இயற்கையின் குழந்தை

இன்னொருவனின் கனவு - 29

ஒரு தவறான புரிதல் இருக்கிறது.

கற்றறிந்தவர்கள் என்று நம்மால் அறியப் படுபவர்களிடமும்.

அது...

சினிமா வெறும் காண் எழுச்சி,கேளிக்கை அனுபவம் மட்டுமே என்பதாக.

சினிமா ஒரு ஊடகம் அல்ல என்பதாக.

அது தவறு என்பதற்கு நாம் காணும் இந்த சினிமாவின் 'உருவான கதை' ஒரு சிறந்த உதாரணம்.

into the wild(2007) என்கிற சினிமாவை உலகத் தியேட்டர்களில்,நம் வீட்டு ஹோம் தியேட்டர்களில் நாம் அறிந்தது சீன் பென் (Sean Penn) என்கிற ஜீனியஸ் கனவு காண்பவனிடம் இடம் இருந்து.

அந்தப் புள்ளி, ஒரு நிஜ மனிதனின் கதைக்கு நம்மை அழைத்துச் சென்றது.அது அங்கிருந்து அந்த நிஜ மனிதனின் அனுபவங்களை முதலில் பதிவு செய்த ஒரு எழுத்தாளரிடம் அழைத்துச் செல்ல இருக்கிறது. அது அங்கிருந்து அந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் ஆகப் பணி புரிந்த ஒரு பிரபல பத்திரிகைக்கு அழைத்துச் செல்லும்.

சினிமா என்பது சிறந்த ஊடகக் கூட்டுப் பணி.

பாமரனின் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான் இன்றும்,எங்கும்.

ஏனெனில், தனி மனித ஆர்வத்தில் இருந்து தான் மொத்த மானுடத்தின் ஆர்வம் துளிர் விடுகிறது.

ஜான் கிராக்கர் -Jon Krakauer (born April 12, 1954),அமெரிக்க பயண எழுத்தாளர்,மலை ஏறி சிகரங்கள் தொட்டவர் (நிஜமாகவே-எவரெஸ்ட் தொட்டவர்). அவுட் சைட்(Outside) பத்திரிகையில் அவர் எழுதிய பயணத் தொடர்களும்,கதைகளும் மிகப் பிரபலம்.பிற்காலத்தில் அவருடைய கட்டுரைகள் நேஷனல் ஜியோ கிராபிக் பத்திரிகையிலும் வெளி வந்திருக்கின்றன.Into the Wild, Into Thin Air, Under the Banner of Heaven, and Where Men Win Glory: The Odyssey of Pat Tillman ஆகியவை அவரின் பெஸ்ட் செல்லர்ஸ்.இன் டு தின் ஏர் (into thin air),கிராக்கரின் எவரெஸ்ட் அனுபவம்.. பயணம்,அதிலும் சாகசப் பயணம் எப்படி பணம் பிடுங்கும் மரண வியாபாரமாகி விட்டது என்பதைச் சொன்ன அவரின் சொந்த அனுபவம். இமாலயா,நேபாள் போகிறவர்கள் அங்கிருக்கும் ஹெலி காப்டர்களில் ஏறும் முன் கிராக்கரின் 'into thin air' பயணப் புத்தகத்தைக் கண்டிப்பாகப் படிக்கவும்.

அவருடைய into the wild புத்தகம் 1996 -இல் வெளியாகி,நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த விற்பனை தர வரிசையில்,தொடர்ந்து இரண்டு வருடங்கள் இடம் பெற்ற பயண அனுபவம்.

கிறிஸ்டோபர் ஜான்சன் மெக்காண்டில்ஸ் இறந்து போன (August 18, 1992),ஒரு வருடம் கழித்து கிராக்கர் அவனைப் பற்றிய விபரங்களைத் தேட ஆரம்பிக்கிறார். தேடத் தேட தன்னை அவனிடம் உணர்கிறார்.அவரைப் போலவே,அவனும் சாகசப் பயணங்களில் விருப்பம் உள்ளவனாக இருந்தான் என்று அறிகிறார்.'ஒரு அப்பாவியின் மரணம்'(the death of an innocent) என்கிற தலைப்பில் அவனைப் பற்றி 'அவுட்சைட்' (outside) இதழில் நீண்ட ஒரு கட்டுரை எழுதுகிறார் (jan-1993)

கிறிஸ்டோபர் மெக்காண்டில்ஸ் என்கிற அப்பாவி முதன் முதலாக அறியப் பட்டது அப்போது தான்.

