தமிழும் சித்தர்களும்-21

நெல்லிக்காய் என்பது சித்த மருத்துவத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. ‘திரிபலா” என்னும் அருமருந்தில் நெல்லிக்காயும் ஒன்று. திரிகடுகத்திலிருந்து திரிபலாவை நோக்கிய பயணம், சித்தர்களின் மருத்துவத்தில் ஓர் மைல்கல். திரிபலா, இரைப்பை புண், ஆசனப்புண் ஆகியவற்றிற்கு மிகசிறந்த அருமருந்து. திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றின் கலவையே. இப்போது எளிய காயகற்பம் - நெல்லிமுள்ளி கற்பம் பற்றி போகர் பெருமான் உரைத்தது சித்த மருத்துவத்தில் ஓர் எளிய மருத்துவம். 

                                வயிரமாம் நெல்லிமுள்ளி தன்னை வாங்கி  

                                மருவநன்றாய் இடித்துச் சூரணமே ஆக்கி 

                                ஆயிரமாம் அபிரகச் செந்தூரந்தான்  

                                அதற்கெட்டுப் பங்குக்கோர் பங்கு சேர்த்துத் 

                                துயிரமாந் தேந்தனிலே குழைத்தே உண்ணு 

                                சுகமான மண்டலந்தான் உண்டாயானால்   

                                கயிரமாங் காயமது கருய்ங்காலிக் கட்டைக்   

                                கனல்போலச் சோதியாய்க் காணும் காணே 

                               -              போகர்

போகர் பழனிமலையில் ஜீவசமாதியானதாக குறிப்பிருக்கிறது. பரணி நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கி வரலாம். நெல்லியை காயவைத்து வற்றலாக பயன்படுத்துவது, இதனையே நெல்லிமுள்ளி என்பர். நன்கு காய்ந்த நெல்லிமுள்ளியை நன்கு இடித்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அச்சூரணத்திற்கு எட்டில் ஒரு பங்கு அபிரகச் செந்தூரத்தை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேனைக் குழைத்து பாக்களவு தினமும் உண்ண வேண்டுமாம். இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டு வந்தால் உடலானது கருங்காலிக் கட்டையை எரித்தால் வரும் தனல் போல் சோதியாகும் என்கிறார். மேலும் காய சித்தியும் உண்டாகும் என்கிறார் போகர். கருவூரார் கூறிய கற்றாழை உடன் திரிகடுகம், தினமும் நான் எட்டு போன்ற நடைபயிற்சியை முடித்து விட்டு, மைதானத்தில் இருந்து வெளி வந்தால் ஒருவர் கற்றாழை பானத்தை, இஞ்சியுடன், எலுமிச்சை பழத்துடன் விற்கிறார். மற்றொருவர் திரிகடுகம் சூரணம் பயன்படுத்தி சூடான கீரை பானத்தை விற்கிறார். தினமும் கற்றாழை பானத்தை அருந்துவது என் வழக்கம், இதை கண்டு என் மூத்த மகளும் அருந்த பழகி கொண்டு விட்டாள். இதிலிருந்து அறிவது தாய், தந்தையரான, நமது உணவு பழக்க வழக்கத்தை உற்று நோக்கிகிறார்கள் என்பதே. இதனாலேயே நாம் மது அருந்தும் பழக்கமும், அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக அருந்த வேண்டியுள்ளது. சங்ககாலத்தில் இறைச்சியுடன் மதுவருந்தும், பழக்கத்தை தமிழராகிய நமக்கு தெரியாமல் தான் இருக்கிறது. 

                                ‘ காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை “  

-              பொருக. 105

‘ இன்கடும் கள்ளின் ஆமூர் “- புறம் 80 

‘ கேட்கருப் பன்ன நாட்படு தேறல்” - புறம் 392

மன்னர்கள் பாணர்க்கும் புலவர்க்கும் அளித்த பெருவிருந்துகளில் ஊன்சோறே பரிமாறப்பட்டது. ஓரிடத்திலேயேயும் புலூலுணவு பழிக்கப்படவில்லை. புலவர்கள் அதனைப் பெரிதும் பாராட்டிய பாடியுள்ளனர். கள்ளுண்டலையும் அக்காலத்தோர் தவறாகக் கருதிடவில்லை. கபிலர் போன்ற அந்தணப் புலவர்களும் அதனை பாராட்டியே பேசினர். ஊர்களின் வளத்தினைப் பேசும்போது கள் மிகுதியையும் இணைத்துப் பேசியுள்ளனர். தேறலை புளிக்க வைக்க அதனை மூங்கிற் குழாயில் ஊற்றி நிலத்தடியில் புதைத்த பழக்கம் உண்டு. 

