எதிரெதிர் துருவங்களில் பயணிக்கும் இரண்டு மனங்கள்

இன்னொருவனின் கனவு - 30

"நான் மணிரத்னம் ஸ்கூலில் இருந்து பயின்று வந்தவன் என்பது தான் என் மரியாதை"

-நடிகர் சூர்யா,கோடீஸ்வரன்,விஜய் டிவி.-9/7/12"

சம காலத்தின் மிகச் சிறந்தக் காண் அனுபவப் படைப்பாளிகளுள் ஒருவன்.

பயணங்களின் காதலன்.இயற்கையின் காண் ஒளிக் கவிஞன்.

இயற்கை அழகியலின், இந்திய,தமிழ் சொரூபம்.

இந்திய இயற்கையைத் தாண்டி,அதன் வயல் வரப்பு,காடு,கடல்,மலை,பாலை,அருவி,ஆகியவை தாண்டி காட்சியோ,கேமராவோ,கதையோ வைத்து அறியாதவன்.

சொல்லப் போனால்,வைக்க விரும்பாதவன்.

முதல் பல்லவியில் இருந்து (pallavi anu pallavi-83),கிட்டத் தட்ட முப்பது வருடங்கள்,இடையறாத் தவமென அதைக் காப்பவன்.

முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை ஆகிய இந்திய இயற்கை அன்னையின் மாறுபட்ட புன்னைகைகளை மறுபடி மறுபடி தன் சினிமா கேன்வாசில் வரையும் ஓவியன்.

தமிழனால் அதிகம் நேசிக்கப் படுபவன்,கொண்டாடப் படுபவன்,புறக்கணிக்கப் படுபவன்.

இந்திய,தமிழ் வருங்கால சந்ததிகளால் நேசிக்கப் பட இருக்கிறவன்.



மழை,மலை,பனி,வெயில்,குளிர்,கானகம்,அருவிகள்,ஆறுகள்,இரவு,பகல்,இயற்கை,மானுடம்,
இந்தியா,இந்திய சினிமா,மணிரத்னம்!

"உண்மையில் எனக்கு சினிமா எடுக்கத் தெரிய வில்லை என்று தான் நினைக்கிறேன்.என் முதல் படம் பண்ணும் போது எனக்கு அந்த நினைப்பு இருந்தது.ஏனென்றால் நான் யாரிடமும் உதவியாளர் ஆக வேலை பார்த்ததில்லை.சரி,சினிமா எடுத்துப் பழகிக் கொள்வோம்,கற்றுக் கொள்வோம் என்று ஆரம்பித்து கிட்டத் தட்ட இருபது படங்களுக்கு மேல் பண்ணி விட்டேன்.இப்பவும் எனக்கு சினிமா எடுக்கத் தெரிய வில்லை என்று தான் தோன்றுகிறது.ஒவ்வொரு புது படத்தின் ஆரம்பத்தின் போதும் இந்த நினைப்பு மனதில் வந்து உட்கார்ந்து கொள்கிறது."-மணிரத்னம் (IANS-பேட்டியில்)

மணிரத்னம் என்கிற யதார்த்த மௌனத்தை, மனதைத் தொட்டுச் செல்லாமல்,பயணங்களை இந்திய சினிமாவில் முன்னும் பின்னும் நாம் மேற்கொள்ள இயலாது.

மணிரத்னம் இந்தியாவை அதன் இயற்கையை நேசிக்கும் நம் பயண வழிகாட்டி.

the guide.

சம கால இந்திய சினிமாவின் ஜன்னல்.

வெயில் ஆரம்பிக்கும் போது,கேமராவைத் திறந்து, வெயில் போகுமுன் காட்சிகளைச் சுடும் சினிமா மளிகைக் கடையின் கடமை,கண்ணியம்,கட்டுப் பாடுகளை மீறிய கலைஞன்.

இயற்கையின் முன் குழந்தையைப் போல தன் கண்களை அகல விரித்த படைப்பாளி.அதை நமக்கு பதிவு பண்ண மலையேற்ற வீரனைப் போல சாகசங்கள்,நிகழ்த்திய,நிகழ்த்தும் இயற்கையின் காதலன்.