வர்ஜீனியா மாகாணத்தின் ஒதுக்குப் புறமான புற நகர்ப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது அவனின் கதை(1976).அவனுடைய அப்பா நாசாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவனுடைய அம்மா ஏர்லைன்ஸ் கம்பெனியில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்.அவனுக்கு ஒரு தங்கை மட்டும். அவள் பெயர் கரீனா.வீட்டின் நிதிநிலைமை,வசதி வாய்ப்புகள் நன்கு இருந்த போதிலும்,அடிக்கடி அவர்களது அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் கடும் சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருந்ததை அண்ணன், தங்கை,இருவரும் தங்களின் விவரம் புரியா பருவத்தில் இருந்தே காண நேரிட்டது.அது விவாகரத்து அளவுக்கு நிறைய தடவை போனது.தவிர,அவர்களது அப்பாவுக்கு ஏற்கனவே, திருமணம் ஆகி,அதன் மூலம் ஆறு குழந்தைகள் இருப்பதும்,அந்த முதல் மனைவியை அவர் இன்னும் சட்ட பூர்வமாக பிரியாமல் இருப்பதும்,அவர்களது அம்மா உட்பட யாருக்கும் தெரியாது.இந்தச் சூழ்நிலையில் பள்ளிக் கூடம் தான் ஒரே ஆறுதலான இடமாக,வாழ்க்கை ஆக இருந்தது,மெக்காண்டில்ஸ் ப்ளஸ் அவனது சகோதரிக்கு.பள்ளியில் மெக்காண்டில்ஸ் அந்த சிறு வயதிலேயே அபார மனஉறுதியும்,பல சாலியாகவும் இருந்ததைக் கண்டு அவனது ஆசிரியர்கள் வியந்தது உண்டு.

மெக்காண்டில்ஸ் இன் கல்லூரிப் பருவம் தத்துவமும்,புத்தகங்களும்,பயணமும் என்பதாகக் கழிந்தது.காலையில் எழுந்து ஓடுவதைக் கூட அவன் இருளுக்கு எதிரான ஒரு புதிய புலர்தல் என்பதாக தான் அவன் நினைத்தான்,அவனது நண்பர்களுக்கும் சொன்னான்.ஒரு பிட்னெஸ் ப்ரீக் ஆக இருந்தான் அவன்,மனதிலும்,உடலிலும்.அட்லாண்டாவின் எமோரி பல்கலைக் கழகத்தில் அவன் வரலாறும்,மானுடவியலும்(history and anthropology)யும் படித்துக் கொண்டிருந்தான்.அவன் வாழ் காலத்தில்,எழுபதுகளில் இருந்து, தொண்ணூறுகள் வரை,அவன் சந்தித்த சமுதாயம் அர்த்தம் அற்று வெற்றுப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்ததை அவன் வெறுக்க ஆரம்பித்திருந்தான்.மானுட சமூகம் வியாபாரிகளின் கையில் சிக்கி கன்ஸ்யூமர் எனப் படும் பொம்மைகள் ஆக திக்கற்று, இலக்கற்று, இயற்கை மறந்து,இயற்கை அளித்த கொடைகளை மறந்து,இயற்கையை அழித்து,இயங்க ஆரம்பித்து இருந்ததை வெறுத்தான்.இதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற வேறுபாடு எல்லாம் அவனால் பார்க்க முடியவில்லை.சந்தை அடிப்படையில் இயங்குகிற மந்தையில்,நல்ல ஆடு என்ன கெட்ட ஆடு என்ன? என்பது அவன் ஆழ் மனதில் விழுந்து விருட்சம் ஆகிக் கொண்டிருந்தது.அவன் காணும் இயற்கை அனைத்தும் வா வா என்று தன் சொந்தப் பிள்ளையைக் கண்டு கொண்ட அதி சந்தோஷத்தில், அவனை அழைத்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.அவன் இயற்கையின் குழந்தை எனவும்,அவனுக்கு இவ் வுலகில் கொஞ்சம் வேலைகள் இருக்கின்றன என்பதையும். போதாதற்கு,அவனது ஆதர்ச தத்துவ ஆசான்கள், அவனை இயற்கையின் மகா புத்திரன் ஆக்குவதை இன்னும் விரைவாக அவன் மனதுக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.மந்தையில் திசை மாறிய தனி ஆடாக அவன் இருந்தான்.அவனைப் புரிந்து கொண்ட ஒரே ஆத்மாவாக அவன் தங்கை இருந்தாள்.லியோ டால்ஸ்டாய்,ஜேக் லண்டன், டபிள்யூ. ஹெச்.டேவிஸ்,ஹென்றி டேவிட் தொரவ் ஆகியோர் அவனது ஆசான்கள் ஆக தத்தம் புத்தகங்கள், கருத்துக்கள், வாழ்க்கைப் பதிவுகள் மூலம் இருந்தார்கள்.நிச்சயமாக,அவர்கள் ஒவ்வொருவரும் இந்த உலகை மாற்றும் சக்திகள் என்பதை அவர்களைப் படித்த யாரும் அறிவார்கள்.அந்த அப்பாவியின் ஆதர்ச சக்தியாகவும் அவர்கள் தான் இருந்தார்கள்.

