விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

வேதாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் என்ன வித்தியாசம்? : புஷ்கர் - காயத்ரி

விக்ரம் வேதா படத்துக்கான திரைக்கதை பாதி உருவானபோதே வேதா பாத்திரத்துக்கான நடிகர் விஜய் சேதுபதி என்று எங்களுக்குத்தோன்றிவிட்டது. ஏற்கெனவே அவரை முன்பு சில நிகழ்ச்சிகளில் பார்த்திருந்தோம் என்பதைத் தவிர பெரிய பழக்கம் ஏது இல்லை. அப்போது தூத்துக்குடியில் ஒரு படப்பிடிப்பில் இருந்த அவரை சந்தித்து இரண்டு நாட்கள் கதை சொன்னோம். படப்பிடிப்பு முடிந்ததும் இரவில் கதை சொல்வோம். முதல்நாள் முதல் பகுதி சொல்லி முடித்தபின்னர் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் படத்தைப் பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். அப்பவே இந்த பாத்திரத்தை விஜய்சேதுபதிதான் செய்யவேண்டும் என்று எங்களுக்குள் மேலும் உறுதி ஆகிவிட்டது. அவர் விக்ரமாக யார் நடித்தாலும் பரவாயில்லை வேதாவாக நான் நடிக்கிறேன்,

நீங்க எப்ப பண்றீங்களோ, எப்படிப் பண்றீங்களோ அதெல்லாம் எனக்குப் பரவாயில்லை, என்று

சொல்லிவிட்டார்.

வேதா கதாபாத்திரத்தை வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்து  கற்றுக்கொண்டு உருவான ஒரு மனிதன் என்கிறமாதிரி நாங்கள் எழுதி இருந்தோம். விஜய்சேதுபதியிடம் பேசுகையில் அவரும் மிகச்சரியாக இதேபோல் வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து பாடம்கற்று தனக்கென்று ஒரு பார்வையை வடிவமைத்துக்கொண்ட பாத்திரமாகவே இருக்கிறார் என்பது எங்களுக்குப் புரிந்தது. உலகத்தைப் பற்றி, சகமனிதர்களைப் பற்றி பேசுவது எல்லாவற்றையும் கவனித்தபோது வேதாவும் விஜய் சேதுபதியும் வேறுவேறு ஆட்கள் அல்ல. சேதுபதி நடிப்புத்துறையில் இருக்கிறார். வேதா  குற்றப்பின்னணி கொண்டவன் அவ்வளவுதான் வித்தியாசம் என்று தோன்றியது. நடிகருக்கும் கதாபாத்திரத்துக்கும் இவ்வளவு ஒற்றுமை இருந்ததால் சேதுபதியைவிட வேறு யாரும் இதைச் செய்யமுடியாது என்றே தோன்றியது.

வேதாவின் உடல்மொழியைப் பொருத்தவரை, இந்த பாத்திரம் விஜய்சேதுபதியின் மூளைக்குள் சென்று பதிந்தவுடன் தானாகவே உருவாகிவந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

வேதாவின் உடல்மொழியைப் பொருத்தவரை, இந்த பாத்திரம் விஜய்சேதுபதியின் மூளைக்குள் சென்று பதிந்தவுடன் தானாகவே உருவாகிவந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

விஜய் சேதுபதி தன்னைச் சுற்றி இருக்கும் மக்களைக் கூர்ந்து கவனிப்பார். அது அவரிடம் இருக்கும் மிகப்பெரிய பண்பு. அவர் எல்லாருடனும் பழகவேண்டும் என்று நினைக்கிற ஒருவர். விக்ரம் வேதா படப்பிடிப்பு பெரம்பூரில் நடந்தது. அவர் மாடி மீது ஓடும் காட்சியைப் படம் பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது பக்கத்து கட்டடத்தில் இருந்து ஒரு அம்மா, விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதி.. என்று கத்திக்கொண்டிருந்தார். அவரிடம் சேதுபதி பேச்சுக்கொடுத்தார். என்னக்கா என்ன பண்றீங்க.. சமையலா? என்ன சமையல்? ஓ பிரியாணியா? எனக்கு வேணுமே என்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அம்மாவும் சமைத்து மதியம் அவருக்கு கொண்டுவந்து கொடுத்தார். இந்த மாதிரி எளிய தொடர்புகளை ஏற்படுத்தும்

ஒரு மனிதரை சினிமா துறையில் நான் பார்த்ததில்லை. ஒரு சின்ன வட்டத்தில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் இத்துறையில் உள்ளார்கள். இந்த வட்டத்தைத் தாண்டி உலகத்தைப் பார்க்கவேண்டும் என்று முயற்சி செய்கிற ஒருவர் சேதுபதி. எப்ப வெளிப்புற படப்பிடிப்பு இருந்தாலும் யாராவது ஒருத்தரைப் பிடித்துப்

பேசிக் கொண்டிருப்பார். எதாவது ஒன்று அவருக்குக் கிடைக்கும்.

பலம்: அவரை நாங்கள் ’ ணூணிணிtஞுஞீ’ ஆர்டிஸ்ட் என்று சொல்ல விரும்புகிறோம். அவர் நடிக்கும் எல்லா படங்களையும் பாருங்கள், அதில் அவர் நிஜமனிதன் போலவே இருப்பார். அது எங்கிருந்து வருகிறது என்றால் அவர் அந்த பாத்திரங்களின் எல்லா உணர்ச்சிகளையும் தன் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்வார். அவர் முதல் படத்திலிருந்து பார்த்தீர்கள் என்றால் ஒரு நடிகர் ஒரு பாத்திரமாக நடிக்கிறார் என்று இருக்காது. இந்த பாத்திரம் ஒரு நிஜமான ஆள். நாம் சாலையில் போனால் அந்த ஆளைப் பார்க்கலாம். காசிமேடு போனால் வேதாவைப் பார்க்கலாம் என்றுதான் இருக்கும். முப்பரிமாண பாத்திரமாகச் செய்கிறார் எனலாம்.

பலவீனம்: பலவீனம் என்ற சொல்லை விட

சினிமா மீது இருக்கும் பேராசை என்று சொல்லலாம்.  எதாவது ஒரு பாத்திரம் பிடித்துவிட்டால் அதை எப்படியாவது பண்ணிவிடவேண்டும் என்று நினைப்பார். அதற்காக இரவும் பகலும் நடித்து டைம் ஒதுக்கி செய்தே தீரவேண்டும் என உழைப்பார். விட்டுவிடமாட்டார்.

நவம்பர், 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com