முன் பனியையும்,மூச்சு சூடேற்றும் குளிரையும்,அதிகாலைக் காற்றையும்,ஆவேச அருவியின் காதலையும்,மலைகள் தேக்கி வைத்திருக்கிற மர்மங்களையும்,இலைகள் சொட்டுகிற இடையறா காமத்தையும், பகலையும், இரவையும்,பூப் பூக்கும் தருணங்களையும், அக்கறையற்றகடலையும், ஆளற்ற ரயில் நிலையங்களையும்,ஆட்கள் நெருக்கும் மும்பையின் சேரிகளையும்,வாழ்க்கை துளிர்க்கும் நட்சத்திரப் பொழுதுகளையும்,யமுனை ஆற்றின் ஈரத்தையும்,ஆறுகள் சொல்ல மறந்த, சொல்லத் துடிக்கும் காதல் வரலாறுகளையும் சொன்னவன்.



திருமணம் விரும்பாத இளம் பெண்களின் இளமை மனதை மழையோடு,அவர்கள் ஆடும் மௌன ராகமாகவும்,மனைவி மேல் அக்கறை கொண்ட அவள் விரும்பா க் கணவனின் சொல்ல இயலாக் காதலை, ஒரு புது தில்லி நைட் டிரைவ் உடனும்,பனி பொழியும் அற்புத நான்சென்ஸ் காதல் ஒன்றை உதக மண்டல இதயத்தைத் திருடாதேவிலும், அம்பாசமுத்திர விளையாட்டுத் தமிழ்ப் பெண்ணொருத்தியின்,ஆவேசத்தை, நாம் நேசிக்கும் நம் தேசத்தின் அக்கறை அற்ற ராணுவ இதயங்களைத் துளைக்கும் அந்த அற்புத மனைவி பந்தத்தை, காஷ்மீர் பனிக் காடுகளுக்குள் திரிய விட்டும்,மணிரத்னம் ஆரம்பித்த ஆல் இந்தியா டூர் இன்றைக்கு வரைக்கும் போட்டி பேக்கேஜ்கள் இல்லா பயணப் பரவசம்.வாழ்வியல் சுற்றுலா.

மௌன ராகம் -புது தில்லி.
இதயத்தைத் திருடாதே- உதக மண்டலம்.
ரோஜா-அம்பாசமுத்திரம்,காஷ்மீர்.
நாயகன்,பம்பாய்,குரு - மும்பை.
உயிரே-ஹிமாச்சல்,அஸ்ஸாம்,வடகிழக்கு மாநிலங்கள்,டெல்லி,கேரளா,லடாக்,பூட்டான்.
கன்னத்தில் முத்தமிட்டால்-இலங்கை,ராமேஸ்வரம்.
ராவணன்-மேற்குத் தொடர்ச்சி மலை(western ghats).

மணிரத்னத்தின் சினிமாப் பயணம் என்பதே பயணங்களால் ஆனது தான் பெரும்பாலும்.

அவருடைய கொண்டாடப் பட்ட பயணங்கள் யாரும் அறிந்தவை.

ஆனால், நம்மால் புறக்கணிக்கப் பட்ட,கண்டு கொள்ளப்படாத,அவரின் அற்புத பயணம் ஒன்று தான் நாம் மறுமுறை காண இருப்பது.

தீவிரவாதம் குறித்த அவரின் ட்ரையாலஜி யின் மூன்றாவது (ரோஜா,பம்பாய்,உயிரே )பயணம்.

பிரச்னையின் தீவிரங்கள் அறியாமல் அதைத் தொட்டு சூடு போட்டுக் கொள்பவர் என்பார்கள் விமர்சகர்கள் மணிரத்னத்தை.

எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது.

இந்தியனுக்கும் அது இருக்கிறது.

ஒன்று பொதுவான இந்திய அபிமானம்.

இன்னொன்று இந்திய நடுவண் அரசு, அதன் தேசியத்தின் பேரால் பிராந்தியங்களில் நிகழ்த்தும் அசாத்திய,தாங்க இயலா புறக்கணிப்பு கண்டு கொதிக்கும் மனோபாவம்.

உள்ளுக்குள் நடக்கும் போர்.

ஆகஸ்ட்15,இந்திய சுதந்திர தினம்.

