எங்கே என் நண்பனின் வீடு

இன்னொருவனின் கனவு -34

காண்ப வெல்லா மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ !
- மகா கவி பாரதி

பயணம் என்பது ஒரு வித தவம்.

அந்த தவத்தின் மிகச் சிறந்த வரம் அதன் அனுபவங்கள்.

அந்த அனுபவம் ஒவ்வொரு பயணத்தின் போதும் மாறுபட்டுக் கொண்டே இருப்பது.

போகுமிடம் ஒரே இடமாக இருந்தாலும்,ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் அதன் வழி அனுபவம் முதற்கொண்டு நிகழும் அனைத்து அனுபவங்களும் நிச்சயமாக வேறு வேறு தான்,யாருக்கும்.

சபரிமலை,திருப்பதி,பழனி,அமர்நாத்,காசி,ஹரித்துவார் என்று வருடந்தோறும் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த விஷயம் நன்றாகப் புரியும்.

பத்து வருடங்களுக்கு முன்பு வரை ஒரு முக்கியமான பயணம் நமது வாழ்வின் அன்றாட நிகழ்வாக நம்மால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது..இப்போதும் கூட பெருநகர் தாண்டிய எல்லா ஊர்களிலும் இந்தப் பயணம் அநேகம் பேருக்கு அன்றாட நிகழ்வாகத் தான் இருக்கிறது.

அது பள்ளிக்கூட பயணம்.

தினமும், குறைந்த பட்சம் ஒரு கிலோமீட்டரில் இருந்து,பத்து கி.மீ வரை.பள்ளிக் கூடத்திற்கு நடந்தோ,சைக்கிளிலோ பயணம் செய்த அனுபவம் இல்லாதவர்கள் மிக மிகக் குறைவு தமிழ் நாட்டில், இந்தியாவில்,வளரும் நாடுகளில்,மூன்றாம் உலக நாடுகளில்.

அது ஒரு மிக எளிமையான பழக்கம்.பயண முறை, வழி.அதில் பாதுகாப்பு என்பது 99 சதவிகிதம் அவரவர் கையில் ஒப்படைக்கப் பட்டு விடுகிறது.



தவிர,ஒவ்வொரு மனிதனின்,மாணவப் பருவத்திலும், ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் இந்த பள்ளிக் கூட பயணம் நீடிக்கிறது.காலையில் கணக்கு டியூசன் ஆரம்பித்து,மாலை விளையாட்டு மைதானத்தில் பொழுதைக் கழித்து வீடு வந்து சேர்கிற வரைக்கும்,அந்த தினசரிப் பயணம் நமக்கு எத்தனை மனிதர்களை,எத்தனை வழியனுபவங்களை, அனுதினமும் புதிது புதிதாக நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதை நாம் அதிகம் யோசித்ததில்லை.யோசித்துப் பார்க்கும் பட்சத்தில்,அந்த பயணம்,அந்த சந்திப்புகள் நமது இன்று அறியப் படுகிற குணத்திற்கு,முகத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும் என்பது புலப்படும்.

இன்று,பள்ளிகள் பெருகி விட்டன.தூரமும் பெருகி விட்டது.வசதிகளும் பெருகி விட்டன.

ஒப்புக்கு நான்கு சக்கரங்கள் கொண்ட பள்ளி வாகனம் என்றழைக்கப்படும் உணர்வற்ற ஜந்து ஒன்றில், தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பொன்வண்டுகளைப் போல் நமது குழந்தைகள் தினசரி பார்க்கும் அதே சக முகங்களுடன், அந்த உணர்வற்ற அன்றாடப் பயணமொன்றை மேற்கொண்டு கொண்டே இருக்கிறார்கள்.அதை விட அறியாமல், அநியாயமாய் அடுத்தவரின் தவறுக்கு நேர்ந்து விடப் பட்டு இறந்தும் போகிறார்கள்.இன்று பள்ளி போவது என்பது போருக்கு போவது போல ஆகிவிட்டது. நிதானத்தை இழந்து அவசரத்தைப் பெற்றோம். அவசரத்திற்கு எதிர்கால சந்ததிகளை இழந்து கொண்டிருக்கிறோம்.உண்மையில் நிதானம் என்பது தான் வாழ்க்கைக்கு மிக அருகாமையில் உள்ள விஷயம்.பல நூற்றாண்டுகளாக இருந்து விசயமும் கூட.நாம் அதை முற்றிலும் மறந்து போயிருக்கிறோம். நம் சந்ததிகளுக்கு நிதானம் என்றால் என்ன என்று கூடத் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு.

