மிகச்சிறந்த குதிரையும்,மிகச்சிறந்த ஜாக்கியும்

இன்னொருவனின் கனவு -23

உலகின் மிகச் சிறந்த, மிக மோசமான,மிகத் திகில் ஆன ,த்ரில் ஆன பந்தயம் சினிமா!

அதில் ஓடிக் கொண்டே இருக்கிற குதிரைகள் நம் ஆதர்ச நட்சத்திரங்கள்.

அதன் பொது விதி,ஜாக்கிகள் மாறலாம்,பந்தயமும்,குதிரைகளின் ஓட்டமும் தொடரும் என்பது .

இங்கே கனவு காண்பவன், தான் ஒரு ஜாக்கி என்பதைப் புரிந்து கொள்வானாகில், அவனும் தொடர்ந்து ஓடலாம். ஏனெனில்,பந்தயத்தில் ஓட்டம் தான் வாழ்க்கை,வெற்றி,தோல்வி எல்லாம்.

உலகின் வேறெந்த சினிமாக்களிலும் குதிரைகள் கொஞ்சம் கொஞ்சம் சுதந்திரமாக ஓட முடியும். இந்திய சினிமாவில் அதற்கு அன்றும், இன்றும், என்றும் வாய்ப்பே இல்லை.யார் ஆரம்பித்து வைத்தார்கள் இந்த அவஸ்தை ஓட்டத்தை என்று தேர்வது,தெளிவது கடினம். ஆனால்,யாரும் இதை முடித்து வைக்கப் போவதில்லை,என்பது கடல்,வான்,மண் ,காற்று போல நிதர்சனம் இந்திய சினிமா ரேஸ் கோர்ஸில்.

சாட்சி?

இப்படம் ஓடினால் நான் மன்னன்...இல்லை எனில் நாடோடி! (நாடோடி மன்னன்-1958)

மக்கள் திலகம்,புரட்சித் தலைவர் என்று இரு வெற்றிப் பட்டயங்களைச் சுமந்த,நாம் அன்றும்,இன்றும் அறிகிற நம் ஒரே தலை சிறந்த நட்சத்திரக் குதிரை எம்.ஜி.ஆரை யே இப்படிச் சொல்ல வைத்த பந்தயக் களம் தான் சினிமா.இந்திய சினிமா.தமிழ் சினிமா!

நாடோடி மன்னன் வெளிவந்த 1958-இல் இப்படம் வெளி வந்தே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை எம்.ஜி.ஆருக்கு ஏற்படுத்திய படம் சிவாஜி கணேசனின் உத்தம புத்திரன். ஏனெனில், எம்.ஜி.ஆரும் 'உத்தம புத்திரனை'எடுப்பதாகத் தான் முதலில் விளம்பரம் செய்திருந்தார். வீனஸ் பிக்சர்சும்,சிவாஜி கணேசனும் முந்திக் கொண்டார்கள். கார்சிகன் பிரதர்ஸ்-அபூர்வ சகோதரர்கள்(எம்.கே.ராதா) ஆகவும், மேன் இன் தி அயன் மாஸ்க்-உத்தம புத்திரன் (சிவாஜி கணேசன்)ஆகவும், வெளி வந்த பிறகு,ஹாலிவுட் மிச்சமாக ஒரே ஒரு கத்திச் சண்டை இரட்டை வேடப் படம் தான் இருந்தது,இறக்குமதி செய்யப்படாமல். அது 'தி பிரிசனர் ஆப் ஜெண்டா'.முந்தைய இரண்டையும் போல இது நாவலாசிரியர் அலெக்சாண்டர் டுமா உடையது அல்ல.இது அந்தோணி ஹோப் எழுதிய நாவல்(1894). மோசமான நாவல்.ஆனால் அலெக்சாண்டர் டுமாவின் இரண்டு நாவல்களில் இருந்தும் இது சில விஷயங்களில் மாறுபட்டு இருந்தது. அந்த நாவல்களில் கதாநாயகனின் அச்சாக இன்னொருவர் இருப்பதன் முக்கிய காரணம் அவர்கள் இரட்டையர்கள். ஆனால் ப்ரிஸனரில் இருவரும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் வேறு வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். இது மட்டுமல்ல இன்னொரு தகவலிலும் இந்த நாவல், அலெக்சாண்டர் டுமாவின் இரண்டு நாவல்களில் இருந்தும் மாறுபட்டு இருந்தது. முந்தைய இரண்டிலும் காதல் நிறைவேறும். ஆனால் ப்ரிசனரில் உண்மையாக காதல் கொண்டவர்கள் மணந்து கொள்ள முடியாமல் போகிறது. ராஜ கவுரவத்திற்காகவும், நாட்டு நலனுக்காகாவும் காதலர்கள் தங்கள் காதலை தியாகம் செய்து விடுவார்கள். இன்னொரு விஷயத்திலும் ப்ரிஸனர் மாறுபட்டு இருந்தது. அதில் வரும் முக்கிய வில்லன் முடிவில் சாக மாட்டான். எங்கோ ஓடி மறைந்து விடுவான்.,(இருட்டிலிருந்து வெளிச்சம்-அசோக மித்திரன்-நற்றிணை).