I would rather be ashes than dust!...என்று ஆரம்பிக்கும் ஜேக் லண்டனின் சில பருக்கைகள் அந்த மகா சோற்றின் ஒரு பதம்,சிறு துளி.(John Griffith "Jack" London (born John Griffith Chaney, January 12, 1876 – November 22, 1916) was an American author, journalist, and social activist. He was a pioneer in the then-burgeoning world of commercial magazine fiction and was one of the first fiction writers to obtain worldwide celebrity and a large fortune from his fiction alone)-wiki.

"தூசியாய் இருப்பதைக் காட்டிலும் சாம்பல் ஆக இருப்பேன்.

தீப்பொறியாய் எரிவது நல்லது ,அழுகிப் போவதை விடவும்.

நிரந்தரமான அழுது வடியும் கிரகத்தை விடவும்,
பளபள வென ஒளிரும் விண்கற்களாய் நானிருப்பேன்.
இருப்பது குறித்து அல்ல மனித வாழ்க்கை,வாழ்வது குறித்து.

வாழ்க்கையை நீடிப்பது அல்ல எனது நாட்களின் பணி,
நேரத்தைப் பயன் படுத்துவது."
- ஜேக்

லண்டன்,கிறிஸ்டோபர் மெக்காண்டில்ஸ் இன் முதல் ஆதர்சம்.

"I went to the woods because I wished to live deliberately, to front only the essential facts of life, and see if I could not learn what it had to teach, and not, when I came to die, discover that I had not lived. I did not wish to live what was not life,..." என்று ஆரம்பிக்கும் ஹென்றி தொரவ்வின் சில பருக்கைகள் அந்த மகா அமிர்தத்தின் ஒரு பதம்,துளி...க்ரிஸ் சை மரணத்துக்குள் தள்ளிய அமிர்தத் தின் துளி!

ஹென்றி டேவிட் தொரவ்.
Henry David Thoreau (July 12, 1817 – May 6, 1862).கிறிஸ்டோபர் மெக் காண்டில்ஸ் இன் ஆன்மா.