அந்த தினம் கொஞ்சம் கூடக் கொண்டாடப் படாத, கொண்டாடப் பட விரும்பாத,அழுது வடிகிற, ஆயிரம் போலிஸ் மற்றும்,ராணுவ வீரர்களின் துப்பாக்கிப் பாதுகாப்பில் மூவர்ணக் கொடி ஏற்றப் படுகிற,நிதர்சன அவமானம்,தங்களை இந்தியர்கள் என்று சொல்லத் துளி அளவேனும் விருப்பப் படாத, வரலாறு,பூகோளம் கொண்ட மக்களின் மனம் வட கிழக்கு மாநிலங்கள் உடையது. அஸ்ஸாம், மணிப்பூர்,மேகாலயா,அருணாச்சல் பிரதேசம்.

அது இன்று இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது,உத்தரகண்ட்,ஜார்கண்ட்...என்பதாக.

அவர்கள் வேறு.நாம் வேறு.

நாம் தேசியத்தைக் கேள்வி கேட்கிறோம் உள்ளிருந்தே,இது நம் தேசம் என்பதால்.

அவர்கள் நம் தேசியத்தைக் கேள்வி கேட்கிறார்கள், அது அவர்களின் உணர்வு பூர்வமானது அல்ல என்பதால்.



வரலாறு வேறு,பூகோளம் வேறு,தேச விசுவாசத்திற்கு என்று,நம் மண்டையில் அடித்து சொல்லும் நம் மக்கள் என்று நாம் கருதும்,வேற்று மக்கள் அவர்கள்.

இந்தியா சுமக்கும், அடக்குமுறை, சர்வாதிகார, வல்லரசு பிம்பத்தின் கௌரவப் பலி அவர்கள்.

நம் வெற்று,வெட்டி,தேசப் பற்றுக்குத், தினம் தினம் நாசமாய்ப் போகும்,மலை வாழ் மானுடம் அவர்களுடையது.

இந்த உலகில்,சொந்த மக்களை வேவு பார்க்கும் மிகச் சில அயோக்கிய அரசுகளில் ஒன்று சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா. அதை அந்த மலை மக்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பசுமை ஏய்ப்பு என்கிற இந்திய கார்ப்பொரேட் ஆயுதத்தின் வெறிக் கதையை.

இது வேறு.

சினிமா என்பது இந்திய சினிமாவாக அறியப் படுவது தேசியம் போலியாகவாவது பொங்கும் main land cinema வில் தான்.

யோவ்,படம் ஆறு மாசத்துல முடியுமா, தீபாவளி, பொங்கல்,வருஷப் பிறப்பு,அட ஒரு வெள்ளிக் கிழமையாவது ரிலீஸ் பண்ணிடலாமா என்று இயங்கும் யதார்த்த அயோக்கிய ஆலைச் சூழல், நம் மெயின் ஸ்ட்ரீம் சினிமா.

இரண்டுக்கும் இடையில் இயங்க முயன்றவர்கள், பல நேரங்களில் தன் அடையாளமும் அற்று,தேச அடையாளமும் அற்றுத் தோற்று வீணாய்ப் போயிருக்கிறார்கள்.

ஏனெனில்,சினிமா சாதாரணம் அல்ல.ஊடகத்தின் உச்ச கட்டம்.

இங்கு 'inbetween' என்கிற விசயமே கிடையாது.

வெற்றி.தோல்வி.வாழ்வு.சாவு.அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில்,சுய மன சாட்சியுடன்,அதிகப் பிழை இன்றி, இயங்குவது தற்கொலை என்று அழைக்கப் படுகிறது வியாபார மொழியில்.

மணிரத்னத்தின் ஒவ்வொரு சினிமா முயல்வும் தற்கொலையை ஒட்டியது தான் வியாபார சினிமாவில்.ஆனால் முடிவு அவருக்கு சாதகமாகத் தான் இருந்திருக்கிறது அநேக தருணங்களில்.
சில சமயங்களில் அவர் வரலாறு காணாத தோல்விகளுடன் தனித்து விடப் பட்டிருக்கிறார்.

ஏனெனில்,அவரின் மனம்,அல்லது அவரின் சினிமா மனம்,இந்திய தேசியவாதத்த்திற்கும்,அதன் பிராந்திய ஏய்ப்பு உண்டாக்கும் கொதிப்புக்கும் இடையில் ஊடாடும் நமது சராசரி இந்திய மனம்.