எனினும்,மீள் பார்வை என்பது எதிலும்,எப்போது நினைத்தாலும் உடனடியான புதிய கற்றல் அனுபவத்தை உண்டாக்கும் வலிமை உடையது, யாருடைய வாழ்விலும்.கலை அந்தக் கற்றலை உண்டாக்கும் முதல் சாத்தியம் கொண்டது.அந்தக் கற்றலை இன்றைய அர்த்தமற்ற அவசர சினிமா உலகில் அதிகம் சாத்தியமாக்குவது, அடிப்படைவாத, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அற்ற நாடும்,அவர்களின் சினிமாவும்.நம்மை வெட்கப் படவைக்கும் சினிமா.

வாழ்க்கையை மிக மிக அருகில்,நிதானமாகத் தரிசிக்கும் யதார்த்த சினிமா. இன்று உலகம் பூரா மறுக்க முடியாத மகா மீள் அனுபவமாகக் கருதப் படும் சினிமா.

இரானிய சினிமா.

வாழ்க்கையை இரானியர்கள் சினிமாவில் தரிசிக்கும் முறையைப் பார்க்கும்போது,நாம் என்ன மாதிரியான சினிமாவை இங்கே செய்து கொண்டிருக்கிறோம், என்ன மாதிரி சினிமாக்களை இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம்,நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கலை அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற தீவிர தன் பயமும், சுய சிந்தனையும்,அது தரும் அவநம்பிக்கைப் பெருமூச்சும் எழுகிறது.

எனினும்,எப்பொழுதும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் நிஜ இரானிய கலைஞர் ஒருவரின் எவர் கிரீன் புன்னகை அல்லது அவரது எவர் கிரீன் சினிமா எந்த அவநம்பிக்கையையும் துடைத்து, வாழ்வை மறுபடி மலர வைக்கும் அற்புத சக்தி கொண்டது.



அகிரா குரோசோவா அடிக்கடி உச்சரித்த பெயர்.அவர் மிகவும் ரசித்த,நேசித்த கலை மனம்.

அப்பாஸ் கியாரோஸ்டமி(Abbas Kiarostami -born 22 June 1940).

அந்த உன்னத கலைஞன் உலகிற்கு அறிமுகப்படுத்திய, இன்று இரானிய சினிமா என்று அழைக்கப் படுகிற, "வாழ்வின் க்ளோசப் சினிமா" அனுபவத்திற்கு அவரின் புகழ் பற்ற பயண முப் பட வரிசை (triology) ஒன்றிற்குள் புகுந்து பயணிக்க வேண்டும்.

Koker Trilogy (1987–94).கோக்கர் ட்ரையாலாஜி.

பயண சினிமாவின் அதி உன்னதமான கலைப் படைப்பு என்று உலக சினிமா விமர்சகர்கள் கொண்டாடும் ட்ரையாலாஜி.

எங்கே என் நண்பனின் வீடு(Where Is the Friend's Home?-1987)
வாழ்க்கை,தவிர வேறொன்றும் இல்லை ..(Life and Nothing More-1992)
ஆலிவ் மரங்களின் ஊடே (Through the Olive Trees -1994)

இந்த மூன்று படங்களுமே ஒரே இடத்திற்கான பயணம் தான். நிகழ்வது வெவ்வேறு கால கட்டங்களில்.வெவ்வேறு சூழ்நிலைகளில்.

தானாக நிகழ்ந்த,சினிமா முப்பட வரிசை என்கிற அரிய பெருமை கோக்கர் ட்ரையாலாஜிக்கு உண்டு.ஆனாலும் அந்த அரிய பெருமைக்கு முழு சொந்தக் காரரும் அப்பாஸ் கியாரோஸ்டமி தான்.