பந்தயத்தின் இன்னொரு பொது விதி, அதி சிறந்த பந்தயம் என்பது அதி சிறந்த குதிரையும்,அதி சிறந்த ஜாக்கி யும் பங்கு பெறுவதும்,ஜெயிப்பதும் தான்.

நாடோடி மன்னனில் அதி சிறந்த குதிரையும் எம்.ஜி.ஆர் தான்,அதி சிறந்த ஜாக்கி யும் எம்.ஜி.ஆர் தான்.ஆம்,அவர்,அகில உலகிலும்இயக்கிய முதல் படம்,நாடோடி மன்னன்!சும்மா வருவதில்லை பேர்,புகழ்,வெற்றி எதுவும் யாருக்கும்.யார் எம்.ஜி.ஆர் என்பதை அவர் 1958-லேயே அறிவித்த பந்தயம் நாடோடி மன்னன்!

இன்னொரு சுவாரசியமான விஷயம்'தி பிரிசனர் ஆப் ஜெண்டா' வைத் தழுவி அகில உலகிலும் அதி அற்புத ஹிட் கொடுத்த குதிரையும், ஜாக்கியும் எம்.ஜி.ஆர் என்பது தான். ஏனெனில்,அதைத் தழுவி எடுக்கப் பட்ட 'பிரிசனர்', 'பிரிசனர் ஆப் ஜெண்டா' இரண்டுமே ஹாலிவுட்டில் டப்பாவுக்குள் போன படங்கள்!

சொல்லப் படாத அவஸ்தை, அந்த நட்சத்திரக் குதிரை இருமடங்கு வேகத்தில் ஓட வேண்டி இருந்தது தான் என்பது தான். இரட்டையர் படம். ஆனாலும்,நட்சத்திர வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் அநேகமாக நட்சத்திரக் குதிரைகள் இரு மடங்கு வேகத்தில்,அல்லது மும்மடங்கு வேகத்தில் ஓடிய பந்தயங்களில் தான்.

இப்படி,நாம் நன்கு அறிந்த தமிழ் நட்சத்திரக் குதிரைகள் அனைவருக்கும் வெற்றிச் சரிதம் எழுதிய பந்தயங்கள் இருக்கின்றன,இருமடங்கு,மும் மடங்கு வேகத்தில் அவர்கள் ஓடிய பந்தயங்கள்.சூழலும்,பின்னணியும் தான் காலத்திற்கு ஏற்றார் போல அவ்வப்போது மாறுகின்றன. அவற்றில் சில...

