BIGGBOSSTAMIL9 DAY2: பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் குடுமிப்பிடி சண்டை…திரியை கொளுத்திய விஜே பார்வதி!

வி ஜே பார்வதி
வி ஜே பார்வதி
Published on

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் மத்தியில் குடுமிப்பிடி சண்டை தொடங்கி இருக்கிறது. இதற்கான திரியை கொளுத்தியவர் விஜே பார்வதி.

பிக்பாஸ் தமிழின் ஒன்பதாவது சீசனில் முதல் நாளிலேயே சகபோட்டியாளர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்த முதலிருவரில் அகோரி கலையரசனும் வாட்டர் மெலன்ஸ்டார் திவாகரும் இருந்தனர். இதில் கலையரசன் வழக்கம்போல அமைதியாக ஒதுங்கிவிட. நடிப்பு என்ற பெயரில் அஷ்டகோணல்கள் செய்தும் சண்டையிட்டும் மேலும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வாட்டர் மெலன். பிக்பாஸ் வீடு என்றால் பெண்கள் சண்டை இல்லாமலா? அதுவும் முதல் சீசனில் ஜூலி- ஓவியா சண்டை எல்லாம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாது. அப்படி இருக்கையில் இந்த சீசனில் பெண்கள் மத்தியில் முதல் குடுமிப்பிடி சண்டை ஆரம்பித்திருக்கிறது.

பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ், பிக்பாஸ் ஹவுஸ் என வீடு இரண்டாகப் பிரிந்திருக்கிறது. இதில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமே வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். சூப்பர் டீலக்ஸ் ஹவுஸில் இருப்பவர்கள் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸை வேலை வாங்கலாம். இதில் வியன்னா, விஜே பார்வதியை வேலை வாங்க, “நான் எப்படி வேலை செய்யனும்னு நீங்க சொல்லக்கூடாது” என எகிறினார் விஜே பார்வதி. “நீங்க நடந்துக்கிறது எங்களுக்குப் பிடிக்கலை. எங்களுக்கு சுயமரியாதை இருக்கு” என வியன்னாவும் ரம்யாவும் விஜே பார்வதியை எதிர்க்க ‘இனி வேலை செய்ய மாட்டேன்’ என ரிசைன் செய்தார் பார்வதி. இதற்கு முன்பாகவே, விஜே பார்வதியிடம் சுபிக்‌ஷா யதார்த்தமாக நீங்க கண்ணாடி போடலையா என கேட்க அதை சர்ச்சையாக்கினார் பார்வதி. இன்று வெளியாகி இருக்கும் புரோமோவிலும் பார்வதி- சுபிக்‌ஷா பிரச்சினை மற்றும் பார்வதி வேலையை ரிசைன் செய்தைதை வைத்தே நகர்கிறது. இந்த வார இறுதியில் விவாதிக்கப்படும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

அதேபோல, முதல் வார நாமினேஷனில் தான் இல்லை என்பதை தெரிந்து ஆச்சரியப்பட்ட பார்வதி இந்தப் பிரச்சினைகளால் நிச்சயம் இரண்டாவது வார நாமினேஷனில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com