சித்திரங்களாய்த் தீட்டபட்ட சிறார்களின் உலகம்

இதமாய் பெய்யும் மழை 5

இரவுக் காகங்களின் பகல் .- கவிதைகள் " க.அம்சப்ரியா. "

ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான படைப்பு வெளியை , படைப்புக்கான ஊற்றுகண்களை தம் வாழ்க்கை சூழலிருந்தே கண்டடைகிறார்கள் . வாழ்வின் நாபிக் கமலங்களிலிருந்து பிரசவிக்கும் தூயக் கவிதைகளே இலக்கிய வெளியில் இனிய இசையைப் பரப்பும் பணியை நிகழ்த்துகின்றன.

கவிஞர் அம்சப்ரியா , ஆசிரியப்பணியில் இருப்பதை தனக்கான அனுகூலமாகவேக் கைகொள்கிறார் , தனது கவிதைகளுக்கானக் கச்சாப் பொருளை தாம் பழகும் சிறார்களின் உலகத்திலிருந்தே எடுத்து கொள்கிறார்.

சிறார்களின் மனவெளி மிகவும் நுண்ணியது , நுட்பமானது , உணர்வு பூர்வமானது அவர்களது உலகில் பெரியவர்கள் என்று சொல்கிறவர்கள் நுழைவதற்கு தகுந்த திறமை , பயிற்சி , பொறுமை வேண்டும்.

சிறார்களின் அக உலகில் கனவுகளை வளர்ப்பதிலும் , பிரம்படியால் அழிப்பதிலும் ' ஆசிரியர் ' களின் பங்கு மிக அதிகம் . ஆசிரியர்கள் என்று சொல்லி கொள்கிறவர்கள் ' இளையோர் உளவியல் ' என்கிற நுட்பத்தை பயின்று வந்தவர்களாம், ஆனால் சேலம் மாவட்டத்து தொடக்கபள்ளி ஒன்றில் தண்ணீர்ப் பானையைத் தீண்டிய தலித் சிறுமியை பார்வையைப் பறித்ததும் அதிகம் படித்த ஆசிரியர் தான்.

அம்சப்ரியா காட்டுமொரு காட்சி ஆசிரியர்கள் எத்தகையவர்கள் என்பதை வாசகனுக்கு சுட்டுகிறது.

" இரண்டு மலைகளுக்கிடையில் ஒரு சூரியனை வரைந்தபோது சூடாய் இருப்பதை உணர்ந்து பதைத்து அருகிலேயே ஆரொன்றையும் இருபக்கமும் தென்னைகளையும் வரைந்து முடித்தபோது வீட்டிலிருக்கிற கூண்டுகிளியை மரத்தில் விடுவதே பொருத்தமென நிமிர்கையில் ஓவிய போட்டிக்கான நேரம் முடிந்ததென பறித்து கொண்டாள் ஆசிரியை "



குழந்தைகள் சிறார்கள் உலகின் மீது ஓர் படையெடுப்பை நிகழ்த்துபவை பாடநூல்கள் எனில் மிகையாகாது . கவிஞர் அப்துல் ரகுமானின் பிரசித்தி பெற்ற கவிதைத் துண்டு இது.

" புத்தகங்களே
குழந்தைகளை
தின்று விடாதீர்கள் "

' அகஸ்தியா என்கிற புனைவின் வழியாக இத்தகையதோர் நிஜத்தைக் கவிதையாய் பதிவு செய்திருக்கிறார் அம்சப்ரியா.


" பள்ளியின் முதல் நாளில்
அம்மா கொடுத்தனுப்பிய
மயிலிறகை
வகுப்பு முடிந்து வெளியேறியபின்
குட்டி போட்டிருக்குமாவென்கிற
பேராசையில் புரட்டதுவங்கினாள்
சிறுமி அகஸ்தியா.
புத்தகங்கலோ
அவளின் மயிற் பீலிகளைத்
தின்று தீர்த்து
பெரும் ஏப்பம் விட்டிருந்தன."

