’ஒரு கல்யாணம் நடக்கணும்னா ஆயிரம் பொய் சொன்னாலும் தப்பில்லை’ என முன்னோர்கள் சொன்னாலும் சொன்னார்கள், அதை இப்போதும் விடாப்பிடியாக கடைப்பிடிக்கும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் என்ன செய்ய இது வைரல் காலமாச்சே..!
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, பஜவுரா கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இவர்களது திருமண ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்றது.
திருமணத்துக்கு முன் குறிப்பிட்ட சடங்குகள் செய்வதற்காக, மணமேடையில் இருந்த மணமகனின் தலையில் வைத்துக் கொள்ளும் படி பூவால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தொப்பி கொடுக்கப்பட்டது.
இதை மணமகன் அணிந்தபோது வழுக்கைத் தலையை மறைப்பதற்காக வைத்திருந்த விக் சற்று நழுவியது. இதனால் அவரது வழுக்கைத் தலை அனைவருக்கும் தெரிவித்து விட்டது. அப்போதுதான் மணமகள் உள்ளிட்ட அவரது குடும்பத்திற்கு மணமகளுக்கு வழுக்கைத் தலை என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் குடும்பத்தினர் மணமேடையிலேயே மணமகனைத் தாக்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதும் வெளிவந்தது. அடுத்தடுத்து உண்மை வெளிவந்ததால் அதிர்ச்சியடைந்த மணமகள் குடும்பத்தினர் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதை எவரோ படம் பிடிக்க, அந்த வீடியோ சமூக ஊடகளில் வைரலாகி வருகிறது.