யுவான் சுவாங் கேட்ட மொழி!

யுவான் சுவாங் கேட்ட மொழி!

காரூபம் என்றால் அஸாம் என்று நம்மில் பலர் அறிந்து வைத்திருப்போம்.

சீனப்பயணி யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்தபோது காமரூபம் சென்று அங்கிருந்த பாஸ்கரவர்மன் என்கிற மன்னரின் அவையில் இடம்பெறுகிறார்.

அது ஏழாம் நூற்றாண்டு. அங்கே பேசப்பட்ட மொழி காமரூபி என்று அவர் குறித்துள்ளார். இப்போது அசாமில் பேசப்படும் தரப்படுத்தப்பட்ட அஸாமி மொழிக்கு முந்தையது காமரூபி. அஸாமி மொழி உருவாகி வந்த வரலாறு ஒரு மொழி வளர்வதற்கு என்ன தேவை என்பதற்கான தெளிவான  பின்னணியைத் தருகிறது. இது இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ& ஆரிய மொழி. சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகள் கோலோச்சிய காலத்தில் அவற்றுடன் இணைந்து வட இந்தியாவில் கோலோச்சிய மொழி அபப்பிராமசம். இதிலிருந்து உருவாகி வந்த பல கிளைகளில் ஒன்று காமரூபி. இது கீழ் அசாம் பகுதியில் பேசப்பட்ட மொழியாக இருந்தது.  அதாவது இப்போதுள்ள காமரூபம், நல்பாரி, பார்பேட்டா, தாரங்,  கொக்ராஜர், பொங்கைகோவான் போன்ற பகுதிகள்.

யுவான் சுவாங் காலமான கிபி ஏழாம் நூற்றாண்டில் இருந்து 17ஆம் நூற்றாண்டு வரை காமரூபியே இலக்கிய வளம் பெற்றதாக சிறந்து விளங்கிற்று. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் நிலவிய அரச வர்க்கத்தினர் இந்த மொழியையே ஆதரித்தனர்.

பாஸ்கரவர்மனின் தலைநகர் இருந்த இடம் எதுவென்று இன்று தெளிவாகத் தெரியவில்லை. இன்றைய அசாமில் உள்ள கோல்பாரா அல்லது மேற்குவங்கத்தில் உள்ள கூச் பெகார் ஆகிய இடங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று அஸாமின் வரலாற்றை எழுதியவர்களில் முக்கியமானவரான கெய்ட் குறிப்பிடுகிறார். வங்கதேசத்தில் உள்ள ரங்கபுராவாக இருக்கலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார். ஆனாலும் இன்று காமரூபம் என்ற பெயருடன் கூடிய மாவட்டம் ஒன்று அசாமில் உள்ளது. யுவான் சுவாங் 'அடர் மஞ்சள் நிறத்தில் சிறிய அளவிலான மக்கள்' காமரூபத்தில் வசித் ததாகக் கூறி உள்ளார். அம்மக்கள் இப்போது எங்கே என்ற கேள்வி தொடர்கிறது. அவர்கள் பேசிய காமரூபி மொழி என்ன ஆனது?

ஒரு சில அசாமிய மொழித்திரைப்படங்கள் இந்த பேச்சுமொழி வழக்குகளை நேர்மையாகக் காட்டி இருக்கின்றன. தொலைக்காட்சித் தொடர்களும் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் அஸாமிய வழக்கு மொழிகளைக் காண்பித்துள்ளன.

ஒரு சில அசாமிய மொழித்திரைப்படங்கள் இந்த பேச்சுமொழி வழக்குகளை நேர்மையாகக் காட்டி இருக்கின்றன. தொலைக்காட்சித் தொடர்களும் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் அஸாமிய வழக்கு மொழிகளைக் காண்பித்துள்ளன.

இந்த நெருங்கிய தொடர்பாலோ என்னவோ ஒருங்குறி( யுனிகோட்) அமைப்பில் அசாமி மொழியை வங்காள எழுத்துருக்களுடன் சேர்த்துவிட்டார்கள். அதில் எங்களுக்குத் தனி இடம் வேண்டும் என்று அஸாமிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் காமரூபிக்கு வருவோம். காம்ரூப அரசு அமைந்திருந்த பழங்காலத்தில் அசாமின் கிழக்குப்பகுதியில் பேசப்பட்ட காமரூபி கிளை தற்போதைய அஸாமி மொழியாக வளர்ச்சி அடைந்தது. மேற்குப்பகுதியில் பேசப்பட்ட காமரூபியின் கிளை மேலும் பல பேச்சுவழக்குகளுக்கு வழிவகுத்தது என்று வங்காள மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்ற நூலை 1926&ல் எழுதிய சுனிதி குமார் சட்டர்ஜி கூறுகிறார்.

கீழ் அசாம் பகுதியில்தான் 17ஆம் நூற்றாண்டு வரை அசாமின் முக்கிய இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை காமரூபி மொழியைச் சார்ந்தவை. இப்பகுதியில் கோச்சர் அரசுகள் இருந்தன. இதன் முக்கிய அரசரான நர நாராயணன் காலத்தில் தான் அசாமி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியான சங்கர் தேவ், அவரது மாணவர் மாதவ தேவ் ஆகியோர் ஆதரவளிக்கப்பட்டனர். (இவர்கள் ப்ரஜவளி என்ற இலக்கிய மொழியிலும் எழுதினர். இவர்களின் காலம் 16ஆம் நூற்றாண்டு. இன்றும் இவர்களின் வைணவ இலக்கியப் பாடல்கள் வழங்கப்படுகின்றன) பதினேழாம் நூற்றாண்டில் இந்த கோச்சர்கள் வீழ்ந்தனர். கீழ் அசாமிலிருந்து மேல் அசாமுக்கு அரச அதிகாரம் மாறியது. அங்கு வந்த கிறித்துவ மதபோதகர்கள் அங்கு உள்ள சிப்சாகர் நகரில் இலக்கியப் பணிகளைத் தொடங்கினர். அவர்களே அசாமியின் முதல் இலக்கணம், அசாம் -ஆங்கில அகராதி ஆகியவற்றை அச்சிட் டனர். இங்கே பேசப்பட்ட அசாமியே மாநிலம் முழுவதற்குமான மொழியாக நிலைபெற்றது. இந்த மொழியே செய்தித்தாள்கள், கல்வி, நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றின் மொழியாக தரம்பெற்றது.

கிறித்துவ மதபோதகர்கள் சிப்சாகருக்குப் பதிலாக மேற்கே வந்து கீழ் அசாமில் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கி இருப்பார்களே யானால் காமரூபியே  அசாமி மொழியாக நிலைபெற்றிருக்கும். யுவான் சுவாங் செவிமெடுத்த மொழியின் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டிருக்கும்!

அக்டோபர், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com