தம்பதிகளே, சண்டை போடுங்கள்!

தம்பதிகளே, சண்டை போடுங்கள்!

மணவாழ்வு

கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருக்கலாம்& இந்தவசனம்தான் உலகத்திலேயே ஒண்ணாம் நம்பர் மித்! என்றார் நண்பர் ஒருவர்.

உடனிருந்த நண்பர்களும் ஆமாம் என்றவாறு கலகலவென சிரித்தனர். இவர்கள் அனைவரும் கல்யாணம் ஆனவர்கள். அந்த குழுவில் இருந்த கல்யாணம் ஆகாத ஒரு பையனுக்கு எதுவும் புரியவில்லை! புரியாதுதான். திருமணத்துக்கு முன்னால் அதன்மீது ஏராளமான ஆசையான எதிர்பார்ப்புகளை சமூகம் வளர்த்து வைத்துக் கொள்கிறது. கல்யாணம் ஆனபின்னால் எல்லா எதிர்பார்ப்புகளும் விலகி எதார்த்தம் புரிய ஆரம்பிக்கிறது.

ஆசை ஆசையாய் காதலித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் செய்துகொண்ட திருமணங்கள் ஏன் பாதியில் முடிந்துவிடுகின்றன? இதுபற்றி ஆய்வு செய்திருக்கும் அமெரிக்க பேராசிரியர் ஒருவர் முதல் திருமணத்தின்போது எக்கச்சக்க எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். தம்பதிகளுக்குள் அது ஏமாற்றத்தையே உருவாக்குவதால் பிரிகிறார்கள் என்று சொல்கிறார். சரி அது முடிந்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்போது எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும். ஆனாலும் விவாகரத்துகள் குறைவதில்லை. மூன்றாவது மற்றும் அதற்கடுத்த திருமணங்களிலும் விவாகரத்து விகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறதாம். இதற்கு முந்தைய அனுபவங்களால் ஏற்படும் கசப்பான ஒட்டுதலற்ற உணர்வே காரணமாம்.

BEFORE YOU PLAN YOUR WEDDING...PLAN YOUR MARRIAGE என்ற நூலை எழுதி இருக்கும் க்ரேக் ஸ்மாலி, எரின் ஸ்மாலி இருவரும் திருமணம் தொடர்பான பல தவறான எண்ணங்களை உடைக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைத் தெரிந்துகொள்வது நல்லது.

#1. புருசன் பொண்டாட்டி சண்டை போட்டுக் கொண்டால் உறவில் விரிசல் ஏற்படும்

கிடையேவே கிடையாது. சண்டை இல்லாத, உரசல் இல்லாத மணவாழ்க்கையே இல்லை. நல்லதுக்காகவும் நலனுக்காகவும் போடும் சண்டைகள் மணவாழ்வை வலுவாக்கும்.

#2. என் வீட்டுக்காரிக்கு/ வீட்டுக்காரருக்கு எனக்கு என்ன பிடிக்கும் என்பது சொல்லாமலே தெரியும்.

எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் இன்னொருவர் மனதில் இருப்பதை சரியாகத் தெரிந்துகொள்ளும் திறன் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆகவே தேவையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அப்போதுதான் புரியும்

#3என்னில் பாதி அவள்/அவன்

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலாம். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து ஒருவராக முடியாது. ரொம்ப கஷ்டம்.

#4 இவள்/ இவன் எனக்கு திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியைத் தருவான்.

நம்ம சந்தோஷத்தை மனைவியிடமோ கணவனிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது. அது நமக்குள் இருந்து வரவேண்டும்.

#5 காதல் நிலையானது. கல்யாணம் ஆன பின்னும் மாறாமல் தொடரும்

ம்ஹூம். காதல், அன்பு இதெல்லாம் திருமணபந்தத்திலும் சும்மா தொடராது. அதை  நீங்கள்தான் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்காக செய்யவேண்டியவற்றைச் செய்தே ஆகவேண்டும்.

மேலும் கல்யாணம் பற்றிய பல  புனைவுகளைத் தெரிந்துகொள்ள மேல் சொன்ன நூலைப் படிக்கலாம்.

ஜூலை, 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com