான் புரிந்துகொண்டதைப் பரிசோதிக்கவும் வாசிப்பதுதான் முக்கிய வழியாக உள்ளது' என்கிறார்.

உங்கள் குழந்தைகள் பில்கேட்ஸ் அல்லது மார்க் மாதிரி உயரத்திற்கு போக வேண்டுமா? மார்க் உருவாக்கிய (அ) முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தவமிருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வது நீங்கள் வாங்கும் புத்தகங்கள்தான்.

கே.எம். செல்லப்பாவின் வீட்டைப் போல் தமிழர்களின் வீடெங்கும் ஒரு குட்டி நூலகம் இருப்பது அவசியம்.

இது பற்றி நான் பல மேடைகளில் பேயிருக்கிறேன் பேசி முடித்து கீழே இறங்கும் போது சிலர் எந்தெந்த புத்தகங்கள் வாங்கலாம் என்ற பட்டியல் கேட்பதுண்டு. நீங்கள் குட்டி நூலகம் வைக்க விரும்பினால் இத்துடன் 120 புத்தகங்கள் கொண்ட பட்டியல் இணைத்துள்ளோம். ஒரே நேரத்தில் வாங்க முடியாதவர்கள் மாதத்திற்கு பத்து என்று ஓர் ஆண்டில் வாங்கலாம்.

இது என்னுடைய தனிப்பட்டியல். நீங்கள் உங்களுக்கான பட்டியலை வடிவமைத்துக்கொள்வது நல்லது. இந்த இதழில் 104 பிரபலங்கள்  வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் படிக்கவேண்டிய 5 முக்கியமான புத்தகங்களைப் பகிர்ந்துள்ளனர். தங்கள் குடும்பத்திடம் எத்தனை சவரன் நகையுள்ளது, என்ன மாதிரியான கார் இருக்கிறது எத்தனை சதுர அடியில் வீடு / நிலம் இருக்கிறது என்பதை கேட்பது போல் எத்தனை புத்தகங்கள் வாசித்துள்ளீர்கள், வீட்டில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள் என்று கேளுங்கள்.

அரசியல்வாதிகள் நடிகர் நடிகைகள் என்று பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள் தற்போது என்ன புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்வியைத் தவறாமல் கேளுங்கள்.

பரந்துபட்ட புத்தகங்களைப் படிக்கும் இனத்தின் காலடியில் செல்வம் உட்பட சகலமும் இருக்கும்.

அந்திமழை இளங்கோவன்

எதை வாங்கலாம்?

என்ன நூல்களை வாங்கலாம் என்று யோசிப்பவர்களுக்கு உதவியாக 120 நூல்கள் கொண்ட இந்தப் பட்டியல். இவற்றை வாங்க  உத்தேசமாக 60,000 ரூபாய் செலவாகும். ஓர் உயர் ரக செல்போன் அல்லது டிவி வாங்கும் செலவுதான்.

  • திருக்குறள்

  • பாரதியார் கவிதைகள்

  • பாரதிதாசன் கவிதைகள்

  • How To Win Friends And Influence People Dale Carnegie

  • Outliers: The Story of Success  Malcolm Gladwell

  • நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? டாக்டர் எம். ஆர். காப்மேயர்

  • செல்வந்தர் ஆவது எப்படி? எம். ஆர் காப்மேயர்

  • Rich Dad Poor Dad: What the Rich Teach Their Kids About Money That the Poor and Middle Class Do Not!   Robert T. Kiyosaki

  • கரன்சி காலனி: அந்திமழை ந. இளங்கோவன்

  • Digital minimalism by Cal Newport

  • The obstacle is the way by Ryan Holiday

  • Your next five moves by Patrick Bet David

  • The Deadline Effect: How to Work Like It's the Last Minute  Christopher Cox

  • Start with why by Simon Sinek

  • The art of war by Sun Tzu

  • உச்சியிலிருந்து தொடங்கு, வெ.இறையன்பு,  விஜயா பதிப்பகம்

  • The Twelve Caesars, by Suetonius

  • The Story of My Experiments with Truth,M K. Gandhi

  • Anna: The Life and Times of C.N.Annadurai , R Kannan

  • காமராஜ் ஒரு சகாப்தம், ஆ.கோபண்ணா

  • கலைஞர் மு.கருணாநிதி வரலாறு, ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

  • MGR: A Life  by R Kannan

  • Ali: A Life, by Jonathan Eig

  • Alibaba: The House That Jack Ma Built

  • Steve Jobs: The Exclusive Biography Walter Isaacson

  • Made in Japan: Akio Morita and Sony

  • The Everything Store: Jeff Bezos and the Age of Amazon

  • Made in America, Sam Walton

  • My Life and Work: Autobiography of Henry Ford

  • Jack: Straight from the Gut

  • Iacocca: An Autobiography

  • Execution – by Charles Burck ,Larry Bossidy  , Ram Charan

  • Conquering the chaos by Ravi Venkatesan

  • Leonardo da Vinci, Walter Isaacson

  • Vincent and Theo: The Van Gogh Brothers   by Deborah Heiligman

  • The Diary Of A Young Girl: Anne Frank

  • Will in the World: How Shakespeare Became Shakespeare by Stephen Greenblatt

  • 1599: A Year in the Life of William Shakespeare by James Shapiro

  • T.S. Eliot: An Imperfect Life by Lyndall Gordon

  • அக்னிச் சிறகுகள்: ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் - அருண் திவாரி