சத்யஜித்ரே,விட்டோரியா டிசி கா,எரிக் ரோமர் போன்ற உலகின் தலைசிறந்த கலைஞர்களின் படைப்புகளுடன் அடிக்கடி ஒப்பிடப் படும் தன்மை உடையவை கியாரோஸ்டமியின் சினிமா எனினும் அவருடையது நிச்சயமாக அவரின் சினிமா தான்.வேறு யாரும் பின்பற்ற முடியாத கலவை அவரது சினிமா.முயற்சி சிறிதும் தென்படாத எளிய காட்சிகளும்,கருத்தியல் ரீதியாக சிக்கலான உணர்வுகளை எழுப்பக்கூடிய காண் அனுபவமும் கொண்ட கலவை.கதை சொல்லலும்,ஆவணப்படத் தேர்வும்,தெளிவும் ஒன்றாகக் கலந்த கலவை. நடப்பைக் கதையாகவும்,கதையை நடப்பாகவும்(fact as fiction,fiction as fact) காட்டும் சினிமா அப்பாஸ் கியாரோஸ்டமி உடையது.



தெஹ்ரானில் 1940-ல் பிறந்த அப்பாஸ் கியாரோஸ்டமி, பயின்றது ஓவியம்.தன்னுடைய இருபத்து ஒன்பதாவது வயதில்,இரான் அரசின் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான தேசிய அறிவுசார் கழகத்தில்,சினிமாவுக்கான தனித் துறை ஒன்றை நிறுவியதன் மூலம்,தன் சொந்த சினிமா வாழ்க்கையையும்,இரானிய புதிய சினிமாவுக்கான நிஜமான முதல் முயற்சியையும் ஆரம்பித்தார். அறுபதுகளிலும்,எழுபதுகளிலும் அப்போது ஆதிக்கம் செலுத்திய நியோ ரியலிச பாணியில் குறும்படங்கள், ஆவணப் படங்கள்,திரைப் படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும்,பழமைவாத,மத வாதிகளுக்கும், சாதாரண ஜனங்களுக்கும் இடையே இருந்த இறுக்கமான,பதட்டமான சூழலும் கொண்டு அமைந்திருந்தன அப் படைப்புகள்.மனித நேயம் அபரிதமாக வெளிப்பட்ட அப் படங்கள்,ஒப்பனை அற்ற,நடிப்பு அறியாத சாதாரண மனிதர்களால், அவர்கள் வாழும் கிராம சூழ்நிலைகளில் படம் பிடிக்கப்பட்டவை.கிட்டத் தட்ட இருபது படைப்புகளை உருவாக்கி இருந்த போதும்,அவரை இரானுக்கு வெளியே,உலக சினிமாவுக்கு அறிமுகம் செய்தது கோக்கர் ட் ரையாலாஜி தான்.

பூகம்ப பயண வரிசை(earth quake triology) என்று அழைக்கப் பட்ட,திட்ட மிடப் படாத அம் முப்பட வரிசையின் முதல் படம் எங்கே என் நண்பனின் வீடு(Where Is the Friend's Home?-1987).

சொராப் செபேரி(Sohrab Sepehri October 7, 1928 - April 21, 1980) என்கிற புகழ் பெற்ற பெர்சிய கவிஞனின் புகழ் பெற்ற கவிதை ஒன்றின் தாக்கம் தான் எங்கே என் நண்பனின் வீடு என்கிற மறக்க முடியாத சினிமாவின் தலைப்பு.அந்தக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.

எங்கே நண்பரின் வீடு?
விடியல் பொழுது ஒன்றில்
அந்த குதிரைக் காரர் கேட்டார்.
சொர்க்கங்கள் ஸ்தம்பித்தன.
ஒரு நடை பயணி
மணலின் இருள் மேல் ஆணையிட்டு
தனது உதடுகளில் இருந்து பிரகாசமான
கிளை ஒன்றை நீட்டினார்.
அதோ அந்த நெட்டிலிங்க மரம்
அவர் விரல்கள் சுட்டின.
அந்த மரத்திற்கு முன்
கடவுளின் கனவுகளைக் காட்டிலும்
பசுமையான தோட்டப் பாதை ஒன்று உண்டு,
அங்கே அன்பு குடிகொண்டிருக்கிறது
நல்ல நட்பின் நீல சிறகுகளைப் போல் பரந்து விரிந்து,
அங்கே காற்றின் சீழ்க்கை ஒலிக்கும்
பைன் மரத்தின் உச்சியில்
ஒளியின் கூட்டிலிருந்து
பறவையின் குஞ்சு ஒன்றை வெளியில் எடுக்கும்
சிறுவனைப் பார்ப்பீர்கள்
அவனிடம் கேளுங்கள்
எங்கே என் நண்பனின் வீடு என்று.

