மிக்ஜம் புயல் பாதிப்பு
மிக்ஜம் புயல் பாதிப்புகார்த்தி, பிரகாஷ்

கிண்டி முதல் பள்ளிக்கரணை வரை: வெள்ள பாதிப்புகளின் படத்தொகுப்பு! #chennai_rain_flood_photo_story

மிக்ஜம் புயல், பெரு மழையின் பாதிப்புகள் சென்னையைவிட்டு இன்னும் அகலாத நிலையில், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள- வேளச்சேரி முதல் பள்ளிக்கரணை வரையிலான பகுதிகளில் ஒரு விரைவுப் பார்வை (08-12-2023)!

இவர்கள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சென்னைக்கு வந்துள்ள 19 துப்புரவுப் பணியாளர்கள். கடந்த 4 நாள்களாக சென்னை அடையாறு பகுதியில் தங்கி, கிண்டி பகுதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேளச்சேரி, ஐந்து பர்லாங் சாலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட எரிபொருள் நிலையம் அருகே, சுமார் 50 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த கட்டுமானப் பணியாளர் ஜெயசீலன், நரேஷ் ஆகியோரின் உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம்.

திருவொற்றியூரை அடுத்த திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேளச்சேரி பகுதியில் கடந்த 4 நாள்களாக மீட்புப் பணியில் ஈடுபட்ட பிறகு இளைப்பாறியபொழுது!

சென்னை வேளச்சேரி ராம்நகரில் இன்னும் வடியாத வெள்ள நீர்... படத்தில் என்னவோ முட்டிக்குக் கீழ்தான்... உள்ளே போகப்போக இடுப்புக்குக் கீழ் தண்ணீரில் நடந்து வரும் இளைஞர்கள்.

பள்ளிக்கரணை, பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி எதிரில் பேருந்துநிறுத்தம், சாலையின் முக்கால்வாசி முட்டியளவு தண்ணீர் நிற்க, சாலையின் மையப்பகுதியை ஒட்டியபடியே வண்டிகளை ஓட்டிச்செல்லும் வாகனதாரிகள்.

பெற்றோரைத் தேடப் போய் உயிரிழந்து மூன்று நாள்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட அருணின் வீடு உள்ள பகுதி... பள்ளிக்கரணை காமட்சி அம்மன் பிரதான சாலையில் உள்ளே இருப்பவர்களும் வெளியிலிருந்து அங்கே செல்லவேண்டியவர்களும் படகுக்காகக் காத்திருந்தனர்.

பள்ளிக்கரனை காமகோட்டி நகரில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், குழந்தையுடன் துணிமணிகளை கட்டிக்கொண்டு வெளியேறும் பெண்மணி.

வேளச்சேரியில் புதிய கட்டடக் கட்டுமானப் பகுதியில் சுமார் 50 அடிப் பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஜெயசீலனின் அடையாள அட்டை.

logo
Andhimazhai
www.andhimazhai.com