எம்.ஜி.ஆர் :

ராஜாதேசிங்கு, கலைஅரசி, விக்ரமாதித்தன், நாடோடிமன்னன், ஆசைமுகம், எங்கவீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்காரவேலன், நீரும்நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன் (3 வேடங்கள்), பட்டிகாட்டு பொன்னையா, சிரித்து வாழ வேண்டும், நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நேற்று இன்று நாளை, ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் (9 வேடங்கள்).

சிவாஜி கணேசன்:

உத்தம புத்திரன், பலே பாண்டியா (மூன்று வேடங்கள்), நவராத்திரி(ஒன்பது வேடங்கள், திருவிளையாடல்(ஐந்து வேடங்கள்), சரஸ்வதிசபதம், எங்க ஊர் ராஜா, தெய்வ மகன் (மூன்று) கவுரவம், சிவகாமியின் செல்வன், என் மகன், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி, திரிசூலம் (மூன்று வேடங்கள்), ரத்த பாசம், எமனுக்கு எமன், விஸ்வருபம், மாடி வீட்டு ஏழை, சங்கிலி, சந்திப்பு, வெள்ளை ரோஜா.

ஜெயலலிதா :

யார் நீ, லட்சுமி, விஜயா, அடிமைப்பெண்.

கமல்ஹாசன் :

தசாவதாரம் (10 வேடங்கள்) ,பார்த்தால் பசி தீரும் (மாஸ்டர் கமல்), சட்டம் என் கையில், கடல் மீன்கள், சங்கர்லால், து£ங்காதே தம்பி தூங்காதே, ஒரு கைதியின் டைரி, மங்கம்மா சபதம், கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், யே தோ கமல் ஹோ கயா (இந்தி), அபூர்வ சகோதரர்கள்,இந்திரன் சந்திரன் , மைக்கேல் மதன காமராஜன் (4 வேடங்கள்), இந்தியன், ஆளவந்தான்.

ரஜினிகாந்த் :

மூன்று முகம்(3 வேடங்கள்), ஜானி ,தில்லுமுல்லு, நெற்றிக்கண், போக்கிரி ராஜா, ஜான், ஜானி ஜனார்த்தனன்(3 வேடங்கள் இந்தியில்), தர்மத்தின் தலைவன், ராஜாதி ராஜா, அதிசயப்பிறவி, முத்து, அருணாச்சலம்,சிவாஜி,எந்திரன்.

விஜயகாந்த்:

உழவன் மகன், நல்லவன், சிறையில் பூத்த சின்ன மலர், தர்மம் வெல்லும். வானத்தைப்போல, கண்ணுப்பட போகுதய்யா, ராஜநடை, தவசி.

சரத்குமார் :

நாட்டாமை, நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம், நட்புக்காக, அரசு, திவான்.

அஜீத் :

வாலி, வில்லன்.அட்டகாசம்,வரலாறு,பில்லா 2008,பில்லா 2012.

விக்ரம்:

கந்த சாமி,அந்நியன்.

சூர்யா:

பேரழகன்,வாரணம் ஆயிரம்.

ஐஸ்வர்யா ராய்:

இருவர்,ஜீன்ஸ்.

இனி மிக சிரமமான,விமர்சனத்துக்கு உள்ளாகப் போகிற ஒரு விஷயம் பாக்கி.இதில் இருந்து ஒரு டாப் டென் பட்டியல்,தர வரிசை! தயாரிப்பது.

10) இருவர்,-ஐஸ்வர்யா ராய்.

9) வாலி- அஜித்

8) தில்லு முல்லு- ரஜினிகாந்த்

7) இந்தியன்-கமல் ஹாசன்

6) எங்க வீட்டுப் பிள்ளை- எம்.ஜி.ஆர்

5) அந்நியன்- விக்ரம்

4) மூன்று முகம்- ரஜினி காந்த்

3) நாடோடி மன்னன்-எம்.ஜி.ஆர்.