அந்த வர்ணம் வெளுத்துப் போன கதவு,ஒற்றைக் கதவு,மரக் கதவு,படபடக்கும் காற்றில் சகிக்க முடியாத முனகல் சத்தம் ஒன்றை எழுப்பியபடி முன்னும் பின்னும் மெதுவாக அசைந்து கொண்டிருக்கிறது. உள்ளே இருந்து உற்சாகமான கூச்சல்கள் கேட்கின்றன.சிரிப்பும்,அழுகையும் கலந்து.ஒரு கை அவசரமாக அந்தக் கதவைத் திறந்து உள்ளே நுழைகிறது.சட்டென்று அமைதி குடி கொள்கிறது அங்கே அவரைப் பார்த்ததும்.அவர் ஆசிரியர்.அவர்கள் சின்னஞ்சிறு மாணவர்கள்.அது அவர்களின் பள்ளி.ஆசிரியர் ஏற்கனவே திறந்திருந்த அந்த ஒற்றை ஜன்னலை மூடி விட்டு,அந்த சிறுவர்களைக் கடிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்."நான் வரும் வரை அமைதியாக இருக்கும்படி எத்தனை முறை சொல்வது?ஏன் நான் சொல்வதை செவிகளில் ஏற்றிக் கொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள்?",வகுப்பிலிருக்கும் பையன்கள் திரு திரு வென்று முழித்தபடி தலை குனிந்து அமர்ந்திருக்கிறார்கள்.அந்தப் பையனும்.அஹ்மத். அவனருகில் தலை குனிந்தபடி இன்னொரு சிறுவன் அமர்ந்திருக்கிறான்.நெமாத்சதே(Nematzedeh).அந்தப் பள்ளி கோக்கர் என்னும் வட இரான் மலைப் பகுதி கிராமம் ஒன்றில் இருக்கிறது.அஹ்மத் அந்த ஊரைச் சார்ந்தவன்.நெமாத்சதேவின் கிராமம் போஸ்தே(poshteh)வில் இருக்கிறது. கோக்கரில் இருந்து கொஞ்சம் தொலைவில். ஆசிரியரின் வழக்கமான சில பல அட்வைஸ்களுக்கு அப்புறம்,ஒவ்வொரு வகுப்பும் சந்திக்கும்,அந்த பூதாகர,டென்சன் நிமிடங்கள் ஆரம்பிக்கிறது அங்கேயும்.ஹோம் வொர்க்."எல்லாரும் வீட்டுப் பாடம் எழுதி விட்டீர்களா"என்று கேட்டவரே தன் அன்றைய பணியை ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