கேள்விகளால் வளர்ந்த சிறுமியின் சந்தேகங்களையும் , அதை எதிர்கொண்ட ஆசிரியர்களின் மனப்போக்கினையும் சரியான அளவில் தொகுத்து குறு நாவலாய் பதிவு செய்த இரா.நடராசனின் ' ஆயிஷா ' குறு நாவல் , கணையாழியில் வெளிவந்தபோதே மிக பரவலாக பேசபட்டது . பின் குறும்படமாகவும் வெற்றி பெற்றது .

சிறார்களின் அக உலகை நுண்ணிய சித்திரங்களாக தீட்டுவதில் பெரும் வெற்றி பெறுபவராக திகழ்வது கவிஞர் அம்சப்ரியா வுக்கு பெருமை சேர்ப்பது . எனினும் பெரும்பாலானக் கவிதைகள் சிறுமிகளின் உலகை மட்டுமே கவனப்படுத்தியிருக்கின்றன . சிறுவர்களின் அக உலகமும் கவிதை களத்துக்குள் வரவேண்டியிருக்கிறது , என்பதை உணராதவரல்ல. எதிர்வரும் படைப்புகளில் அம்சப்ரியா இதையும் தருவார் என நம்புவோம்.



அம்சப்ரியாவின்கவிதைகளுக்குஅடிப்படைநேயம் , அதற்குஆதாரம் , ஆன்மாவின்விழியின்அருகம்புல்நுனிதிறப்பு , எனவேஅவைநிதானமானமத்தியானத்துகாற்றாகவும் , இலைகுலவும்நிலவொளியாகவும் , சுரீரென்றுசுடும்அக்கினிகுஞ்சாகவும்வண்ணக்கற்றைவிரிப்பதில்விந்தையென்னஇருக்கமுடியும்.? "

என்கிறபதிப்புரைசத்தியமானது.

அத்தகையநுண்ணியமனசுவாய்க்கப்பெற்றவர்களால்தான்கீழ்கண்டகாட்சியைகவிதையில்பதிவுசெய்யஇயலும் .

"கரும்பலகையில்
குளமொன்றைவரையதுவங்கினார்.
ஆசிரியர்
தனக்குபிடித்தக்குளத்தில்
எட்டிகுதித்தசிறுமி
ஆசைதீரநீந்திக்களிகலானாள்.
ஒருவானத்தைஉடைத்ததிருப்தியிலும்
நட்சத்திரங்களின்இடையில்பயணித்தலுமாய்
மகிழ்வுபுரண்டோட
பூக்களைபறித்துபறித்து
நீட்டிகொண்டேஇருந்தாள்.
தன்தோழிகளுக்கு
வரைந்துமுடித்துத்திரும்பிய
ஆசிரியரின்முகக்கடுத்தலில்
நினைவுதிரும்பிஅழத்துவங்கினாள்
வற்றதுவங்கியதுகுளம்.

குழந்தைகளின்உலகமும்ஒருநீரோடையை , நதியை , குளத்தைப்போன்றதுதான். அவைவற்றிபோனால்சுற்றியிருக்கிறஉலகம்சூன்யமாகிபோகும்என்பதை "பெரியவர்கள் " கவனத்தில்கொள்ளவேண்டும். என்பதைஉணர்த்துகிறதுஅம்சப்ரியாவின்இரவுகாகங்களின்பகல்.

வெளியீடு :

திரிசக்திபதிப்பகம்

கிரிகுஜாஎன்கிலேவ்
56/21 , முதல்அவென்யூ,சாஸ்திரிநகர்
அடையாறு
சென்னை - 20
தொ:044 42970800 , 244262220

விலைரூ 60/

மதிப்புரை - அன்பாதவன்

அன்பாதவனின்சொந்தஊர்விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரைஎன்றுபரந்துபட்டுஇயங்கும்அன்பாதவனின்எழுத்Ðìகளைசிறுபத்திரிக்கைகளில்அடிக்கடிபார்க்கமுடியும்.அன்பாதவன்மதியழகன்சுப்பையாவோடுஇணைந்து 'அணி' என்கிறகவிதைக்கானசிற்றிதழைநடத்துகிறார்.


திங்கள்தோறும்இரவு - அன்பாதவனின்இதமாய்பெய்யும்மழைஅந்திமழையில்வெளிவரும்....

அன்பாதவனின் ' இதமாய்பெய்யும்மழை ' பற்றியஉங்கள்கருத்துக்களை
content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com