அவர் சினிமா கலைஞன் என்கிற அளவில், கன்னட, தமிழ் சினிமா மளிகைக் கடையில் அனுபவம் பெற்று,இந்திய சினிமா சூப்பர் மார்க்கெட்டுக்குள் தன்னை,தன் கனவை அடையாளப் படுத்த நினைத்தார்.

ஸ்கூல்,லோக்கல் க்ளப் கிரிக்கெட்,ரஞ்சி,நேஷனல் டீம் என்றால் குட்டிக் கிரிக்கெட் பசங்களுக்கும் புரியும்.சினிமாவில் இருந்து ஸ்போர்ட்ஸ் வரைக்கும் இந்தியா அப்படித் தான்,அரசியல் உட்பட.

ஆகச் சிரமம், இந்திய சினிமாவிலும்,பிராந்திய சினிமா விலும் ஒருங்கே இயங்குவது.

சத்யஜித்ரே,குருதத், ரித்விக் கட்டக், புட்டண்ணா கனகல், அசுதோஷ் கௌரிக்கர், சேகர் கபூர், ஷ்யாம் பெனகல், பிமல் ராய், முகுல் ஆனந்த், சஞ்சய் லீலா பன்சாலி, மது பண்டார்க்கர், மணி கௌல், அபர்ணா சென், கேத்தன் மேத்தா, தீபா மேத்தா, கோவிந்த் நிகாலினி, கிரிஸ் கர்னார்ட், விக்ரம் பட், அடூர் கோபால கிருஷ்ணன், சந்தோஷ் சிவன், என்று நீளும் இந்தியாவின் ஆகச் சிறந்த கனவு கண்டவர்கள், காண்பவர்கள் இன்னமும் தமிழ் சினிமா மளிகைக் கடைக்குள் அப்பரண்டிஸ் ஆகக் கூட நுழைய முடியவில்லை! அதே மாதிரி இங்கே வெற்றி பெற்ற ஜாம்பவான்கள் இந்திய சினிமா சூப்பர் மார்க்கெட் டில் சாதிக்க முடிய வில்லை.அது நம் குற்றமா? இல்லை அவர்களின் குற்றமா? என்பது இன்னமும் மில்லியன் டாலர் கேள்வி தான்,

ஆகவே, ஆகச் சிரமம்,இந்திய,தமிழ் சினிமா மளிகைக் கடையில் வேலை பார்ப்பது. பிழைப்பது. மன சாட்சியுடன் இருப்பது.

அதை,இந்திய சினிமாவில் முதன் முதலில் வெற்றிகரமாக நிகழ்த்தியவர் மணிரத்னம்.

இன்னொருவர் ராம் கோபால் வர்மா.

சும்மா இல்லை தென் சினிமா,அது இந்தியத் தேன் சினிமா என்று நிரூபித்தவர்கள் இவர்கள்.

ஊரெல்லாம் பேர் எடுத்தவர்கள் சொந்த ஊரில் சும்மா இருப்பார்களாம்.

அப்படி கமர்ஷியல் பாக்ஸ் ஆபீஸில் மணிரத்னம்,சும்மா இருந்த,இருக்க நேர்ந்த சினிமா உயிரே.

சொந்த செலவில் சூன்யம்.

சினிமா வியாபாரி என்று மணிரத்னத்தை ஒதுக்குபவர்களுக்கு, மேற் சொன்ன அவரின் அனுபவம் அவரைப் பற்றிய வேறு அபிப்ராயத்தையும் தரக் கூடும்.

அஸ்ஸாம்,அருந்ததிராய்,மாவோயிஸ்ட்,மலையக மக்கள்,அவர்தம் பிரச்னைகள் குறித்தெல்லாம் நாம் அவ்வளவாக அறிந்திருக்காத காலம்.அப்போது இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு வேறு(1998).dilse வெளிவந்தது.தமிழில் உயிரே.தேசியப் பற்றில் சிக்கிக் காணமல் போயிருந்த பிராந்திய உணர்வுச் சிக்கல்களைப் போல,உயிரே வும் காணமல் போயிற்று. ஆனாலும், விமர்சக அடிப்படையில் தில்சே' சிறந்த படமாகவே கருதப் பட்டது.இரண்டு தேசிய விருதுகள் வாங்கியது.பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் Netpac விருது வாங்கியது.யுகே பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் டாப் டென் னில் வந்த முதல் இந்தியப் படமும் அதுதான்.இங்கே,ஆறு பிலிம் பேர் விருதுகளைக் குவித்தது.ஆனாலும் அது கண்டு கொள்ளப் படாத படம் தான்.

