ஆண்கள் படிக்கவேண்டாம்! – செக்ஸ் முடிந்ததும்  செத்துப்போகும் ஆண் உயிரினங்கள்… பரிதாப பட்டியல்!

ஆண்கள் படிக்கவேண்டாம்! – செக்ஸ் முடிந்ததும் செத்துப்போகும் ஆண் உயிரினங்கள்… பரிதாப பட்டியல்!

இயற்கையின் வினோதங்களில் இவையும் அடங்கும்
Published on
ஆக்டோபஸ்
ஆக்டோபஸ்

ஆக்டோபஸ்

கடலில் வாழும் பெண் ஆக்டோபஸ்கள் தங்களோட உறவு கொள்ளும் ஆண்களை அப்படியே நசுக்கி சாவடிச்சிடுமாம். பிறகு உடலைக் கொண்டுபோய் தங்கள் பொந்தில் வெச்சி கொஞ்ச நாள் சாப்பிடும். குஞ்சுகள் உருவாவதற்காக வேட்டை ஆட அலையவேண்டாமே என்பதற்காக இந்த ஐடியாவாம்! அடப்பாவி ஆக்டோபஸ்களா?

மழைப்பூச்சி

கடமையில் கண்ணா இருக்கணும்னு சொல்லுவாய்ங்க. ஆனா இந்த அளவுக்கு இருக்கணுமான்னு தெரியல. Praying Mantis எனப்படும் இந்த பூச்சியினத்தில் மேட்டிங் நடவடிக்கையின் போது ஆணின் தலையை பெண் கடித்து சாப்பிட்டுவிடும். ஆனாலும் கடமையே கண்ணாக தலையை இழந்தபோது ஆண்கள் மேட்டிங் முடிச்சிட்டுதான் சாவும். தலையில்லன்னா என்னடா? மத்தது முழுசாதானே இருக்கு? என்னா ஒரு வைராக்கியம்?

சாலமன் மீன்கள்

நன்னீரில் முட்டையில் இருந்துபிறந்து ஆற்று வழியாக கடலுக்குச் சென்று வளருபவை சாலமன் மீன்கள்.  பல ஆண்டுகள் கடலுக்குள் வளர்ந்தபின் ஒருநாள் அவற்றிற்கு.. அடடா நாம் இவ்வளவுகாலம் மேட்டிங் பண்ணாமல் பிரம்மாரியா வாழ்ந்துட்டமேன்னு தோன்றி, தாங்கள் பிறந்த இடம் நோக்கிப் பயணம் மேற்கொள்ளும். இவிய்ங்க கடல் நீரில் இருந்து நன்னீரில் நுழைஞ்சதுமே சாப்பிடுறத நிறுத்திட்டு, உடலில் இருக்கும் சேகரமானத சக்தியை பயன்படுத்தி பயணம் செய்வாங்க. 2000 கிமீ கூட அந்த பயணம் இருக்கும். அங்கே வந்து பெண் மீன்களுடன் மேட்டிங் பண்ணி, பெண் மீன் முட்டைகளை கருவுறச் செய்து செத்துடுறாங்க. இதிலே இன்னொரு விஷயம் ஆண் மீன்கள் மட்டும் சாவுறதில்லை.. முட்டை போட்ட பெண் மீன்களும் செத்துரும்!

பச்சை அனகோண்டா

சக்திவாய்ந்த பெண் அனகோண்டாவுடன் உறவுகொள்ள ஒரே நேரத்தில் பல ஆண் பாம்புகள் முயற்சி செய்யும். 13 பாம்புகள் வரை ஒரே பெண் பாம்பை சுத்திக்கும். ஆண் பாம்புகள் சைசில் சின்னதாக இருக்கும். இந்த போட்டியில் ஒரு பாம்புக்குத்தான் உறவு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்! ஒரு பெரிய பந்து மாதிரி பாம்புகள் கட்டிட்டு உருள்கையில், பெண் பல ஆண் பாம்புகளை சாப்பிட்டுவிடும். ஏழு மாசம் கர்ப்பகாலம். அவ்வளவு நாள் பெண் பாம்பு சாப்பிடாம இருக்கும். அதுக்கு சக்தி வேணும்ல…