2) நவராத்திரி- சிவாஜி கணேசன்

1) அபூர்வ சகோதரர்கள்-கமல் ஹாசன்

இந்த தர வரிசையின் மிகச் சிறந்த பட்டியல் இது என அறுதியிட்டுக் கூற இயலாது.ஏனெனில் உங்களிடம் இருந்து இன்னும் சிறந்த பட்டியல் வரக் கூடும்,ஏனெனில் டாப் டென் என்பது வாரா வாரம் மாறுவது தான்.இதை ஒரு முதல் முயற்சி என வைத்துக் கொள்ளலாம்.

எனினும்,இவற்றைப் பேசப் போவதில்லை இன்று.

பட்டியலுக்கு வெளியே தனியாக நின்று கொண்டிருக்கும்,ஒரு படைப்பைப் பற்றி.அதன் கனவு கண்டவனைப் பற்றி.அதை நிகழ்த்தியவனைப் பற்றி.

ஏனெனில்,இது பந்தயம் அல்ல.இதை இயக்கி இருப்பவன் ஜாக்கி யும் அல்ல.இதில் ஓடியிருப்பவன் வெறும் குதிரையும் அல்ல.சிறந்தவற்றில் சிறந்தது எந்த சிறந்த பார்முலாவுக்குள் அல்லது பந்தயத்துக்குள் அடங்குவதும் அல்ல என்பதும் ஒரு விதி.எனினும் இரட்டையர் சினிமா வில் மிக அரியதும் கூட.

காரணம் எதுவும் இன்றி,உருவான தூய கலைப் படைப்பு.யதார்த்த சினிமா.

ஜானி.மகேந்திரன்.ரஜினிகாந்த்..

சம்பந்தம் இல்லாத சில விசயங்களைத் தொகுக்கும் போது,கனவு காண்பவன் அறிந்து கொள்ள வேண்டிய சில சம்பந்தங்கள் கிடைக்கும்.

1) ரஜினி என்கிற சமகால அதிகம் மதிப்புள்ள இந்திய சினிமாவின் பந்தயக் குதிரையை அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர்.

2) அது ஒரு விழா.பொது மேடையில் குரு சிஷ்யனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.'ரஜினி உனக்குப் பிடித்த இயக்குநர் யார்?'

3) ரஜினி சொல்கிறார் ' மகேந்திரன்'

4) அன்றும், இன்றும், ஜாக்கி ஆக விரும்பாமல், அதைச் செய்யாமல், பந்தயத்தில் இருந்தவன், முந்தியவன், இப்போதும் கனவு காண்பவனின் கனவாக நீடிப்பவன் தமிழ் சினிமா பெற்றெடுத்த அதி அற்புத உலகக் கலைஞன் 'மகேந்திரன்'.எம்.ஜி.ஆரால் அறிமுகப் படுத்தப் பட்ட அல்லது சினிமாவுக்கு இழுத்து வரப்பட்ட கலைஞனின் கலைஞன்.எம்.ஜி.ஆர் தன் வீட்டில் தன்னுடன்,வளர்த்தெடுத்த தமிழ் சினிமாவின் எவர் கிரீன் புதிய தலைமுறை.

5) ஏனெனில், சிறந்த குதிரைக்குத் தான் தெரியும்,சிறந்த ஜாக்கி யார் என்று!

இரட்டை வேடப் படங்கள் மேல் உள்ள ஒரு பொதுக் குற்றச்சாட்டு அவை 'ரீமேக், தழுவல், அல்லது சுடல்' என்பது தான்.
என்றும்,ரீமேக் செய்ய இயலாத இரட்டைக் கனவு ஜானி.
மகேந்திரன்,ரஜினி.