எல்லா சிறுவர்களும் தத்தம் நோட்டுப் புத்தகத்தை ஆசிரியரின் பார்வைக்கு சமர்ப்பிக்க,அவற்றைத் திருத்திக் கையெழுத்து இட்டவாறே ஒவ்வொரு டெஸ்க் ஆக கடந்து வருகிறார்.அகமத் தன் நோட்டுப் புத்தகத்துடன் தயாராக இருக்கிறான்.ஆனால்,அவன் அருகில் அமர்ந்திருக்கும் நேமாத்சதே என்ன செய்து கொண்டிருக்கிறான்,தலையைக் குனிந்தபடி?சற்று நேரம் டெஸ்க் கின் உள்ளே இருக்கும் தன் பையைத் துழாவி விட்டு,சில தாள்களை எடுத்து மேசை மீது வைக்கிறான்.அவனது தலை குனிந்தே இருக்கிறது. அவ்வப்போது,ஆசிரியர் எங்கே இருக்கிறார் என்று பார்க்க நிமிரும் போது அவனது முகம் தென்படுகிறது. அவனது கண்களில் மிரட்சியும்.அவர் வந்தே விட்டார் அருகில். அகமத்தின், நோட்டுப்புத்தகத்தில் கையெழுத்து இட்டுவிட்டு, நேமாத்சதே அருகில் வருகிறார்.அவனது தாள்களைப் பாக்கிறார்.கோபமுடன் அவனைப் பார்த்து கேட்கிறார்.உன் நோட்டுப் புத்தகம் எங்கே?தலை குனிந்தபடி அமர்ந்திருக்கிறான். எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்,இப்படி நடந்து கொள்ளாதே என்று,அவனை நோக்கி இறைக்கிறார்.மெதுவாக அவனது சின்னஞ்சிறு உடல் குலுங்குகிறது.அவன் அழுகிறான்,விசும்பல்கள் வெளியே கேட்காத வண்ணம்.ஆசிரியர் அவனது அருகில் வந்து அமர்ந்து,மறுபடியும் கேட்கிறார். சொல்,எத்தனை முறை நான் உன்னிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறேன்?கண்களில் நீருடன், நேமாத்சதே மூன்று விரல்களை நீட்டுகிறான்.கதவு தட்டப் படும் ஒலி கேட்கிறது.நான் வரலாமா சார் என்று கேட்கிறான் தாமதமாக வந்த இன்னொரு சிறுவன்.நீ போஸ்தே வில் இருந்து வருகிறாயா என்று கேட்கிறார்.ஆமாம் என்கிறான் அந்த சிறுவன். தூரத்தில் இருந்து வரும்போது சீக்கிரம் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும்,மாலை பள்ளியில் இருந்தும் கொஞ்சம் முன்னதாகவே கிளம்ப வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா என்கிறார்.ஆமாம் என்கிறான்.சரி,போய் உட்கார் என்று அவனிடம் சொல்லி விட்டு,மறுபடியும் நேமாத்சதே விடம் வருகிறார்.என்ன சொல்கிறாய் உன் தவறான நடத்தைக்கு என்கிறார்.அவன் தான் நேற்று,தன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்ததாகவும், நோட்டுப் புத்தகத்தை அங்கேயே விட்டு விட்டு வந்ததாகவும் சொல்கிறான்.அப்போது,போஸ்தே வில் இருந்து வந்த சிறுவன், தான் தான் நேமாத்சதேவின் உறவினர் பையன் என்று சொல்லி,அவனது நோட்டுப் புத்தகத்தை நீட்டுகிறான்.இனிமேல் இவ்வாறு செய்யாதே என்று,எச்சரித்து விட்டு,வகுப்பை ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.



அடுத்த காட்சி,பள்ளி விட்டு அனைவரும் வெளியே வருகிறார்கள்,உற்சாக முகங்களுடன்,சின்ன சின்ன சேஷ்டைகளில் ஈடுபடுகிறார்கள்.அகமத் நடந்து வீட்டுக்கு போக ஆரம்பிக்கிறான்.அப்போது ஓடியே வரும் நேமாத்சதே தவறி கீழே விழுகிறான்.அவன் காலில் சின்ன சிராய்ப்புகள்.அவனது பழுப்பு கால் சராயில் கொஞ்சம் மண்.அவனைக் கைதூக்கி விட்டு,அருகில் இருக்கும் குழாயில் நீர் பிடித்து, கழுவி விடுகிறான் அகமத்.அப்புறம் அவர்கள் தத்தம் வழியில் நடக்கிறார்கள்.தனது வீட்டுக்குள் நுழைகிறான் அகமத். ஒரு குழந்தையின் சிணுங்கல் நம்மை வரவேற்கிறது அவனது வீட்டுக்கு.அகமதின் உலகிற்கு.

