தூரிகை -திருநாவுக்கரசு

தூரிகை -திருநாவுக்கரசு
Published on: 

மதுரையில் வசிக்கும் ஓவியர் திருநாவுக்கரசு தன் தூரிகையால் பெண்ணியம் பேச விரும்புகிறவர். நவீன கலைப்பாணியில் பெண்ணியக்கோட்பாடுகளும் கிராமியக் கலாச்சாரங்களும் இவர் கேன்வாஸ்களில் உயிர்பெறுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் பயின்றவர். 2006 - ல் ப்ரான்ஸ் நாட்டில் கலை இயக்குநராகப் பணிபுரியச் சென்றவர், நாடு திரும்பியதும் அனிமேஷன் துறையில் கால்பதித்தார். கல்லூரி ஒன்றில் அனிமேஷன் துறை பேராசிரியராகப் பணிபுரிந்தவர், தற்போது முழு நேர ஓவியராக உள்ளார். பல கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கும் இவர் 2016 ஆம் ஆண்டு மாநில அரசின் ஓவியருக்கான விருது வழங்கப்பெற்றவர். திருநாவுக்கரசுவின் ஓவியங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக.

ஜூலை, 2020.