மன ஒட்டுதல் இல்லாமல் குடும்பச் சுமையின் பொருட்டு திருட்டுத் தொழில் செய்கிறவன் ஜானி.மிடில் கிளாஸ் மன சாட்சி.ரஜினி.
மன ஒட்டுதலுடன் சிக்கனம் பணத்தில் கடைப் பிடிப்பவன் ,அதே நேரம் அன்புக்கு எது வேண்டும் என்றாலும் தரலாம் என்று வாழ்பவன் வித்யாசாகர்.அடிமட்ட மக்களின் மன சாட்சி.இன்னொரு ரஜினி.
finger print technology,கை ரேகை சாஸ்திரம் மட்டுமே அடையாளம் கண்டு கொள்ள இயலும் காண் ஒற்றுமை இரட்டையர்கள்.அதுக்காக பேமிலி பிளாஸ் பேக்,குடும்பப் பாடல் என்று எதுவும் இல்லாத படம்.
'முள்ளும் மலரும்' படத்துக்குப் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம்(1980 ஆகஸ்டு 15-ந்தேதி).

யார் மகேந்திரன்?

அவரே சொல்கிறார்.

"நான் திட்டமிட்டு திரைப்படத் துறைக்கு வரவில்லை என்றாலும் கூட எனக்கு கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. அந்தக் கனவிலிருந்து தான் என் படங்கள் உருவாயின.இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப் பார்த்துக் கொள்கிறேன்." ( மாலை மலர்.)

ஜெயிப்பதை மட்டுமே நோக்கமாக க் கொள்ளாமல் ஜெயித்தவர் மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் ஆகக் கடினம் 'மகேந்திரனாக இருத்தல்,நீடித்தல்,சாதித்தல்'!

ரஜினியின் படங்களிலேயே அதி அற்புதமான ,அசத்தல் அதிரடி,எதிர்பாராத ஓபனிங் சீன் அமைந்தது அநேகமாக ஜானி தான்.

அந்த இன்னொருவர்.வித்யாசாகர்.பின்னொரு காட்சியில் ஸ்ரீ தேவியிடம்(அர்ச்சனா) 'நான் பார்பர் by profession,murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much".' என்று உண்மையைச் சொல்லி வெளியேறும் அடித்தட்டு கிரேட் human being!

நிஜத்திலும் அவர் அப்படித் தான் என்று அவர் ரசிகர்கள் நம்புகிறார்கள்!


“ரஜினிசார்எப்போதுமேதனக்குஇதுவேண்டும், ஸ்பெஷலாகஇந்தவசதிவேண்டும்என்றுகேட்டதில்லை. படப்பிடிப்புஇடைவேளையில்புல்வெளியின்ஏதோஒருமூலையில்முகத்தில்கைக்குட்டையைமூடியபடிபடுத்துக்கிடக்கும்ரஜினியைபலஆண்டுகளாகபார்த்திருக்கிறேன். ஷூட்டிங்கில்எல்லோருக்கும்என்னசாப்பாடோஅதுதான்அவருக்கும். எல்லோருடனும்சேர்ந்தேசாப்பிடுவார். இதற்கெல்லாம்காரணம், எளிமையாகஇருக்கரஜினியாரிடமும்கற்றுக்கொள்ளவில்லை.. அதுஅவர்கூடப்பிறந்தகுணம்!”(இயக்குநர்அமரர்ராஜசேகர் ,என்வழிஸ்பெஷல்.)

நிஜக்குதிரைஅவர்!

அந்தஅதிமுரட்டுக்குதிரையைவைத்துப்புனையப்பட்டஆகமென்மையானசினிமா,வலிமைஆனசினிமாஇன்றுவரைக்கும் 'ஜானி' தான்.

ஏனெனில்தமிழ்சினிமாவுக்குவாய்த்தவசீகரயதார்த்தபிம்பங்கள்சிலபேர்தான்.அதில்மிகச்சிறந்தவர்கள்இரண்டுபேர்.

ஒருவர்நாகேஷ்.இன்னொருவர்ரஜினி.

ஒப்பனைஅற்றுஓடிய,ஓடிக்கொண்டிருக்கும்நம்வீட்டு,நம்பக்கத்துவீட்டுமுகஜாடைக்குதிரைகள்.

ஒப்பனைஅறுத்துஇயங்கியகனவாளிமகேந்திரன்.