இப்போது பாருங்கள் உயிரேவை மறுபடியும்.

எல்லாவற்றிற்கும் பின் ஒரு மனது இருக்கிறது.அந்த மனது அவரவர் அனுபவம் சார்ந்து உருவானது, அந்த மனம் சொல்லும் அத்தனையையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நமக்கு எனினும்,அந்த மனதை நாம் புறக்கணிக்க இயலாது.

உயிரே புறக்கணிக்கப்பட்டவரின் சினிமா.

மணிரத்னத்தின் ஒரே ஒரு அப்ஸ்ட்ராக்ட் (abstract) சினிமா.பயண சினிமா.

சுஜாதாவும்,மணிரத்னமும்,சந்தோஷ்சிவனும்,ஏஆர்ரஹ்மானும்,ஷாருக்கானும்,மனிஷா கொய்ராலாவும், சினிமாவிற்கென சர்ப்பங்களைப் போல் பின்னிப் பிணைந்த தருணம்.

பிளாப்.

அதனால் என்ன? அது இன்றைக்கும் சிறந்த சினிமா தான்.

சிறந்த சினிமா என்பது பாக்ஸ் ஆபீஸ் பரபரப்புகளுக்கு அப்புறமும் கூட உயிர்ப்புடன் இருக்கும்.

ஒரு மறு காணலில் மறுபடியும் தன்னை அது நிரூபிக்கும்.

உயிரே' அப்படிப் பட்ட சினிமா.

உயிரே.dilse.-1998.

இரண்டு பயணங்களின் கதை தான் உயிரே.இரண்டு மனங்களின் கதையும்,அமர்காந்த் வர்மா(prtogonist),மேக்னா (antagonist).காதலின் ஏழு நிலைகள் கடக்கும் பயணமும் கூட.

ஈர்ப்பு,காமம்,காதல்,மரியாதை,வழிபாடு,ஆவேசம்,இறப்பு.

அமர்காந்த் வர்மா(ஷாருக்கான்) தில்லி வாழ் ஆல் இந்தியா ரேடியோவின் ப்ரோக்ராம் எக்ஸிக்யூடிவ்.இந்திய சுதந்திரத்தின் பொன் விழா(1998) கொண்டாட்டங்களை ஒட்டி,அவன் இந்தியாவின் வட கிழக்குப் பகுதிக்கு,அங்கு வாழும் மக்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய அனுப்பப் படுகிறான்.

இருள் கவிந்திருக்கிற,பனிக் குளிருடன் ஆளற்று நிசப்தத்தில் உறைந்திருக்கிற அந்த ரயில் நிலையத்தில் இரண்டு மனங்களின் முதல் சந்திப்பு நிகழ்கிறது.அழகான சிறு கதை அது.அமர் தன் சிகரெட்டுக்கு நெருப்பு தேடுகிறான்.நெருப்பைப் போன்ற மனதுடன் இனி அவனை அலைய வைக்கப் போகிற அந்தப் பெண்ணைச் சந்திக்கிறான். வலிகளால் உறைந்து போன,உணர்ச்சியற்ற முகம் அவளுடையது.அவனிடம் இருந்து நழுவிக் கொண்டே இருக்கப் போகிற முகம்,எனினும் அவனைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கப் போகும் மனம்.மிகுந்த உற்சாகமான மனம் ஒன்றும் மிகுந்த பற்றற்ற மனம் ஒன்றும் சந்தித்துக் கொண்டே இருக்கும் அழுத்தம் தில்சே வின் ஒவ்வொரு நிமிடத்திலும் நிரம்பி நம்மை ஆக்ரமிக்கும்.