  • மொழியைக் கொலை செய்வது எப்படி? - அந்திமழை

  • கடல்புறா- சாண்டில்யன்

  • பொன்னியின் செல்வன் - கல்கி

  • தமிழாற்றுப்படை - வைரமுத்து

  • மணிபல்லவம் - நா.பார்த்தசாரதி

  • வேள்பாரி- சு.வெங்கடேசன்

  • இந்தியப் பயணங்கள்  ரி  ஏ.கே. செட்டியார்

  • புதுமைப் பித்தன் சிறுகதைகள்

  • ஜி. நாகராஜன் படைப்புகள்( 1997)

  • சி.சு.  செல்லப்பாவின் வாடிவாசல்

  • ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமி

  • சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்

  • ஒரு கடலோர கிராமத்தின் கதை, தோப்பில் முஹம்மது மீரான்

  • கொல்லனின் ஆறு பெண்கள்,  கோணங்கி

  • என் ஜன்னலுக்கு வெளியே, மாலன்

  • இது சிறகுகளின் நேரம், அப்துல்ரகுமான்

  • ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 1, 2- பாவைச்சந்திரன்

  • அபிதா, லா.ச. ராமாமிருதம்

  • தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்,  சாகித்திய அகாடெமி

  • ஆதவன் தீட்சண்யா, சிறுகதைகள் .

  • கு.ப.ரா. சிறுகதைகள், முழுத்தொகுப்பு

  • கோவேறு கழுதைகள், இமையம்  க்ரியா வெளியீடு

  • சாயாவனம், சா.கந்தசாமி

  • கோபல்ல கிராமம், கி. ராஜநாராயணன்

  • நாயனம், ஆ. மாதவன்

  • அசோகமித்திரன் சிறுகதைகள் (1956 - 2016)

  • சதுரங்க குதிரை,  நாஞ்சில் நாடன்

  • ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன்

  • நினைவின் தாழ்வாரங்கள், கலாப்ரியா

  • பழுப்பு நிறப்பக்கங்கள், சாரு நிவேதிதா

  • துணையெழுத்து, எஸ்.ராமகிருஷ்ணன்

  • 100 சிறந்த சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன்

  • காகித மலர்கள், ஆதவன்

  • வேழாம்பல் குறிப்புகள், சுகுமாரன்

  • கொங்கு தேர் வாழ்க்கை-  தமிழ் புதுக்கவிதைகள்

  • திரை இசைப்பாடல்கள்- கண்ணதாசன்

  • தரை தொடாத மழைத்துளி- சிறந்த காதல் கவிதைகள், அந்திமழை

  • ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு ஃபுகோகா / தமிழில் கயல்விழி, எதிர் வெளியீடு

  • வால்கா முதல் கங்கை வரை, ராகுல சாங்கிருத்யாயன்

  • அழகியபெரியவன் சிறுகதைகள்

  • கிமு கிபி- மதன்

  • பண்பாட்டு அசைவுகள், தொ. பரமசிவன்

  • பெண் ஏன் அடிமையானாள், பெரியார்

  • வியாசர் விருந்து, ராஜாஜி

  • திராவிட இன அடையாளமும் வெகுமக்களிய அரசியலும், நரேந்திர சுப்பிரமணியன்

  • கம்பராமாயணம், வானதி பதிப்பகம்

  • கணையாழியின் கடைசி பக்கங்கள்,   சுஜாதா

  • ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம், சுஜாதா

  • அந்தக் காலத்தில் காப்பி இல்லை  -  ஆ.இரா.வேங்கடாசலபதி

  • டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு : தனஞ்செய் கீர், தமிழில்: க.முகிலன்

  • தீண்டாத வசந்தம் -  ஜி.கல்யாணராவ்

  • பேசித்தீர்த்த பொழுதுகள், தொகுப்பு: அந்திமழை

  • பெரியோர்களே! தாய்மார்களே!  -  ப.திருமாவேலன்

  • மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்,  குவான் யான்சி

  • பகத்சிங்கும் இந்திய அரசியலும் :   சுப.வீரபாண்டியன்

  • இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாஸ், கே. சுப்பிரமணியன் (தமிழில்)

  • கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை தொகுப்பு: அந்திமழை

  • Experiment with Untruth: Michael Henderson

  • The Politics by Aristotle

  • The Republic by Plato

  • Everybody loves a Good Drought: Stories from India's Poorest Districts by P. Sainath

  • Poor economics: Rethinking poverty - the ways to End it by Abhijit V. Banerjee, Esther Duflo

  • Why Nations Fail: The origins of power.
    prosperity, and poverty by Daron Acemoglu and James Robinson

  • The Dravidian Years: Politics and welfare in Tamilnadu by S. Narayan

  • Long Walk to Freedom by Nelson Mandela

  • India: The Siege Within: Challenges to a Nation's Unity: by M.J. Akbar

  • The Communist Manifesto (1848) - Karl Marx - Friedrich Engels

  • Team of Rivals: The Political Genius of Abraham Lincoln by Doris Kearns Goodwin

  • 24 Akbar Road: A short history of the people behind the fall and the rise of the congress , Rasheed Kidwai

  • The RSS : A View to the Inside : Walter Andersen, Shridhar Damle

  • Animal farm by George Orwell

  • Arthashastra by Kautilya

  • India After Gandhi: The History of the World's Largest Democracy Ramachandra Guha

  • Why we're Polarized by Ezra Klein

  • The World Is Flat, Thomas Friedman

  • க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

  • ஆங்கிலம் தமிழ் அகராதிகள் ஆக்ஸ்போர்டு, லிஃப்கோ

  • எலிக்கும் பூனைக்கும் திருமணம்:

  • சிறுவர் கதைகள் -  என். சொக்கன் : எழுத்து பிரசுரம்

  • 1001 அரேபிய இரவுகள்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com