Actor Karthik kumar
நடிகர் கார்த்திக் குமார்

Watch Video: ராக்கெட்ரி ஒரு தவம்! - நடிகர் கார்த்திக் குமார்

Published on

நடிகர், ஸ்டாண்ட் அப் காமெடியன், இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருவபர் கார்த்திக் குமார். அவருடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி நடத்திய நேர்காணலின் சிறு பகுதி:

“மாதவனின் முதல் படம் அலைபாயுதே. அப்படித்தான் அவரின் சினிமா பயணம் தொடங்கியது. மாதவனை முதலில் பார்த்தபோது வளர்ந்து வரும் இளம் நடிகராகவும், நிறைய படங்களில் நடிக்கக் கூடியவராகவும்தான் இருப்பார் என்று நினைத்தேன். ராக்கெட்ரியில் அவரை பார்த்தபோது முன்பு பார்த்த மாதவனை அவரிடம் பார்க்க முடியவில்லை.

பெரிய நடிகராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாதவன் மாறியிருக்கிறார். கமல்ஹாசனிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்தும் நடித்துள்ளார். மணிரத்னம் படங்களிலும் நடித்துள்ளார்.

ராக்கெட்ரியில் அவரைப் பார்த்த போது மாதவன் ஜென் மனநிலையிலிருந்தார். அவர் என்னிடம் படத்தின் கதையை சொன்னபோது, “மேடி நீங்க கதை சொல்லுறீங்களா...?” எனக் கேட்டேன். ஆனால், அவர் கதை சொன்ன விதம், படம் காட்சியாய் விரிந்தது.

நானும் அவரும் பதினெட்டு வருடமாக சினிமாவில் இருக்கிறோம். ஆனால், மாதவன் மிகப்பெரிய இடத்தை அடைந்திருந்தார்.

ராக்கெட்ரி படம் அல்ல: அது ஒரு தவம். அந்த படத்தில் பி.எம். நாயர் என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன். பி.எம். நாயருடன் இரண்டு மூன்று நாள்கள் பழகினேன். பார்க்க போலீஸ் மாதிரியே தெரியமாட்டார். புத்திக் கூர்மை கொண்ட வயதானவர் போல்தான் தெரிவார். ராக்கெட்ரியில் வேலை பாரத்தது ரொம்ப வித்தியாசமான அனுபவம்.” என்கிறார் நடிகர் கார்த்திக் குமார்.

வீடியோ லிங்க்:

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com