அதனாலேயே,ஜானிஇரட்டையர்களைக்கொண்டாடும்சினிமாவாகஅமையவில்லை.

அதுஎவ்வளவுபெரியஅவஸ்தைஎன்றுநியாயமாகச்சொன்னபடம்ஜானி.

கோழிகூவலும்,அருகிலேயேஅதுஇட்டமுட்டைகளும்,ஆவென்றகொட்டாவியும்,அப்புறம்அதேமுட்டையைஉடைத்துக்குடிப்பதுமாகஒருஆகக்கச்சடாஅதிரடிஓபனிங்,வித்யாசாகர்.பார்பர்.நேர்மையின்சிகரம்.

ஒருஇனியமனதுஇசையைஅனைத்துச்செல்லும்என்பதானஎவர்கிரீன்ட்ரீம்ஓபனிங்.ஜானி.சூழ்நிலைக்கைதி.

இரண்டுபேருமேநல்லவர்கள்.இரண்டுபேருமேகொஞ்சம்கெட்டவர்கள்.
வித்யாசாகரின் 'தான்உண்டுதன்பார்பர்ஷாப்உண்டு,தன்கருமித்தனம்உண்டு' வாழ்க்கையில்பாமா(தீபா) என்னும்அதிபேராசைக்காரிஅன்பைமுன்வைத்துநுழைகிறாள்.அடுத்துநுழைவதுஜானி.அவரின்காண்ஒற்றுமைபிறவி.இருவராலும்நேரும்அளவற்றமனஉளைச்சல்காரணமாககொஞ்சம்கொஞ்சமாகவித்யாசாகரின்மனதுநஞ்சாகிறது.அவரின்குணம்மிருகவேட்டைகொண்டுஅலையஆரம்பிக்கிறது. ஜானியின்திருட்டுகளுக்குமுதலில்போலிஸ்வித்யாசாகரைஇம்சைப்படுத்துவதில்ஆரம்பிக்கும்ஓட்டம்அதற்குப்பின்பாமாவைச்சுட்டுக்கொல்லும்வித்யாசாகரின்கொலைக்காகஇரண்டுபேரையும்தொற்றிக்கொள்கிறது.

இன்னொருபக்கம்தன்சூழ்நிலைத்திருட்டுவாழ்க்கையின்நிம்மதியற்றதன்மைக்குநடுவேஇசையும்காதலுமானபாடகிஅர்ச்சனாவை(ஸ்ரீதேவி)ச்சந்திக்கிறான்ஜானி.அவர்களுக்குள்நிகழும்அந்தமென்மையானதருணங்கள்தமிழ்சினிமாவுக்குஇன்றும்புதுசு.முகபாவனைகளும்,கண்பேசிவாய்பேசாமௌனமும்,நெகிழ்வும்,கோபமும்,பிரிவும்,வலியும்தமிழ்சினிமாவின்மிகச்சிறந்தநாயகனும்,நாயகியும்இசைக்கும்யதார்த்தகாதல்சித்திரம்ஜானி.!

காதலில்தருமிக்காதல்ஒன்றையும்ரஜினிஇந்ததமிழ்கிளாசிக்சினிமாவில்அரங்கேற்றியப்பார்!வித்யாசாகரின்காதல்இது!இன்னொருமனம்,இன்னொருஉடல்மொழி,ஒரேஉருவம்!

இன்றைக்குவரைக்கும்நீக்கமறஎல்லாகல்லுரிகல்ச்சுரல்நிகழ்ச்சிகளிலும்இடம்பெறும்மாபெரும்கலைமைம்(mime).உடல்மொழியால்வார்த்தைஇன்றிகவிதைசொல்லும்கலை.அதைரஜினிநிகழ்த்திபார்த்திருக்கிறீர்களா?

"ஸெனோரீட்டாஐலவ்யூ" என்றபாடல்.பாமா(தீபா),வித்யாசாகர் (ரஜினி).!பாருங்கள்.