நாம் வாழும் இவ் வுலகத்தில்,இந்தக் கால கட்டத்தில் அவர் சொன்ன,வாழ்ந்த வாழ்க்கை நிச்சயம் அமிர்தம் தான்.எனினும்,நாம் அதை நடைமுறையில் மேற்கொள்வது அவ்வளவு சாதாரணம் இல்லை, ஆனால் அவரைப் பற்றி,அவர் சொன்ன வாழ்வியல் விசயங்களைப் பற்றி,அவ் விசயங்கள் முன் வைக்கும், மறந்து போன வாழ்க்கை யதார்த்தங்களைப் பற்றி நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ளவேண்டும்..இன்று,இருபத்தோராம் நூற்றாண்டில்,உலகம் பூராவும்,மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிகம் தேடிப் படிக்கும் அறிஞர் ஹென்றி டேவிட் தொரவ்!ஜேக் லண்டனும்,ஹென்றி டேவிட் தொரவும் கிறிஸ்டோபர் மெக்காண்டில்சை, சூப்பர் ட்ராம்ப் ஆக்கியவர்கள்.அவனை உடல் சாகசத்திற்கு,ஆன்ம பயணத்திற்கு,அதன் முடிவில்,முடிவற்ற இறப்பிற்கு உந்தியவர்கள்.அவ் விறப்பிற்குப் பின் அவனை வாழ வைத்தவர்கள்.நாம் காண, உணர, கற்றுக் கொள்ள ஒரு வாழ் அனுபவமாக அந்த அப்பாவியை ஆகியவர்கள்.

ஏனெனில்,ஆதர்சங்களின் மீதான அளவற்ற பற்று நம்மை இறப்பிக்கக் கூடும்.

ஆனால்,நம்மை அதற்குப் பின் வாழ வைக்கவும் கூடும், கால காலத்திற்கும்.நம் சந்ததியரையும்.

கிறிஸ்டோபர் மெக்காண்டில்ஸ்,அந்த ஆதர்சப் பற்றின், ஒரு நினைவு வாழ் உயிர்ப் பருக்கை.

சித்தாந்தம் சினிமா ஆவதின் சிரமம் இங்கிருந்தே ஆரம்பித்து விடுகிறது.

இந்த கிறிஸ் பிளாஷ் பேக்' கை எப்படி சீன் பென் தன் சினிமாவில் கடந்திருக்கிறார் என்பது, ஏன் அவர் ஒரு ஜீனியஸ்! என்பதன் முதல் பதில்.

முன் பின் அலையும், நான் லீனியர் திரைக் கதை கொண்ட, into the wild - இன் முதல் பிளாஷ் கட் அது.

எமோரி பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா முடிந்ததும்,அவனுக் கென்று அம்மாவும் அப்பாவும் அளிக்க விருக்கும் விருந்துக்குச் செல்கிறான் கிறிஸ்டோபர் மெக் காண்டில்ஸ்.அந்த காரில் செல்லும் தருணத்தில்,அவனது வாய்ஸ் ஓவர் மூலம்,அவனது மனதை,நாம் சற்று விவரமாக அறிந்த அவனது பின்னணியை சொல்வார் சீன் பென்,அவனது அம்மா அப்பா குறித்த,அந்தக் கால கட்டத்தில் இருந்த குடும்ப அமைப்பின் சீர்கேடுகளைப் பற்றி. ரெஸ்டாரன்ட் முன் காரை நிறுத்தும்போது,உண்மையில் அதை அவன்,தன் சகோதரியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் என்பது புலப்படும்.அதற்க்கப்புறம்,அந்த ரெஸ்டாரண்டில் நிகழும் உரையாடல்.தங்கள் மகனுக்கு,ஒரு புதிய கார் ஒன்றைப் பரிசளிக்க விரும்பி,அதைப் பற்றி,கிறிஸ் இடம் பெருமையாக அறிவிக்கிறார்கள். எதற்கு எனக்குப் புதிய கார்? என்று மறுதலிக்க ஆரம்பிக்கும்,அவன்,கொஞ்சம் கொஞ்சமாக தர்க்கத்தின் உச்சத்திற்குப் போய்,'எதற்கு எனக்கு எதுவும்?' என்கிற கேள்விக்குப் போகிறான்,அப்போது அவனது தொடையை நிமிண்டி,அவனை சாந்தப் படுத்துவாள் கரீனா,அவனது சகோதரி.அந்தஒரு பத்து நிமிட உரையாடல் காட்சி,இவன் எது வேணா செய்வாண்டா... என்று கிறிஸ்டோபர் மெக்காண்டில்ஸ் பற்றி நமக்கு அபிப் பிராயத்தை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.அந்த திரைக் கதை,அக் காட்சி அமைப்பு சீன் பென் உடையது.ஒரு நிஜம்,ஒரு பத்திரிகை கட்டுரை ஆகி,பின் கதையாக எழுதப் பட்டு,அதன் பின் நாம் காணும் சினிமா ஆகும் ஊடக ஒன்றிணைப்பு அனுபவத்தின் ஒரு துளி,முதல் துளி.யார் சொல்வது சினிமா வெறும் காண் எழுச்சி அனுபவம் மட்டுமே,அது ஊடகம் அல்ல என்று...sorry!.