உயிரேஅல்லதுதில்சே,பதினைந்துவருடங்களுக்குமுன்,அதன்வெளியீட்டின்போதுசந்தித்தபார்வையாளர்சூழல்என்பதுமிகவெளிப்படையானது.ஊடகவிமர்சனங்கள்தவிரவேறேதும்படத்திற்குபார்வையாளனைதயார்படுத்தாதசூழல்.வேறுஒருகளம்,வேறுஒருசினிமாஎன்பதைமுன்கூட்டியேசொல்லித்தயார்படுத்தஇன்றுதொலைக்காட்சிஊடகங்கள்இயக்குனர்ஆரம்பித்துமொத்தகுழுவையும்உட்காரவைத்துஅந்தசினிமாவெளியாவதற்குமுன்னேநமக்குகோடிட்டுக்காட்டிவிடுகின்றன.எல்லாசினிமாவையும்இந்தவசதிகாப்பற்றுகிறதுஎன்றுசொல்லிவிடமுடியாதுஎனினும்,வித்தியாசமானகதைக்களன்கொண்டசினிமாக்களைஅவைகாப்பற்றிஇருக்கின்றன,மைனா,வழக்குஎண்என்றுஉதாரணங்களைச்சொல்லமுடியும்.உயிரேவுக்கும்,தில்சேவுக்கும் 1998-இல்அதுநிகழவில்லை.இதுமணிரத்னம்சினிமாஎன்கிறஒரேமுன்ஏற்பாடுதான்பார்வையாளனின்மனதிற்குஇருந்தது.

உதாரணத்திற்கு,தில்சேவின்மனிஷாகொய்ராலாவின்கதாபாத்திரம்.மேக்னா.

மேக்னாமாதிரியானஒருபெண்ணைநாம்அதற்குமுன்எங்கும்சந்தித்திருக்கவில்லை.அந்தகதாபாத்திரத்தின்உடல்மொழி,செயல்பாடுகள்மிகவிசித்திரமாகஇருந்தன.நாம்தீவிரவாதிஎன்கிறஅம்சத்தைநம்தேசியத்தைவிட்டுவெளியில்உள்ள,நமக்குஎதிரானஒருமனச்சூழல்என்பதாகயோசித்துவைத்திருந்தோம்.ராஜீவ்காந்தியைக்கொன்றதனுவின்,இயக்கத்தின்பிம்பம்,அல்லதுகாஷ்மீர்முஸல்மான்களின்பிம்பம்நமக்குள்தீவிரவாதத்தின்சாயல்ஆகநிழல்ஆகப்படிந்திருந்தது.நம்முடன்வாழும்நம்சொந்தமக்கள்என்றுநாம்நினைக்கும்,ஆனால்அவர்கள்நினைக்காதமக்களின்மனதுஅப்போதுஅதிகம்அறியப்பட்டிருக்கவில்லை.இக்கட்டுரையின்முதல்பகுதியில்சொல்லப்பட்டிருக்கும்அந்தமனம்சார்ந்தநியாயங்கள்அன்றுபகிரப்பட்டிருக்கவில்லை.ஆனாலும்,அப்போதும்இதேமனம்தான்அவர்களுக்குஇருந்தது.அவர்கள்இந்தியதேசியத்தின்இன்னொருமுகத்தை,அதன்வன்முறையைஅனுபவித்துக்கொண்டுதான்இருந்தார்கள்,இப்போதும்இருக்கிறார்கள்.அவர்கள்உற்சாகம்என்பதுநீர்க்குமிழிமாதிரி.தோன்றியவுடன்யதார்த்தம்உணர்ந்துஉடையும்வலி.அவர்களால்நம்சுதந்திரதினத்தைக்கொண்டாடமுடியவேமுடியாது.அந்தமனம்மேக்னாஉடையது.அதுஅமர்மாதிரியானஇந்தியனின்எளியகாதல்மனதை,அதன்உற்சாகத்தைஇடைவிடாதுசந்திக்கநேருகையில்குழப்பமும்,வலியும்தான்மிஞ்சும்.தில்சேவின்அடிநாதம்இதுதான்.இதற்குஅன்றையபார்வையாளர்கள்தங்கள்முதல்காணலில்நிச்சயமாகதயாராகஇருந்திருக்கவில்லை.ஆனால்தில்சேடாக்குமெண்டரியும்அல்ல.