குளவியின சிலந்தி

குளவியின சிலந்தின்னு  ஒண்ணு இருக்கு. இதில் பெண் சிலந்திகள் அளவில் பெருசா இருக்கும். பெரிய பெண் சிலந்தி அசந்த நேரம் ஆண் சிலந்திகள்  உறவு கொண்டுருவாய்ங்களாம்! முடிஞ்ச வுடனே தங்களோட ஆணுறுப்பு மாதிரி இருக்கும் உறுப்பை (pedipalp) சிலந்தியோட உறுப்புலயே முறிஞ்சிடுமாம்.. வேறு யாரும் அங்க உறவு கொள்ளாம அடைச்சிகிடுமாம். மேட்டர் முடிஞ்சதும் பெண் சிலந்தி அப்படியே திரும்பி, இந்த ஆண்களை லஞ்ச் ஆக சாப்பிட்டுடும். அதில சில கெட்டிக்கார ஆண்கள் மேட்டர் முடிஞ்சதும் தப்பிச்சி ஓடிடுவானுங்க. ஆனால் இன்னொருவாட்டி இன்னொரு சிலந்தியோட உறவு கொண்டு வழக்கம் போல் இன்னொரு ஆண் உறுப்பை முறிச்சி கிட்டு கிளம்புவாய்ங்க. அப்படியே செத்திருவானுங்க.( இப்படி ரெண்டு வாட்டிதான் உறுப்பை முறிச்சிக்கிட முடியுமாம்!)

ஆண்டிகைனஸ்!

வயிற்றில் பை உடைய பாலூட்டிகளில் ஒன்று ஆண்டிகைனஸ். இவை 12 செமீ மட்டுமே நீளம் கொண்டவை. மொத்த உடம்போட நீளம் அது!(நீர் என்ன நினைச்சீர்?) ஆஸ்திரேலிய காட்டுப்பகுதிகளில் காணப்படுவது.  பெண் இனத்தைத்  தேடி உறவு கொள்வதுதான் தங்கள் வாழ்வின் லட்சியம் என இவற்றின் ஆண்கள் செயல்படும்போல.. மேட்டர் முடிஞ்சதும் செத்து விழுந்திடும். அவ்வளவு உக்கிரமான செயல்பாடு.. கிட்டத்தட்ட 14 மணி நேரம் தொடர்ந்து இயங்குவாய்ங்களாம்.. அப்புறம் சாகாம என்ன செய்றது?

சிவப்பு முதுகு சிலந்தி

இதுல என்ன விசேசம்னா.. ஆண் சிலந்தியை பெண் சிலந்தி கடிச்சு சாப்பிடாம விட்டாலும், என்னைத் தின்னுன்னு அதோட வாயில போய் ஆண் சிலந்திகள் விழறதுதான்! ஆண் சிலந்திகள் விந்தணுக்களை தனியா ஒருபையில் வெச்சிருக்கும். அவற்றை பெண் சிலந்திகள் உடலில் திணிக்கும். அப்போ அவற்றின் கவனத்தை திசை திருப்ப தன் உடலையே தின்னக் கொடுக்கும்! நிறைய விந்தணுக்களை அப்பதான் செலுத்த முடியும்! அடேய்  மிகப்பெரிய தியாகிடா நீயி…

ஆண் தேனீ

தேன் கூட்டில் ஆண் தேனீக்கு கொடுக்கெல்லாம் கிடையாது. மத்ததெல்லாம் உண்டு. இதோட ஒரே வேலை ராணித் தேனீயை கருவுறச் செய்வதுதான். ராணியை மேட்டிங் பண்ணுபோது முழு சக்தியையும் பயன்படுத்தணும் அப்ப என்னாகும்னா, அடிவயிறே கூட பிய்ந்துபோய்விடும். அத்தோட சோலி முடிஞ்சது. உடனே அடுத்த ஆண் தேனி அந்த இடத்தைப் பிடிச்சிகுடும்! தேனெடுத்து நக்கும்போது இதக் கொஞ்சம் யோசிங்கப்பா...

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com