இனி மறுபடியும் நிஜத்திற்கு.ஜான் கிராக்கர் பதிவுக்கு.

எமோரியில்,வரலாறு மற்றும் மானுடவியலில் பட்டம் பெற்ற போது,மெக்காண்டில்ஸ் இடம் கொஞ்சம் பணம் இருந்தது.கொஞ்சம் என்றால், நாற்பத்து ஏழாயிரம் அமெரிக்க டாலர்கள்.

$47,000.

அவன்,அடுத்து சட்டப் படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக,அவனது குடும்ப நண்பர் அவனுக்கு விரும்பி அளித்த பணம்.

அதிலிருந்து,மிச்சம் இருந்த,$25,000 பணத்தை,அவன் ஆக்ஸ் பேம் இன்டர்நேஷனல் (Oxfam International) என்கிற பட்டினி ஒழிப்பு தன்னார்வ அமைப்புக்கு நன்கொடை ஆகக் கொடுத்துவிடுகிறான்.

into the wild சினிமாவில்,இது உணர்வு பூர்வமாகக் கடக்கப் பட்டிருக்கும் சீன் பென் னால்.

ரெஸ்டாரண்ட்டில்,கிறிஸ்டோபர் மெக் காண்டில்ஸ் -ன் அப்பா கேட்பார்.உன் வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதே என்ன செய்யப் போகிறாய் என்று.

அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பான் கிரீஸ்.

அவனது அம்மாவும்,அப்பாவும் அந்த சூழலில் ஒரு அசட்டுப் புன்னகை மட்டுமே புரியும் வாய்ப்பு இருந்தது.அவன் அவர்களைக் கடக்கிறான், தனது,முதல் பயண ஏற்பாடாக,என்று உணரும் வாய்ப்பு, காணும் நமக்கு.

beware,நாளை நமது குழந்தைகள் நம்மிடம் அதைச் சொல்லக் கூடும்!சீன் பென்.அதன் காட்சி கர்த்தா.காண் கர்த்தா.நாம் அப்படி உணரக் காரண கர்த்தா.

கிறிஸ்டோபர் மெக்காண்டில்ஸ் நாம் யாரும் நம் இளமையில் செய்யத் துணியாத காரியங்களைச் செய்கிறான்.அவனது கடன் அட்டை,வங்கிக் கணக்கு அட்டை,அவனது அடையாள அட்டை அனைத்தையும் தீயிட்டு எரிக்கிறான்.

அவன் இப்போது எரித்திருப்பது,அவன் அமெரிக்காவின் குடிமகன் என்கிற அட்டையை.எந்த பச்சை அட்டையை நாம் வாழும் இச்சமூகம் மிக மதிக்கிறதோ,எதற்காக,கற்றறிந்த நம் நண்பர்கள்,அவர் தம் பிள்ளைகள்,நம் பிள்ளைகள்,நம் பிள்ளைகளின் பிள்ளைகள்,நம் பேரன்கள் எல்லாரும் அண்ணாசாலை,ஜெமினி மேம்பாலத்திற்கு,கீழே இருக்கும்,அந்த அமெரிக்க கொடி பறக்கும் புண்ணிய ஸ்தலத்தில் அதிகாலை வெறும் வயிற்றில் தவம் இருக்கிறோமோ,அந்த கானல் வரத்தை.

