தொடர்கள்
பிரியங்களுடன் கி.ரா – 25
திருநெல்வேலி டவுண் : ரகுநாதன் வீடு
24.6.57
அருமையுள்ள நடராஜனுக்கு
ரகுநாதன் வைத்திருக்கும் போட்டோ ஆல்பத்தில் உங்கள் படத்தைப் பார்த்ததும் கடிதம் எழுத வேணுமென்று தோன்றிவிட்டது.
பொதுவாக நீங்கள் போட்டோவில் சரியாக விழுவதில்லை. ரகுநாதன் உங்களை ‘அமைத்து’ விட்டார்! அதில் துரையும், ல.ச.வும் இருக்கிறார்கள்.
நேற்று உங்களுக்கென்று சில புஸ்தகங்கள் வாங்கினேன். அதில் கீதைப் பேருனாகளும் ஒன்று.
புஷ்கின் எழுதிய பீரிகின் கதைகள், கோகோல் எழுதிய தராஸ்புல்பா முதலிய ‘இங்கிலீஸ்’ புஸ்தகங்கள். குற்றாலம் வரும் போது கொண்டு வருவேன்.
இரவு, நானும் ரகுநாதன், சிவசங்கரன் எக்ஜிபிஷன் போயிருந்தோம்.
இன்று ஊருக்குப் போகிறேன்.
சுகம்…