அணி

சிற்றிதழ் அறிமுகம் -45
அணி
Published on

"தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும் முயற்சியில் , மும்பையிலிருந்து தன் தமிழ்ப் பணியைத் தொடங்க 'அணி' தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

கலை மக்களுக்காகவா அன்றி கலைக்காக மட்டுமேவா என்ற விவாதங்களைத் தாண்டி தமிழின் மரபையும் நவீன சிந்தனைப் போக்கையும் இணைக்கும் பாலமாக அணி செயல்பட விரும்புகிறது" எனும் அறிவிப்புடன் மே - ஜீன் 2006 இல் வெளிவந்தது அணி இருமாத இதழ். இவ்விதழின் ஆசிரிய அணியில் அன்பாதவனும் மதியழகன் சுப்பையாவும் செயல்படுகின்றனர்.

கவிதை , மொழிபெயர்ப்பு , ஹைக்கூ , லிமரைக்கூ , சென்ரியு , ஹைபுன் , உரை நடைக் கவிதை , கவிதைக் குறித்த கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் எனக் கவிதையும் கவிதை சார்ந்த படைப்புகளும் இவ்விதழில் இடம்பெறுகின்றன.

கவிஞர் ஆத்மாநாம் ,அன்பாதவன் , இரா.நாகராஜன், புதியமாதவி, நிலாமுகி , விழி.பா.இதயவேந்தன் ,கன்னிக்கோயில் ராஜா, மகேசன் ,சோலை சீனிவாசன், மதியழகன் சுப்பையா , ஜன இளையபிரபு, பொன்குமார்,இரா.ரவி போன்றோரது கவிதைகள் முதல் இதழில் இடம்பெற்Úள்ளன.

"பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்...பேச்சு.முதல்பார்வை...முதல் கழிவு
இவற்றின் பாக்கியத்தை தந்துவிடுமா?
தினாறும் - திர்ஹமும்
கிள்ளச் சொல்லி குழந்தை அழும் சப்தத்தை
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே நாங்கள் அழும் சப்தம்
யாருக்கும் கேட்குமோ?"

ரகசிவ் ஞானியாரின் 'புலம்பெயர்ந்த துயரம் 'எனும் கவிதை தாயகம் பிரிந்து அயல்நாட்டில் துயரப்படுபவர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறது. இது போன்ற சிறந்த கவிதைகள் அணியை வளப்படுத்துவதாக உள்ளன.

"அணி அனைத்துப் படைப்பாளிகளுக்குமான சங்கப்பலகை . தமிழ் இலக்கியத்தின் எந்த அணியையும் சாராத கவிதை வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டது நமது அணி" என்கின்றனர் ஆசிரியர்கள் அன்பாதவனும் மதியழகன் சுப்பையாவும்.

ஆகஸ்டு 03, 2006

அணி
கிழக்குவாசல்
logo
Andhimazhai
www.andhimazhai.com