இப்போது உங்களுக்கு கிறிஸ்டோபர் மெக் காண்டில்ஸ் என்கிற அப்பாவியைப் பற்றி ஓரளவு ஒரு அபிப்பிராயம் வந்திருக்கலாம்.

ஆனால்,அவனது குறி,சென்னை,அல்ல,அலாஸ்கா.

அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் அலாஸ்கா.மிகக் குறைந்த மக்கள் வாழும் இடமும் கூட.அமெரிக்கா தான்,ஆனால்,அமெரிக்கா இல்லை என்று குறிப் பிடப் படுகிற மாநிலம் அலாஸ்கா.உண்மையில் அது சோவியத் ரஷ்யா விடம் இருந்து விலைக்கு வாங்கப் பட்ட பகுதி.ஏக்கர் இரண்டு சென்ட் என்கிற விலையில், $7.2 million (March 30, 1867) கொடுத்து,அமெரிக்க அரசு,ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்காவை வாங்கியது.அலாஸ்கா என்கிற வார்த்தையின் வேர்கள் ரஷ்யாவில் தான் இன்னும் இருக்கின்றன.aleyska(the great land)என்பது அலாஸ்காவின் ரஷ்ய தொடர்பு.பனி ஏரிகள் தான் அலாஸ்கா.எண்ணற்ற பனி ஏரிகள்.கிட்டத் தட்ட மூன்று மில்லியன் ஏரிகள்.அலாஸ்கா வின் ஓரளவு மனித வாடை அடிக்கும் இடம் பேய்ர் பாங்க்ஸ்(fairbanks). Denali National Park and Preserve என்கிற உயிரியல் வனப் பூங்காவும், Mount McKinley என்கிற வட அமெரிக்காவின் மிக உயரமான மலைச் சிகரமும் இங்கு தான் இருக்கின்றன.−51.1 ஊC என்பது அதன் குளிர்கால தட்ப வெப்பம்.பனிக் கரடிகளுக்கு மிகப் பிடித்த பிரதேசம்.

இங்கு தான் (fairbanks)கடைசியாக வந்து சேர்கிறான் கிறிஸ்டோபர் மெக்காண்டில்ஸ் நிஜத்தில்.இன் டு தி வைல்ட் சினிமா இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது திரையில்.வீட்டை விட்டு தன் பழைய காரில் தன் வட அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கும் மெக் காண்டில்ஸ் முதலில் தன் காரைக் கை கழுவுகிறான் ஓர் இடத்தில்,அடுத்து அவனுடைய பயணம் தொடரும் ஒவ்வொரு இடங்களிலும் மிச்சமிருக்கும் தன் நாகரீக அடையாளங்களைக் கை விடுகிறான்.சீன் பென் இதை அவனின் மறுபிறப்பு என்பதில் ஆரம்பித்து பருவம் பருவமாக பதிவு செய்திருப்பார்.பயணம் உண்மையில் மறு பிறப்பு தானே?.அரிசோனா,வடக்கு கலிபோர்னியா, கொலராடோ,வடக்கு டகோட்டா,அலாஸ்கா என்று நீளும் அவனது இரண்டு வருட பயணத்தில் அவன் வித விதமான மனிதர்களைச் சந்திக்கிறான். ஒவ்வொருவரும் ஒரு அனுபவம்.ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு வாழ்வியல் தத்துவம்.into the wild படத்தின் உரையாடல்கள்,வசனங்கள் ஆழச் செருகும் கத்தி போன்றவை.

"நான் எங்கோ படித்திருக்கிறேன்,வாழ்க்கையில் திடமானவனாக இருப்பதைக் காட்டிலும் முக்கியமானது திடமாக உணர்வது."

"வாழ்க்கை காரண காரியங்களால் ஆனது என்று நாம் நம்ப ஆரம்பிக்கும் போது,வாழ்க்கையின் வேறு சில உண்மையான காரணங்கள்,தேடல்கள் அழிக்கப் பட்டு விடுகின்றன."

"மனிதனின் ஆன்ம விழிப்பு அவனுடைய புதுப் புது அனுபவங்கள் மூலம் மட்டுமே சாத்தியம்."

