செய்திச்சாரல்: டிசம்பர், 2022

செய்திச்சாரல்: டிசம்பர், 2022

ஆனை காட்டுலயே இருக்கட்டுமப்பூ!

முந்தி ஒரு நாய் வளத்தேன். நாற்காலி காலியா இருந்தா குபுக்குன்னு நாற்காலிமேல தாவி ஏறி உக்காந்துக்கும்.

ஒரு நாள் அது நாற்காலியில உக்காந்திருக்க, நான் தரையில உக்காந்திருக்கிறதை ஊரில் இருந்து வந்திருந்த தாத்தா பாத்துட்டாரு. அம்புட்டுத்தான். கடிச்சுத் துப்பிப்புட்டாரு: ஏண்டா கூரு கெட்ட கூமுட்டை, நாய நாக்காலியில உக்கார விட்டுப்புட்டு நீ தரையில உக்காந்திருக்கியே, அம்மஞ்சல்லி* அளவுக்காச்சும் அறிவிருக்கா உனக்கு? என்னடா வழக்கம் இதெல்லாம்? சல்லிப் பயலே!

(*அம்மன் சல்லிங்கிறது புதுக்கோட்டை சமசுத் தானத்துல அடிச்ச காசு. அரையணா மாதிரின்னு வச்சுக்குங்களேன்.)

நாய நாக்காலியில உக்கார விட்டதுக்கே இந்தத் திட்டுத் திட்டுறாரே, ஆனையக் கொண்டாந்து ஆல் (HALL) வீட்டுல உக்கார வச்சா எம்புட்டுத் திட்டுவாரு?

அப்படித் திட்டுனார்ன்னாலும் அது சரிதான்னு வைங்களேன்! யோசிச்சுப் பாருங்க! நாய் நாக்காலியில உக்காந்தாலாச்சும் பரவாயில்லை, நம்ம தரையிலயாவது உக்காரலாம். வாய்ப்பு இருக்கு.

ஆனா ஆனையக் கொண்டாந்து நடுவீட்டுக் குள்ள உக்கார வச்சோம்னு வச்சுக்குங்க, நம்ம நடுத்தெருவுலதான் நிக்கணும்!

நல்லவேளை, நம்மகிட்ட நாய்தான் இருந்துச்சு. ஆனை இல்லை.

ஆனை காட்டுலயே இருக்கட்டுமப்பூ. அப்பத்தான் நமக்கு வீடு.

 கரு.ஆறுமுகத்தமிழன்,

ஃபேஸ்புக்கில் எழுதியது

பத்தாயிரம் பேரைக் குறைக்கும் கூகுள்!

ட்விட்டரிலும் சரி, பேஸ்புக்கிலும் சரி ஆயிரக்-கணக்கில் ஆட்களை வீட்டுக்கு அனுப்பும் காலம் இது. உலகளாவிய அளவில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் முதலீட்டாளர்கள் தரும் அழுத்தத்தால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுளும் தன் பணியாளர்களில் சுமார் 6 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பப்போகிறதாம். இதுவே சுமார் 10,000 பேர் வரைக்கும் வருகிறது. இப்போதைக்கு எதிர்பார்த்த அளவுக்கு பணிபுரியாத ஆட்களைக் கணக்கு எடுத்து வருகிறார்களாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கூகுளில் ஆள்குறைப்பு தொடங்க உள்ளதாகக் கூறுகிறார்கள்!

டே.. எப்புட்ரா?

பாம்பு கடித்து ஆட்கள் இறப்பார்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆள் கடித்து பாம்பு செத்தால்? சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவனை நல்லபாம்பு கடித்துள்ளது.  இதனால் கோபமடைந்த சிறுவன் பாம்பைக் கடித்துள்ளான். இதில் பாம்பு இறந்துவிட்டது. சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கே ஒருநாள் சிகிச்சைக்குப் பின்னால் வீடு திரும்பினான். தம்பி எப்புட்ரா?

எனது பள்ளி!

மும்பை திரையுலக பிரபல நடிகை கீர்த்தி சனோன்,டெல்லியில் தான் படித்த பள்ளிக்குப் போய் ஒரு புகைப்படம் போட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பேடியா‘ என்கிற இந்திப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்குத்தான் தன் பள்ளிக்குப் போயிருக்கிறார். ‘இங்கிருந்து நான் நிறைய பெற்றுள்ளேன். திரும்பி இங்கே வந்து சாதித்துவிட்டேன் எனச் சொல்வதில்

ஆண்களே.  ஆபத்து !

அய்யா ஆண்மக்களே கவனிச்சீகளா? சமீபத்தில் வெளியான அறிவியல் சஞ்சிகை கட்டுரை ஒண்ணு, கடந்த 46 ஆண்டுகளாக உலகில் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் விந்து அடர்த்தியும் குறைஞ்சிகிட்டே வருவதாகவும் இப்போ அது ஐம்பது சதவீதத்துக்கும் கீழ குறைஞ்சிட்டதாகவும் சொல்லி இருக்கு.

வழக்கமா ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில்தான் இப்படி இருக்கும்னா இந்தியாவிலயும் இதுதான் நிலைமையாம்! இப்படியே குறைஞ்சிட்டே வந்துச்சுன்னா எதிர்காலத்தில் மனித இனமே பெரும் ஆபத்துக் குள்ளாகுமேன்னு அந்த கட்டுரை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கறாங்க. 

சுற்றுசூழல் மாறுபாடு, வேதிப்பொருட்கள் பயன்பாடு ஆகியவற்றால் கருப்பையில் இருக்கும்போதே ஆண் சிசுவுக்கு ஏற்படும் பாதிப்பால் இந்த பிரச்னை ஏற்படுதாம். ஒருவேளை மனித இனத்துக்கு அடுத்த ஆப்பு, ஆண்களை மலடாக்குவதன் மூலம் இருக்குமோ? இயற்கையே இப்படி காயடிச்சு விட்டுடும்போல இருக்கே...

‘‘ஒவ்வொரு  பதினொரு நிமிடங்-களுக்கும் உலகில்  ஒரு பெண் தனக்கு நெருங்கிய கூட்டாளி அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறாள்!

-அண்டானியோ குட்டர்ஸ்,

ஐ.நா. பொதுச் செயலாளர்

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com