               ‘பாப்புக் கடுப்பன்ன தோப்பி “ 

                                                           -  அகம் 348

யவனர் நன்கலம் தநத தண்கமிழ் தேறல் 

பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் 

யுண்பொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து 

ஆங்கினது ஒழுகுமதி பூந்தார் மார்ப் : 

                                          -              புறம் 56 

தென்னை, பனை மரங்களிலிருந்து இறக்கிய கள்ளைத் தவிர வீட்டிலிலேயே சமைத்த ஒருவகைக் கள் ‘தோப்பி” என வழங்கிற்று. உள்நாட்டுக் கள்ளைத் தவிர வெளிநாட்டிலிருந்து வருவித்த மது வகைகளையும் உண்டனர். பெரும்பாலும் மன்னர்களும், செல்வந்தர்களும் இதனையுண்டனர் எனலாம். இன்றைய நிலை என்னவோ, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்துள்ளது. இது மரபணு தொடர்ச்சியின் விளைவோ அல்லது கர்மவினை படி பயணமோ என்று தோன்றுகிறது. இதற்கு எதிர்நிலையாக வள்ளுவனும், சாத்தனாரும், புலால் உண்ணாமை, கள் உண்ணாமையை வலியுறுத்துவது, எக்காலத்திலும் இருதுருவங்கள் இருந்தே தீர வேண்டும் என்ற விதிபோல. அதுபோல சித்தர்களும் மாமிசம், மது வகைகளை ஒரு போதும் ஒத்துக் கொள்வதே இல்லை என்பதலிருந்து முக்தி என்ற நிலை அடைய அடிப்படை திறவுகோலே. புலால் கள் உண்ணாமை ஆக தான் இருக்க வேண்டும்.  

ஒரு வகையில் இந்த வேறுபட்ட நிலைகளின் காரணத்தை அறிய ஆர்வப்பட்ட நிலையில் தான் ஜோதிடம் பிறந்திருக்கலாம். இதுபோன்ற முரண்பட்ட மனித வாழ்விற்கு காரணங்களைத் தேடும் போதுதான் முன்பிறவி கர்மா என்ற ஒன்று ஆன்மீகத்தால் உணரப்பட்டு, சென்ற பிறவியில் மனிதன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் இப்பிறவி அமைகிறது என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டது. ஜோதிடம் என்பது ஒரு மனிதனின் எதிர்கால நிகழ்வை முன்பே உணர்த்தக் கூடியது. ஜோதிடத்தில் எதையும் முன்னரே சொல்ல முடியும் என்பதால்; தான் மனித வாழ்வு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்றாகிறது என்கிறார் ஆதித்ய குருஜி.

உண்மையில் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கான கட்டுக்கோப்பான நியதிக்கு உட்பட்டு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு வடிவத்தில் தான் இயங்குகிறது என்பது விஞ்ஞான ரீதியான உண்மை. நம்முடைய பூமியும் கூட தீர்மானிக்கப்பட்ட விதத்தில் தான் இயங்குகிறது. ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பிறந்த  இந்த பூமியும்; கூட இன்னும் நானூறு ஆண்டுக்கு பின் அழந்து போகும் என்பது பிரபஞ்சத்தில் நிச்சயக்கப்பட்ட ஒரு விசயம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இடைவெளியான 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு லட்சம் கிலோ மீட்டர் கூடவோ குறையவோ இருந்திருந்தால் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அதேபோல பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சந்திரன் இன்னும் சற்று அருகிலோ, அல்லது தூரத்திலோ இருந்திருந்தால் கூட பூமியின் தோற்றம் முற்றிலும் மாறி விட்டிருக்கும். ஆக அனைத்துமே ஒர தீர்மானிக்கப்பட்ட ஒரு ஒழுங்கில் இருப்பது தெரியவரும். மதுவருந்தாத நம் பூமி, மதுவருந்தினால் என்னவாகும், மனித உயிர்கள் இருக்காது. மனித மனம் படி பூமி இயங்கினால் என்னவாகும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இறைவனையே குடிகாரன் என்று கூறிய கண்ணதாசனின் மனம் பற்றி பார்ப்போம். 

                                நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்  

                                இன்னைக்கு ராத்திரிக்கு தூங்கவேணும் 

                                ஊத்திக்கிறேன் கொஞ்சம் 

                                ஆடுமாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே 

                 

                                போதை வந்த போது புத்தியில்லையே      

                                புத்தி வந்த போது நண்பரில்லையே  

                               

                                கடவுள் என் வாழ்வில் கடன்காரன்  

                                கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்

                                ஏழைகள் வாழ்வில் விளையாடும் 

                                இறைவா நீ கூட குடிகாரன்   

                                     -              நீதி படத்திலிருந்து

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com