சையசையாபாடலுடன்அமரின்பயணம்நம்மனதிற்குள்ஒட்டிக்கொள்ளஆரம்பிக்கிறது.

மலையகஇயற்கைஎன்பதுகொட்டிக்கிடக்கும்உற்சாகம்.ஒருமுறையேனும்அங்குபோய்வந்தவர்களுக்குத்தெரியும்,அந்தஉற்சாகம்அதற்கடுத்துஉங்களின்ஒவ்வொருவறண்டமனப்பொழுதுகளிலும்உங்கள்மனதைநிரப்பும்அமுதசுரபிஅனுபவம்என்பது.தில்சேவில்இயற்கையின்வெளிச்சப்பகுதியை,அதன்உயிர்ப்பிக்கிறஅனுபவத்தை,உற்சாகத்தை,எல்லைஇல்லாஆனந்தத்தைஅமர்மூலமாகத்தான்நாம்தரிசித்துக்கொண்டிருப்போம்.அவன்நம்முடையமனத்தைக்கொண்டவன்.அதிகம்உழட்டிக்கொள்ளாதமனம்,அதிகநம்பிக்கை, அவசரம், துணிச்சல், காதல்,ரசனைஅத்தனையும்ஒருங்கிணைந்துஇயங்கும்சராசரிஇந்தியமனம்.ஷாருக்கானின்அதிஅற்புதஉடல்மொழி,முகமொழிவெளிப்பட்டிருக்கும்படங்களில்நிச்சயமாகதில்சேஇன்றும்முதல்இடத்தில்தான்இருக்கிறது,அப்படியே.மறக்கமுடியாதஇருப்புஷாருக்கினுடையதுதில்சேவில்.தொண்ணுறுகளின்இந்தியஇளைஞனின்மனம்.

மலையகஇருள்என்பதுஅச்சம்தரக்கூடியது.அதிவிஸ்வரூபம்.அதன்அமைதிநம்நரம்புகளைநிம்மதிஅற்றுதுடிக்கவைப்பது.அதுஉள்ளுக்குள்பொதிந்துவைத்திருக்கும்ரகசியங்களின்உயர்மட்டஅழுத்தம்நம்மைமிகபடபடப்புக்குஉள்ளாக்குவது.அமைதிஎன்பதன்வேறுவேறுஅர்த்தங்கள்உணர்த்தக்கூடியது.தில்சேவின்இருள்பகுதிகள்மலையகஇருளைஒத்தது.அதன்மனம்மேக்னாஉடையது.தொட்டால்அபாயங்களுக்குஉங்களைஇட்டுச்செல்லும்அதிசக்திவாய்ந்தமனது.தில்சேவின்இருள்மேக்னாவின்மனம்.அதன்செயல்பாடுகள்.மலையகமனிதரின்தீரஇயலாவலி.ஆவேசம்,இயலாமை.அந்தமனம்அதுகாதல்என்றாலும்,வேறுஎந்தகண்றாவிஎன்றாலும்தன்னைஒரேமாதிரிதான்நிகழ்த்திஅமைகிறது.மேக்னாமாதிரி.இன்றைக்குநம்மால்அதைப்புரிந்துகொள்ளமுடியும்,அருந்திராயில்இருந்துகுறிப்பிடசிலஆளுமைகள்அந்தஇருளுக்குள்நுழைந்துநம்முன்எடுத்துவைக்கும்நிதர்சனங்களால்.எனினும்,தில்சேஅந்தபிரச்னைகுறித்துஅல்ல,அதன்நியாய,அநியாயங்கள்குறித்துஅல்ல,அதன்தீர்வுகுறித்துஅல்ல,அதுஅந்தஇருள்ஆக்ரமித்தமனம்சார்ந்தது.சராசரிவெளிச்சத்துடன்அதுஇடும்முடிவற்றபோராட்டம்குறித்து.மானுடம்என்பதுஅதன்பின்னணிசார்ந்துஎப்படிமாறிஅமையமுடியும்என்கிறயதார்த்தம்குறித்து.