'மகிழ்ச்சி என்பதன் அனுபவம் அது பகிரப் படும்போது தான் நிகழ்கிறது"

"சுதந்திரமும் இயற்கை எழிலும் எளிதில் கடக்க முடியாதவை.""தொரவின்ஒருகருத்தைச்சொல்லவிரும்புகிறேன்... காதலைவிட,பணத்தைவிட,நம்பிக்கையைவிட,புகழைவிட,நீதியைவிட,எதுஉண்மையோஅதைஎனக்குத்தா!"

கிறிஸ்டோபர்மெக்காண்டில்ஸ்உண்மையைத்தேடித்போனான்.உண்மையைஉணரஆரம்பித்தான்.உண்மையின்முடிவற்றசாத்தியங்களில்நுழைந்துதிரும்பிவரஇயலாதஅபிமன்யூபோலகடைசியில்இறந்துபோனான்.அதுஎவ்வாறுஎன்பதுதான்சீன்பென்இயக்கியபயணதுன்பியல்காவியம்.ஆன்மபரிசோதனை. இயற்கையுடன்நடத்தியகாதலும், போரும்,மரணமும்.

நிஜத்தில்,

ஆகஸ்ட் 12,1992,அன்றுதேதியிட்டு,ஒருகிழிக்கப்பட்டபுத்தகபக்கமும்,இரண்டுகடைசிவார்த்தைகளும்கிறிஸ்டோபர்மெக்காண்டில்ஸால்விட்டுச்செல்லப்பட்டிருந்தன.

ஜான்ஜெபர்சனின்கவிதைஇருந்ததுஅந்தகிழிக்கப்பட்டபக்கத்தில்.

புத்திசாலிகளின்மோசமானதருணங்கள்என்றுதலைப்பிடப்பட்டகவிதை.

"Death's a fierce meadowlark: but to die having made
Something more equal to centuries...என்றுஆரம்பிக்கும்அக்கவிதை

"மலைகள்என்பனஇறந்தகற்களே
மக்கள்அவற்றை,அவற்றின்விநோதமானஅமைதியைஆராதிக்கலாம், வெறுக்கவும்செய்யலாம்.ஆனாலும்மலைகள்இளகவோ,துன்புறவோபோவதில்லை
சிலஇறந்தமனிதர்களின்சிந்தனைகளும்மலைகளைப்போலவே." என்பதாகமுடிகிறது.

அந்தக்கவிதைப்பக்கத்தின்மறுபுறம்,கிறிஸ்டோபர்மெக்காண்டில்சின்கையெழுத்தில்அவனதுகடைசிவாக்கியம்இருந்தது,இவ்வாறு...

I HAVE HAD A HAPPY LIFE AND THANK THE LORD. GOODBYE AND MAY GOD BLESS ALL!"

'into the wild ' காண்எழுச்சிஆன்மஅனுபவம்.ஆஸ்கர்,கோல்டன்க்ளோப், கிராம்மி, ரோம்பில்ம்பெஸ்டிவல்என்றுசென்றஇடமெல்லாம்விருதுகள்அள்ளியசினிமாஅனுபவம்.

நிஜமும்,கதையும்,சினிமாவும்ஒருங்கிணைந்தஊடகபயணம்.

முடிவற்றவாழ்வியல்தத்துவபயணம்.

ஏன்பணம்? ஏன்வசதி? ஏன்அறிவியல்? ஏன்நாகரீகம்? ஏன்வேலைபார்க்கவேண்டும்?ஏன்சேமிக்கவேண்டும்? என்றுநம்நிகழ்காலநம்பிக்கைகளைக்கேள்விகேட்கும்அனார்சிஸ்ட்(Anarchist) சித்தாந்தத்தின்சினிமாவடிவம்.

அதன்பதில்தேடும்பொறுப்பு,நம்மிடம்தான்விடப்பட்டிருக்கிறது.

நம்சந்ததிகளுக்காகவாவதுநாம்அதைத்தேடஆரம்பிக்கலாம்.


இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com