இரட்டையர்களின்மாறிமாறிநிகழும்,நிகழ்த்தப்படும்ஓட்டங்களுக்குநடுவேஜானிஆதிவாசிகூட்டத்திலும்,வித்யாசாகர்அர்ச்சனாவீட்டிற்கும்இடம்பெயருகிறார்கள்.உறைந்தமுகத்துடன்இருக்கும்ஜானியைச்சுற்றிநிகழும்ஒருமலையககீதமும்,மெலிதாகஎழும்பிக்கரையும்இன்னொருகாதலும்கூடஇன்றும்காணஇயலாக்கனவுதான்.

சந்திப்புகள்தான்நம்வாழ்க்கையைக்கட்டமைக்கின்றன.அல்லதுசடன்ப்ரேக்போட்டுதிசைமாற்றுகின்றன.சந்திப்புகள்அன்றிஎதுவும்நிகழ்வதில்லைஇவ்வுலகில்ஆதாம்ஏவாள்காலத்தில்இருந்து.சிலசந்திப்புகள்நம்வாழ்க்கையில்வசந்தத்தைக்கொண்டுவருகின்றன.சிலசந்திப்புகள்இருக்கிறவசந்தத்தைக்கொண்டுசெல்கின்றன.ஜானிஎன்கிறமகேந்திரனின்அற்புதம்இவ்விஷயத்தைஒருபருவகாலமாற்றத்தைப்போல்,வெயில்போய்மழைவருவதுபோல்,மழைபோய்பனிக்காலம்நிகழ்வதுபோல்மிகஇயல்பாகநிகழ்த்திஇருக்கும்,அதன்ஒவ்வொருநொடிகளிலும்,அசோக்குமாரின்தன்னிகரற்றப்ரேம்களிலும்,வசனங்களிலும்,இசையிலும்.

அர்ச்சனாவின்வீட்டில்தங்கநேரிடும்வித்யாசாகரின்தலைக்குள்பேராசைகுடிகொள்கிறது.தொடர்ந்தகசப்புகள்காரணமாகஎழுந்தசுயகுணஅழித்தல்,அல்லதுவன்மம்என்றுவெவ்வேறாகஅக்குணமாற்றத்தைநாம்புரிந்துகொள்ளஇயலும்.எனினும்,அந்தநேர்மையானதருமியின்இயல்பானகுணம்அதுவல்லவே....அவன்தன்னைத்திருத்திக்கொள்ளும்போது,அவனதுவாழ்க்கையின்மிகச்சிறந்தபரிசை,ஜானிக்குஅவன்வழங்குகிறான்.

கொட்டும்மழையில்இளையராஜாவின்இசையில்,மகேந்திரனின்மனஅசைவுகளுக்குகாதல்இலக்கணம்எழுதிக்கொண்டிருப்பார்கள்ஜானியும்அர்ச்சனாவும்.மறக்கமுடியாதகாதலிசை.தேடலிசை.

ஜானிபடம்முடியும்போதுகாதலின்மறக்கமுடியாஇசைமறுபடியும்ஆரம்பிக்கிறது,காற்றில்எந்தன்கீதம்காணாதஒன்றைத்தேடுதேஎன்பதாக.

ஜானிதமிழ்சினிமாவின் ever green abstract wonder!

தருமுசிவராம்பிரமிள்என்கிறவிளங்கஇயலாப்பெருங்கவிஞனின்விளங்கஇயலாக்கவிதைஒன்றுஇருக்கிறது.

"சிறகிலிருந்துபிரிந்தஇறகுஒன்று
காற்றின்தீராப்பக்கங்களில்
ஒருபறவையின்வாழ்வைஎழுதிச்செல்கிறது" என்பதாக.

ஜானி, இருபறவைகளின்வாழ்வு.மகேந்திரனின்தீராப்பக்கங்களில்ரஜினிஎன்கிறஅதிஅற்புதயதார்த்தகலைஞன்எழுதிச்சென்றது.

யார்எழுதஇயலும்அதைமறுபடியும்?

இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com