கதை (plot) சினிமாவுக்கு மிக முக்கியமான விஷயம் இல்லை என்பதை தன் சினிமா மூலம் மறுபடி மறுபடி நிரூபித்தவர் அப்பாஸ் கியாரோஸ்டமி. மிகவும் வழமையான சமூக சம்பவங்களில் இருந்தும், கோட்பாடுகளில் இருந்தும் அசல் சினிமாவைப் பெறமுடியும் என்பதையும் உணர்த்தியவர் அவர்.நீங்கள் எதிர்பார்க்கிற காட்சிகள் அவரது சினிமாவில் இருக்காது.அவரது சினிமா எந்த உங்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முற்படாதது.நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி எந்த தீர்வையும் எந்த பிரச்னைக்கும் சொல்லி அமையாதது.ஒரு புன்னகையைப் போல நிகழும் சினிமா அப்பாஸ் கியாரோஸ்டமியுடையது. புன்னகையின் எளிமையும்,புன்னகைக்குப் பின் ஒளிந்திருக்கும் உணர்வினைப் போன்ற சிக்கலான உள்அர்த்தங்களையும் எழுப்பக் கூடியது அவரது சினிமா.

அகமதின் வீடு இரானிய சமூக,குடும்பக் கட்டமைப்பின் அடையாளமாக இருக்கிறது.பள்ளியில் இருந்து அவன் வீடு நுழைந்தவுடன் அந்த குழந்தையின் இடைவிடாத அழுகை ஒலி அவனை வரவேற்கிறது. வேலைகளும். அவனது அம்மாவும் வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சிறு அழுகைக்கும்,டயப்பர் மாற்றுவதில் இருந்து,பாட்டிலில் சர்க்கரை கலந்த சுடு நீர் சேர்த்து அதன் அழும் வாயில் திணிப்பது வரைக்கும் அலைந்து கொண்டே இருக்கிறான். வீட்டுப் பாடம் செய்ய வேண்டும் என்பது அவனது உடனடி விருப்பமாக இருந்தாலும்,அதன் ஒவ்வொரு முயற்சியும் வீட்டு வேலைகளால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.இதற்கிடையில்,செருப்பு அணிந்து வீட்டிற்குள் வரக்கூடாது போன்ற அட்வைஸ்கள் அந்த வீட்டின் முதியவளிடம் இருந்து அவனுக்குக் கிடைக்கின்றன.ஒருவழியாக அவன் தன் பள்ளிப் பையைத் திறந்து தனது நோட்டுப் புத்தகத்தை எடுக்கிறான்.அவனுடையதைப்போலவே இன்னொரு நோட்டுப் புத்தகம் இருப்பதைப் பார்க்கிறான்.அது நேமாத்சதே உடையது என்று அறிகிறான்.அவன் கீழே விழுந்தபோது,அவனது கைகளில் இருந்து தவறி விழுந்த நோட்டுப் புத்தகத்தை தான் எடுத்து வைத்ததும்,பின்,கொடுக்க மறந்ததும் ஞாபகம் வருகிறது.பதட்டம் தொற்றிக் கொள்கிறது அகமதுக்கு.ஏனெனில்,அன்று காலையில் தான்,வகுப்பில்,நேமாத்சதே,நோட்டுப் புத்தகம் இல்லாமல் காகிதம் ஒன்றில் வீட்டுப் பாடம் செய்து கொண்டு போனதற்கு,ஆசிரியரிடம் திட்டு வாங்கி அழுதிருந்தான்.நாளை,அதே மாதிரி நடக்கும் எனில்,நேமாத்சதே வகுப்பை விட்டு வெளியேற்றப் படலாம்.நோட்டுப் புத்தகத்தை அவனிடம் சேர்த்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்கிறான் அகமது. அதற்கு,அவன் நேமாத்சதே இருக்கும் ஊருக்கு போக வேண்டும்.தொலைவில் இருக்கிறது அது.அவனது அம்மாவிடம் விசயத்தைச் சொல்லி,நண்பனின் வீட்டை நோக்கிப் புறப்பட எத்தனிக்கிறான் அகமது.ஆயினும்,அயராது வேலை செய்து கொண்டிருக்கும்,அம்மாவிடம் அதைச் சொல்வதற்கே தாவு தீர்ந்து விடுகிறது அவனுக்கு. கடைசியில்,அதை ஒருவாறு அவளுக்கு அவன் விளக்க முற்படும் போது,இவ்வளவு நேரத்திற்கு மேல்,அந்த ஊருக்கு போவது நடக்காத விஷயம்,போய் வீட்டுப் பாடம் செய் என்கிற அதட்டல் தான் அவனுக்கு கிடைக்கிறது.கொஞ்ச நேரம் ஒப்புக்கு உட்கார்ந்து விட்டு,அவனது உறுத்திக் கொண்டிருக்கிற அந்தக் கடமையைச் செய்ய சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புகிறான் அகமத், பள்ளி நண்பனின் வீட்டைத் தேடி.

