பாடகர் ஸ்ரீனிவாஸ்
பாடகர் ஸ்ரீனிவாஸ்

என் வாழ்க்கையின் பெரிய விருது

 எம்.எஸ்.வி. மாதிரி ஒரு மனிதரையோ, இசையமைப்பாளரையோ நான் பார்த்ததில்லை. அவர் இசைக்குள் போய்விட்டார் என்றால், டியூன் கொட்டும். அவருக்கு முழுக்க முழுக்க ரியல் மியூசிக்தான். உதாரணத்துக்கு ‘எங்கே உந்தன் ஆர்மோனியம்' என்கிற பாட்டு... என்னைக் கூப்பிட்டு போட்ட ட்யூன்.

என்னுடைய அலுவலகம் பக்கம்தான் எம்.எஸ்.வி.யின் வீடு. அவரை சந்திக்க அடிக்கடி டிரை பண்ணுவேன். ஒருநாள் தொந்தரவு தாங்காமல், ‘யார்டா அவன் டெய்லி வந்துட்டு இருக்கான்னு' என்னை ஸ்டுடியோவுக்கு கூப்பிட்டார். ரெண்டு மணி போல வர சொல்லியிருந்தார். நான் ஒன்றரை மணிக்குப் போனேன். மணி ரெண்டு ரெண்டேகால் ஆச்சு. பாட்டு முடிந்து எல்லோரும் வெளியேபோறாங்க. நான் உட்கார்ந்துட்டு இருக்கேன். வெளியே போனவர் என்னைப் பார்த்துட்டு, ‘ஆஹா.. ஆர்மோனியம் செட் பண்ணு,' என்றவர், ‘இங்க வாப்பா..ஸ்ருதி என்ன?' என்று கேட்டார். நான் ஏதோ ஒரு ஸ்ருதியை சொன்னேன். பாடு என்றார். மெஹ்தி ஹாசன் பாட்டைதான் பாடினேன். பாடி முடித்ததும், பக்கத்திலிருந்தவர்களிடம் ‘நம்பரை நோட் பண்ணிக்கோப்பா,' என்றவர்,' என்னிடம் கூப்பிடுறேன்..' என்றார். ஒரு வருஷம் கழிச்சு என்னைக் கூப்பிட்டுப் போட்டதுதான் மேலே சொன்ன ட்யூன்.

சாட் வித் சென் நிகழ்ச்சி
சாட் வித் சென் நிகழ்ச்சி

படையப்பா படத்தில் நான் பாடிய ‘மின்சாரப் பூவே' பாடலுக்கு மாநில அரசு விருது கிடைத்தது. தேர்வுக் குழுவில் எம்.எஸ்.வி. இருந்தார். அந்த விருதுதான் என் வாழ்க்கையில் பெரிய விருது.  ஏனெனில் அது எம்.எஸ்.வி கொடுத்த விருது. அப்ப யாரோ எம்.எஸ்.வி.யிடம் சொல்லியிருக்காங்க, ‘இந்தப் பாட்டை வேறு ஒருத்தர் பாடினாங்க.  ஸ்ரீநிவாஸ் இதுக்கு  ட்ராக் மட்டும் பாடி இருந்தார். இரண்டையும் கேட்டு எனக்கு ஸ்ரீநிவாஸ் பாடினதுதான் பிடிச்சிருக்குனு' ரஜினிகாந்த்  சொல்லிட்டார். அதனால்தான் இந்த பாட்டு பாட அவருக்கு சான்ஸ் கிடைச்சிருக்குன்னு.' அதுக்கு எம்.எஸ்.வி பதில், ‘நான் அன்னைக்கே சொன்னேன். அந்த பையன் நல்லா பாடுறானு. எவனும் கேட்கல. இன்னைக்கு ரஜினி சொல்றார்னு சொல்றீங்கன்னு' என்று சொல்லி சிரித்தாராம்! எவ்வளவு பெரிய விஷயம்!

 (பாடகர் ஸ்ரீநிவாஸுடன் ஷாஜி சென் அந்திமழைக்காக நிகழ்த்திய  உரையாடலில் ஒரு சிறு பகுதி)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com