தில்சேவைஇருமனங்களின்போராட்டமாகத்தான்அணுகமுடியும்.அணுகவேண்டும்.பிரச்னைசார்ந்துஅல்ல.பிரச்னைஎன்பதுதான்ஆதி.எனினும்தில்சேஅதன்மனத்தாக்கங்கள்குறித்தசினிமா.இருளும்ஒளியும்மாறிமாறிநிகழும்மனங்களின்போராட்டம்,அதன்காட்சிஉச்சம்தில்சே. உயிரே.தில்சேவில்இயற்கைஎன்பதுஅந்தபோராட்டத்தின்மௌனசாட்சி.நம்மைஅமைதியாகவைத்திருக்கிறதென்றல்போல.தில்சேவின்பயணஅனுபவம்வேறுமாதிரி.எல்லைஅற்றஆச்சர்யங்களும்,அழுத்தங்களும்,திடீர்அருவியைக்கண்டஉற்சாகம்போலசந்தோஷதருணங்களும்,மலைஏறுவதன்வலிபோலஅநாசயஇறுக்கமானதருணங்களும்நிறைந்தது.தில்சேஒருத்ரில்லரைப்போன்றதுறுதுறுகாண்அனுபவம்.

ஒரேஒருகாட்சியைதில்சேவின்படைப்புஉச்சஅனுபவத்திற்குசொல்லிஅமையலாம்,ஏனெனில்அதன்காண்அனுபவம்மறுபார்வையில்இன்னும்அற்புதமானபரவசம்உண்டாக்கக்கூடியது,அதுகண்டு,மனதில்கொள்வதேஅதற்குநாம்தரும்மரியாதைஎன்பதால்.லடாக்நோக்கியஒருபயணம்.அமரும்,மேக்னாவும்.அவர்கள்பயணித்தபேருந்துசெயல்இழக்கிறது.நடந்துசெல்லும்சூழ்நிலை.அவர்கள்பாலைவனம்போன்றபகுதியில்இரவைக்கழிக்கநேர்கிறது.அந்தஇரவு,அமர்மூட்டியகேம்ப்பயரில்வெளிச்சம்கொள்கிறது.பின்னணியில்அந்தவெளிச்சம்.அமருக்கும்,மேக்னாவுக்கும்கிசுகிசுப்பானஒலியில்வாழ்க்கையின்மிகஅற்புதமானமூன்றுஅம்சங்கள்குறித்தஉரையாடல்நிகழ்கிறது.அவர்களின்முகம்நெருங்கிவரும்போது,அந்தபின்னணிஒளிகுறைந்துஇருள்படிக்கிறது.அந்தமுகங்களில்நிகழும்உணர்வுஏற்றஇறக்கங்களைநாம்கவனிக்கஇயலாதபடிக்கு. எனினும்அந்ததருணம்மிகமுக்கியமானது.நாம்காணஇயலாதது.அவர்கள்மறுபடிவிலகிஆசுவாசம்கொள்ளும்போதுவெளிச்சம்அப்புகிறது.நம்மால்அவர்களைத்துல்லியமாகக்காணஇயல்கிறது, ஆனாலும்,அவர்களின்மனஓட்டங்கள்இருளில்ஒளிந்துகொண்டுவிட்டன.

வாழ்க்கைஎன்பதுஇருளும்ஒளியும்மாறிமாறிநிறையும்பயணம்.

ஒளியில்மறைந்தும்,இருளில்ஒளிர்ந்தும்வெளிப்படும்நுட்பமனப்பயணம்.

இருள்என்பதுஇருளும்அல்ல.ஒளிஎன்பதுவெளிச்சமும்அல்ல.

மகாகவிபாரதிசொல்வான்இருள்என்பதுகுறைந்தஒளி.

உயிரே,தில்சேஅப்படித்தான்.

மணிரத்னத்தின்இருள்அனுபவம்கூடகுறைந்தஒளி,அவ்வளவுதான்.

தவிர,மணிரத்னம்இருளின்காதலனும்கூட.

அவரின்பயணங்களும்,பயணங்கள்கடக்கும்இயற்கையும்,மனங்களைக்கடக்கும்அவரின்சினிமாவும்,அவரின்அந்தகாதலுக்குமௌனசாட்சி.

ஒலித்துக்கொண்டேஇருக்கும்இந்தியசினிமாவின்மௌனராகம்மணிரத்னம்.

அதன்,கேட்கப்படாதகானம்தில்சே.உயிரே.

கேளுங்கள்.

-
இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com