கோக்கரில் இருந்து போஸ்தேவுக்கான அகமதின் அந்தப் பயணம் நாம் மறந்து போன சிறுவயது மனமொன்றின் மகா மீள்தல் அனுபவம்.நோட்டுப் புத்தகத்தை நண்பனிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்கிற தார்மீக உணர்வின் மூச்சிரைக்கும் அனுபவம்.சிறியோர் குரலைச் சட்டை செய்யாத பெரியோர் நிறைந்திருக்கும் இவ்வுலகம் ஏற்படுத்தும் தன்னிரக்க அனுபவம். பழமைக்கும் புதுமைக்கும் இடையேயான முடிவற்ற ஊடாடலின் யோசிக்க வைக்கும் விரக்தி அனுபவம். அகமது என்கிற அந்த சிறுவனின் மனம் உலகப் பொது மறை.அவனின் தீர்க்கம் குழந்தைப் பிராயத்துக்கே உள்ள அடம்.ஒரு பிரச்சனைக்கான தீர்வை நேர்மையான ஒரே ஒரு வழி ஒன்றை மட்டுமே யோசிக்கும்,செயல்பட முனையும் அடம்.புறக்கணிப்புகளை புறந்தள்ளி ஓடிக் கொண்டே இருக்கும் சோர்வற்ற அகமதின் பயணம்,நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்த்தி இருக்கக் கூடியது தான்.எனினும்,அதை மறந்து போன,நமது தற்போதைய சூட்சும மனதை,பளார் என்று அறையும் பயணம் அந்த சின்னஞ் சிறுவனின் பயணம்.அப்பாஸ் கியாரோஸ்டமியின் என்றும் தவழும் புன்னகையைப் போல,நம் நெஞ்சில் என்றும் தங்கிக் கொள்ளும் வலிமை வாய்ந்த பயணம். நேர்மையின் பயணம்.

இன்று,சினிமாவில் சிறுவர்கள் குறித்தான பார்வை வெளிப்படும்,சிறுவர்கள் சினிமா நிகழும் ஒரு தேசம் என்றால்,அது நிச்சயமாக இரான் தான்.இரானிய சினிமா காட்டிய மாதிரி சிறுவர்களின் உலகத்தை இது வரை,உலகின் எந்த தேசத்து சினிமாவும் தொடர்ந்து காட்டியதில்லை.அதை இரானில் தொடர்ந்து நிகழ்த்தியவர் அப்பாஸ் கியாரோஸ்டமி. அவருடைய இருபதுகளில்,அவர் எடுத்த முதல் குறும்படமே(bread and alley)ஒரு சிறுவனின் பள்ளிப் பயணம் குறித்து தான்!அவருடைய 'தி ட் ராவலர்'(1974), கால்பந்து போட்டி ஒன்றைக் காண,டெஹ்ரான் செல்ல நினைக்கும் சிறுவனின் அனுபவங்கள் குறித்த படம்.அவர் திரைக் கதை அமைத்த 'the white balloon' இன்றும் நினைவு கூறப் படும் சிறுவர் சினிமா.எனினும்,அவரது சினிமாவின் வெளியுலக பிரவேசம் கோக்கர் கிராமத்தில் இருந்து தான் ஆரம்பித்தது.நியூ யார்க்கில் அவரது 'life and nothing more (alias) ...and life goes on' முதன் முதலில் 1992-ல் திரையிடப் பட்டது.



கோக்கர்ட்ரையாலாஜியின்அடுத்தபடம் 'வாழ்க்கை,தவிரவேறொன்றும்இல்லை' ..(Life and Nothing More-1992) தானாகநிகழ்ந்தஒருகாண்அனுபவம்.ஒருபடைப்பாளியின்கனவுஎதார்த்தத்தில்இருந்துதான்மறுபடிமறுபடிஉருவாகிறதுஎன்பதைஉறுதிசெய்தஅனுபவம். அப்பாஸ்கியாரோஸ்டமியின்சொந்தபயணஅனுபவம்! அகமதும்,நேமாத்சதேவும்எப்படிஇருக்கிறார்கள்?அல்லது, இருக்கிறார்களா? என்றுதேடச்சென்றஅனுபவம்.ஒருபூகம்பப்பேரழிவுக்குப்பின்நிகழ்ந்ததேடல்அனுபவம்!பூகம்பத்தால்பாதிக்கப்பட்டமக்களின்நடுவேஅந்தப்படம்ஒருஇயக்குனரின்சுயஅறிமுகத்துடன்ஆரம்பிக்கிறது. அழிவின்அதிகுரூரகரங்களாலும்துடைத்துவிடஇயலாததன்னம்பிக்கைமனிதர்களின்அனுபவம் 'வாழ்க்கை,தவிரவேறொன்றுமில்லை'.இதன்தொடர்ச்சியான 'ஆலிவ்மரங்களின்ஊடே' இயக்குனருக்கும்,அந்தகிராமத்தில்வாழும்நிஜமனிதர்களும்,அவருடையநடிகர்களுமானசிலருக்கும்இடையேநிகழும்நிஜஅனுபவங்கள்குறித்தானபடம்.பூகம்பத்தின்நிகழ்வுக்குமறுநாள்திருமணம்புரிந்தஇளம்பெண்மற்றும்அவளதுகணவனின்கதைஅது.சிதிலங்களுக்குள்ஆரம்பிக்கும்புதியகனவு.புதியவாழ்க்கை. பழமைக்கும், புதியதலைமுறைஇரானியமனதுக்கும்இடையேநிகழும்முடிவற்றஊடாடல்!. இந்தப்படத்தின்வேறொருகலைஅனுபவத்தொடர்ச்சிஆன 'taste of cherry",அப்பாஸ்கியாரோஸ்டமியின்படைப்பின்உச்சகட்டஅனுபவம்.

பயணங்களிலேயேகடக்கமுடியாத,தடுக்கமுடியாதபயணம்இளமையிலிருந்துமுதுமைக்குநகர்வதுதான்.நீங்கள்இளமையாகஇருந்தபோது.முதுமைஉங்களைச்சுற்றிஒட்டாமல்ஊடாடிக்கொண்டிருந்தது. இப்போதுநீங்கள்முதுமைஅடைந்திருக்கும்போது,இளமைஉங்களைச்சுற்றி,ஊடாடிக்கொண்டிருக்கிறது.அனல்மேல்பனித்துளிஅனுபவம்அதுயாருக்கும்.அதை,அதன்காண்அனுபவத்தை,மிகநேர்மையாக.மிகஎளிமையாக, மிகசிக்கலாக,மிகஉணர்வுப்பூர்வமாகதரிசிக்கவேண்டுமெனில்,நீங்கள்கண்டிப்பாக,எப்போதும்கருப்புகண்ணாடியும்,புன்னகையும்அணிந்திருக்கும், இந்தநூற்றாண்டின்தலைசிறந்தகலைஞன்அப்பாஸ்கியாரோஸ்டமியின்,அத்தனைபடைப்புகளையும்கண்டேதீரவேண்டும்

அப்பாஸ்கியோராஸ்டமியின்படைப்புகள்குறித்தஅகிரகுரோசவாவின்நேரடிவார்த்தைகள்இதைஉறுதிப்படுத்தும்உங்களுக்கு.

"Words cannot describe my feelings about them and I simply advise you to see his films... When Satyajit Ray passed on, I was very depressed. But after seeing Kiarostami's films, I thanked God for giving us just the right person to take his place." --Akira Kurosawa'.
ஏனெனில்,நேர்மையின்எளிமையானபயணிஒருவரின்அனுபவத்தையார்கடக்கக்இயலும்?

இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com